தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

காங்கிரசுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க.,

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (111)
Share
Advertisement
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முன்வந்ததால்,
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், காங், கூட்டணி,

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முன்வந்ததால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்தது.

இந்நிலையில், இன்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், காங்கிரசுக்கு 25 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், திமுக சார்பில் ஸ்டாலினும், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்து போட்டனர்.

இன்று 25 நாளை 200 அழகிரி சமாளிப்பு! ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்கிறார்


latest tamil news


இதன் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகையில், தொகுதி பங்கீடு மகிழ்ச்சி அளித்துள்ளது. மதசார்பின்மை வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் பாடுபட்டு வருகிறது. மதசார்பற்ற தேரை இழுக்க வேண்டும் என்பதால் ஒன்று சேர்ந்துள்ளோம். இந்தியாவின் மிகப்பெரிய நோயாக பா.ஜ., மாறியுள்ளது. மற்றவர்கள் மீது திணித்து வருகிறார்கள்.

கொரோனாவை விட ஆபத்தான ஆயுதமாக விளங்கி வருகிறார்கள். பல்வேறு கட்சிகளிலும் உட்புகுந்து பலவீனப்படுத்துவது கட்சி மாற வைப்பது, அரசை கவிழ்ப்பது என பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. இதற்கு கவர்னர் அனுப்பப்பட்டார். அவர் அரசின் செயல்களை தடுத்து நிறுத்தினார். இதற்கு மத்திய அரசு உதவி செய்தது. பா.ஜ.,வுக்கு மாற்று கட்சி நாங்கள் தான். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
07-மார்-202123:13:21 IST Report Abuse
unmaitamil முஸ்லீம் லீக், மற்றும் வேறு பல முஸ்லீம் மத கட்சிகள், பல ஜாதி காட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு மத சார்பற்ற கூட்டணி என்று சொல்ல வெட்கமில்லையா இந்த கூட்டத்திற்கு ??? அல்லது இதை கேட்க்கும் மக்கள் மடையர்கள் என்கிற நம்பிக்கையா ??
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-மார்-202120:10:00 IST Report Abuse
Poongavoor Raghupathy காங்கிரஸ் வைகோ திருமாவளவன் முஸ்லீம் லீக் கம்யூனிஸ்ட்ஸ் மார்க்சிஸ்ட் கட்சிகள் திமுகவிற்கு ஒரு சீட்டு கூட சேர்க்கப்போவதில்லை. திமுக நிற்கும் இடங்களில் தொண்ணுறு இடங்களில் ஜெயிக்கவே வாய்ப்பு தெரிகிறது.பிஜேபி நாலு இடங்களிலும் அதிமுக நூற்றி பத்து இடங்களிலும் பாமக எட்டு இடங்களிலும் ஜெயிப்பது தெரிகிறது. ஆதலால் அதிமுக நூற்றி இருபத்தி இரண்டு சீட்டுகலோடு ஆட்சியை பிடிக்க போவது உறுதி. திமுக ஹிந்துக்களின் வாக்கால் ஓசிசின் முஸ்லீம் வாக்காலும் மண்ணை கவ்வுவது நன்கு தெரிகிறது. ஸ்டாலின் எதிர் பெஞ்சில் தான் உட்கார முடியும். எடப்பாடியை கடவுள் முதல் மந்திரி நாற்காலியில் அமர பெவிக்காலுடன் உட்கார வைக்க போகிறார்,
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
07-மார்-202118:12:33 IST Report Abuse
Rajah அதிமுகவுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X