தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
நாகர்கோவில்: வரும் தேர்தல் மூலம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து
அமித்ஷா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ, பா.ஜ., amitshah, bjp, home minister amit shah, kannyakumari,

நாகர்கோவில்: வரும் தேர்தல் மூலம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம், சுசீந்திரம் வந்த அமித்ஷா, தாணுமாலயசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் அமித்ஷா கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி லோக்சபா தொகுதி மக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என தெரிவித்தார்.


பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு இன்று காலை வந்தார். அங்கிருந்து காரில் சுசீந்திரம் சென்ற அவர், தாணுமாலயசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு, சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக துண்டுபிரசுரங்கள் கொடுத்து ஓட்டு சேகரித்தார். பா.ஜ - அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்; இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றார். கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பொன்ராதாகிருஷ்ணனை மக்கள் வெற்றிபெறச் செய்து பார்லிமென்ட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

latest tamil news
இதனை தொடர்ந்து நாகர்கோவில், ஹிந்து கல்லூரி அருகேயுள்ள நீலவிழி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பொது மக்களிடம், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து, திறந்த வாகனத்தில் சென்று, பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Ganesan - Chennai,இந்தியா
08-மார்-202116:09:58 IST Report Abuse
R.Ganesan Ellamman மற்றும் தமிழன் அவர்களே - உங்கள் கேள்விகளுக்கு இதோ என் பதில்: 1)உங்களை தமிழன் எனும் நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். ஏனெனில் தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு நல்ல மனிதனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் 2) கேந்திரிய வித்யாலயா பள்ளி மத்திய அரசு ஊழியர்கள் transfer காரணமாக ஊர் மாற்றி செல்லும் போது அவர்கள் குழந்தைகளின் தொடர்ச்சியான படிப்புக்காக உண்டாக்கப்பட்ட பள்ளிகள் . எனவே அந்தப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பான்மை விருப்பத்தை பொறுத்தே மொழிக்கல்வி பயிற்றுவிக்கிறார்கள். முன்பும் அப்படியே இப்போதும் அப்படியே. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா மாணவர்களின் விருப்பம் தமிழில்லையென்றால் சமஸ்க்ரிதம் எப்படி பொறுப்பாகும் 3) தமிழக கோயில்களில், பக்தர்கள் வேண்டினால் தமிழுலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. நல்ல சிவாச்சாரியார்கள் சமிஸ்க்ரித மந்திரம் சொல்லி பின் தேவாரம் திருவாசகத்திலிருந்து சிலவற்றை சொல்லும் வழக்கமுடையவர்கள். அக்மார்க் தமிழன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் யாரையாவது திருபுகழ் சொல்லி அர்த்தம் சொல்லச்சொல்லி ஒரு தேர்வு வையுங்களேன். 4) சனாதனம் என்றால் தொன்மையானது என்று பொருள் . அது எந்த ஜாதியையும் குறிப்பிடுவது அன்று. வேதங்கள்,ராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மையான விஷயங்களை உள்ளடக்கிய 5000 வருடங்களுக்கும் முந்தைய பழக்க வழக்கங்களை (இந்து மதம்) சனாதனம் என்று குறிப்பிடுவதில் என்ன தவறு? 5) "அந்த குறிப்பிட்ட சமூகம் மற்ற சமுதாய மக்களை சுரண்ட" - யார் அந்த சமூகம் என்று சொல்லுங்கள். பிராம்மணர்கள் என்பது உங்கள் விடையானால், உங்கள் கருத்தையும் பிரசுரிக்கும் தினமலரே நீங்கள் நினைப்பது தவறு என்பதை உறுதி செய்கிறது. ஒரு காலத்தில் மளிகை கடையென்றால் அது நாடார்களின் ராஜ்யமாக இருந்தது. நகை தொழில் மற்றொரு சமூகம் . தங்கள் பலம் , பலவீனம் அறிந்து ஒரு சமூகம் ஒரு வழியை தேர்தெடுத்தால் அது தவறா? அவ்வாறே பிராமண சமூகமும் சில வழிகளை தேர்ந்தெடுத்தது. இது எப்படி சுரண்டல் மற்றும் ஆதிக்கம் ஆகும். அவர்கள் யார் வாழ்வையும் கெடுக்கவில்லை என்பதற்கு வீரமணியும், அன்பழகனும், கிருஷ்ணசாமியும் தங்களுக்கு உதவிய ப்ராம்மணர்களைப்பற்றி கூறியிருக்கிறார்கள்: அதை படியுங்கள். நன்றி.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
08-மார்-202105:17:31 IST Report Abuse
Sankar Ramu மத அரசியல் செய்யும் திமுக வை தோற்கடிக்க வேண்டும். எம் மதமும் சேர்ந்து வாழும் தமிழகத்தில் பாஜக ஆதிமுக வெற்றிபெற வேண்டும்.
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
07-மார்-202123:03:44 IST Report Abuse
Venkataramanan Thiru தமிழகத்தில் , வோட் எந்திரங்களும் , எலேக்ஷன் அலுவர்களும் சரியாக இருந்தால் அப்படி ஒன்றும் மாற்றம் இருக்காது..தீ.மு.க , காங்கிரஸ் தான வெற்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X