புதுடில்லி: 14வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என்றும், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பிளே ஆப் போட்டிகள் மற்றும் மே 30ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, ஆமதாபாத் என மொத்தம் 6 மைதானங்களில் 56 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மைதானத்திலும் தலா 10 போட்டிகள் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE