கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியதால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறையாக மொத்தம் ரூ.125 அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த விலையேற்றத்தை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா கூறுகையில், ‛சமையல் காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைக் கண்டித்து பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ள பேரணிக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விலை ஏற்றத்தால் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் சிரமப்பட்டு வருகின்றனர்,' எனக்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE