சென்னை: பா.ஜ., போட்டியிட உள்ள, 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்; அதில் போட்டியிட உள்ள வேட்பாளர் விபரங்கள், சமூக வலைதளங்களில், நேற்று வெளியானது. இது போலியான பட்டியல் என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை, எந்ததெந்த தொகுதிகள்; அவற்றிற்கான வேட்பாளர் யார் என்பதற்கான, உத்தேச பட்டியல் ஒன்று, சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. மயிலாப்பூர் - கே.டி.ராகவன்; காரைக்குடி -எச்.ராஜா; சேப்பாக்கம் திருவல்லிக்கேணி -குஷ்பு; வேளச்சேரி -டால்பின் ஸ்ரீதர்; துறைமுகம்- வினோஜ் பி.செல்வம்; காஞ்சிபுரம் - கேசவன்.திருத்தனி - சக்கரவர்த்தி; பழனி- கார்வேந்தன்; சிதம்பரம் - ஏழுமலை; கிணத்துக்கடவு - அண்ணாமலை ஐ.பி.எஸ்., கோவை தெற்கு - வானதி சீனிவாசன். ராசிபுரம் - எல்.முருகன்; ஆத்துார்- டாக்டர் பிரேம்; திருவாரூர் - கருப்பு முருகானந்தம்; திருவண்ணாமலை - தணிகைவேல்; வேலுார் - கார்த்தியாயினி.

ஓசூர் - நரேந்திரன்; தூத்துக்குடி - சிவமுருக ஆதித்தன்; நெல்லை -நயினார் நாகேந்திரன்; ராஜபாளையம் - நடிகை கவுதமி போட்டியிடுவதாக, உத்தேச பட்டியலில் தகவல்கள் உள்ளன. இந்த பட்டியல் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயண் திருப்பதி கூறுகையில், ''சில, 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில், பா.ஜ., வேட்பாளர்கள் குறித்த, போலி பட்டியல் வலம் வருகிறது. ''அதிகாரப்பூர்வ வேட்பாளர் விபரத்தை வழக்கம் போல, அகில இந்திய தலைமை அறிவிக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE