நீங்கள் சொல்வது, ஐந்தாண்டுகளுக்கு முன்பு. இப்போது, காங்., ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறதே...| Dinamalar

நீங்கள் சொல்வது, ஐந்தாண்டுகளுக்கு முன்பு. இப்போது, காங்., ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறதே...

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (8) | |
கேரளாவில் நடைபெற உள்ள தேர்தல், மதசார்பற்ற தன்மை, வளர்ச்சி, மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களுக்கும், அவற்றை கடுமையாக எதிர்ப்பவர்களுக்கும் இடையேயானது. கேரள மக்கள், இடதுசாரிகளுக்குத் தான் ஆதரவாக உள்ளனர்.- கேரள முதல்வர் பினராயி விஜயன்'நீங்கள் சொல்வது, ஐந்தாண்டுகளுக்கு முந்தி. இப்போது, காங்., ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள முதல்வர்
நீங்கள் சொல்வது, ஐந்தாண்டுகளுக்கு முன்பு. இப்போது, காங்., ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறதே...

கேரளாவில் நடைபெற உள்ள தேர்தல், மதசார்பற்ற தன்மை, வளர்ச்சி, மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களுக்கும், அவற்றை கடுமையாக எதிர்ப்பவர்களுக்கும் இடையேயானது. கேரள மக்கள், இடதுசாரிகளுக்குத் தான் ஆதரவாக உள்ளனர்.


- கேரள முதல்வர் பினராயி விஜயன்


'நீங்கள் சொல்வது, ஐந்தாண்டுகளுக்கு முந்தி. இப்போது, காங்., ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை.கேரளாவில், சில நாட்களுக்கு முன், 22 வயது, ஆர்.எஸ்.எஸ்., இளைஞர் நந்து, பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்; அவரின் நண்பர் கை துண்டிக்கப்பட்டது. நந்துவின் வீட்டுக்குச் சென்று, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அவர்கள் பெயரில், பத்து லட்ச ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ள தகவலை கூறி வந்தேன். கொல்லப்பட்ட நந்து, அவர்களின் ஒரே மகன்.


- பா.ஜ., யுவமோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா


'அரசியல் படுகொலைகள், தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., யுவமோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா அறிக்கை.வரும், சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் உள்ளன. ஒன்று, தமிழகத்தை மீட்க வேண்டும். இரண்டாவது, அண்ணாதுரை பெயரில் உள்ள, அ.தி.மு.க.,வை, அடகு வைக்கப்பட்டதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.


- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'ஏற்கனவே, தி.மு.க., நிறைய பட்டியல் வைத்துள்ளது. நீங்கள் சொல்வதை, ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து சேர்த்துக் கொள்ளும்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.தி.மு.க-., வின் தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. படுதோல்வியை சந்திக்க, அக்கட்சி தயாராகி வருகிறது. அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.


- தமிழக, பா.ஜ., தலைவர் முருகன்


'பழைய பல்லவியை விட்டு, புதிதாக ஏதாவது ஒரு காரணத்தை கூறலாமே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக, பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை.மாமிசம் சாப்பிடுவோரை எனக்கு அறவே பிடிக்காது என சொன்னவர் தான், 'மெட்ரோ' ஸ்ரீதரன். அவர் தான், பா.ஜ.,வின் கேரள முதல்வர் வேட்பாளர். இதன் மூலம், பா.ஜ., மதவாத கட்சி என்பது உறுதியாகியுள்ளது.


- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன்


'மதவாத கட்சி இல்லை என கூறி, உங்களைப் போல, மதத்திற்கு எதிராக பேசி, குழப்பம் விளைவிக்காமல், இப்படியாவது, பா.ஜ., சொல்கிறதே...' என, பதில் கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.தமிழகத்தில் சமூக நீதியை குத்தகைக்கு எடுத்தவர்கள், உதட்டு அளவில்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். சமூக நீதியை பேசியவர்கள் தான், என் தம்பி திருமாவளவனுக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கி உள்ளனர்.


- நடிகர் கமல்ஹாசன்


latest tamil news
'நீங்கள், தம்பி என்றாலும், அண்ணன் என்றாலும், உங்கள் பக்கம் அவர் வர மாட்டார்; தி.மு.க., தான் அவருக்கு தோதான கட்சி...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேச்சு.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற, ஒன்பது பேரில், ஒருவர் மட்டுமே பெண். பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதன் அடிப்படையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.


- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்


'தி.மு.க., எத்தனை இடங்களை கொடுக்கப் போகிறது என்பது தெரியாமல், பெண்களுக்கு இத்தனை இடங்களை கொடுக்க வேண்டும் என்கிறீர்களே; இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி அளிக்கின்றனர் என்றால், எங்கள் கட்சி எந்த அளவுக்கு, மத நல்லிணக்கத்தை பின்பற்றும் கட்சி என்பது புலனாகும்.


- தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு


'அப்படியே, பாபர் மசூதி கட்டுவதற்கும் நிதி அளிக்க, தி.மு.க.,வினருக்கு உத்தரவிடுமா உங்கள் கட்சி...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.கேரளாவில் எதிரி; மேற்கு வங்கத்தில் நட்பு. இது தான், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் உண்மை முகம். இவர்களை புறம் தள்ளி, வளர்ச்சி பாதையில் செல்லும் பிரதமர் மோடிக்கே, மக்கள் ஆதரவாக உள்ளனர்.


- கேரள மாநில, பா.ஜ., பொறுப்பாளர், சி.பி.ராதாகிருஷ்ணன்


'கம்யூனிஸ்ட்கள் கலர் மாறி, ரொம்ப காலமாகுது ஜி...' என, சொல்லத் துாண்டும் வகையில், கேரள மாநில, பா.ஜ., பொறுப்பாளர், சி.பி.ராதாகிருஷ்ணன் அறிக்கை.மக்கள் பணத்தை சுருட்டி, தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில், எடுபிடிகள் மும்முரமாக உள்ளனர். தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு, அரசு கஜானாவில் சேர்ப்பதும்,- கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை.


- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்


'ஏகப்பட்ட முதல் வேலைகளை வைத்துள்ளீர்கள்; அவற்றை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்குமா என பார்ப்போம்...' என, சந்தேகத்துடன் கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.நாடு முழுவதும், பெட்ரோல் பங்க்குகளில், பிரதமர் மோடி படங்களை வைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என கருதாமல், அந்த படங்களை அப்புறப்படுத்தாமல், அப்படியே வைத்துள்ளனர்.


- மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி


'நீங்கள் சொன்ன பிறகு அகற்றாமல் இருப்பரா; அகற்றி விடுவர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேச்சு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X