கமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோல்கட்டா: மாநிலம் வளர்ச்சிக்காக, மக்கள் மம்தாவை நம்பியிருந்தனர். ஆனால், மக்கள் முதுகில் குத்திவிட்டார் என்றும் மாநிலத்தில் வளர்ச்சிக்கு எதிரான சதி நடக்கிறது என்றும் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். கோல்கட்டாவில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: வளர்ச்சியை திரிணமுல்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, modi, narendramodi,மோடி, நரேந்திர மோடி, பிரதமர் மோடி

கோல்கட்டா: மாநிலம் வளர்ச்சிக்காக, மக்கள் மம்தாவை நம்பியிருந்தனர். ஆனால், மக்கள் முதுகில் குத்திவிட்டார் என்றும் மாநிலத்தில் வளர்ச்சிக்கு எதிரான சதி நடக்கிறது என்றும் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

கோல்கட்டாவில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
வளர்ச்சியை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வளர்ச்சி நோக்கி நகர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பா.ஜ.,வும் சிறந்த நிர்வாகமும் தான் மே.வங்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கு முன்னர், இது போன்ற கூட்டத்தினர் மத்தியில் பேசியது இல்லை.

மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு மம்தாவை மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், மம்தா முதுகில் குத்திவிட்டார்.மாநில மக்கள் மீது மம்தாவின் ஆட்கள் அடக்குமுறையை ஏவிவிட்டனர். ஆனால், அவர்களால், மாநிலத்தின் நம்பிக்கையை புதைக்க முடியவில்லை. வளர்ச்சி, அமைதியையே மே.வங்கம் விரும்புகிறது.பா.ஜ.,விற்கு ஆசி வழங்க மக்கள் விரும்புகின்றனர். இது வரை எந்த அரசும் செய்யாததை நாங்கள் செய்து முடிப்போம். மாநில வளர்ச்சிக்கு சிலர் தடையாக உள்ளனர். மம்தா கமிஷன் அரசாங்கம் நடத்தி வருகிறார்.
லட்சகணக்கானோருடன் பா.ஜ., தொடர்பில் உள்ளது.மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் ஆகும்.இந்த மண்ணின் மைந்தன் மிதுன் சக்ரவர்த்தி நம்முடன் உள்ளார்.


latest tamil news
இந்த தேர்தலில்,திரிணமுல், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை உள்ளன. அவர்கள் மாநில விரோத போக்கு கொண்டவர்கள். இந்த கட்சிகள் மாநில வளர்ச்சியை விரும்பவில்லை. ஆனால் மக்கள் வளர்ச்சியை நோக்கி காத்திருக்கின்றனர் . தேர்தல் முடிவுகள் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.உங்கள் மனதை வெல்ல நாங்கள் கடுமையாக உழைப்போம். மாநில வளர்ச்சி, அதிக முதலீடு, மாநிலத்தின் கலாசாரத்திற்கு பாதுகாப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என உறுதி அளிக்கவே இங்கு வந்துள்ளேன்.
இந்த தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். அனைத்து துறைகளிலும் மாநிலம் வளர்ச்சி பெறும்.மே.வங்க மக்கள். உங்களை அக்கா என அழைத்தனர். ஆனால், நீங்கள் உங்களது உறவினருக்கு மட்டும் அத்தையாக உள்ளீர்கள். இதனை தான் உங்களிடம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாநிலத்தில் பெண்கள், மூதாட்டிகள் தாக்கப்படுவது குறித்து நீங்கள் அறிவீர்கள். சமீபத்தில், 80 வயது மூதாட்டி தாக்கப்பட்டதன், மூலம் உங்களின் உண்மை முகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.

மம்தா, உங்களது ஸ்கூட்டி பவானிபூர் செல்லாமல் நந்திகிராம் சென்றீர்கள். யாரும் காயப்படுவதை நான் விரும்பவில்லை. உங்களது ஸ்கூட்டி, செல்ல வேண்டிய இடம் செல்லாமல், கீழே விழுந்தால் என்ன செய்வீர்கள். நந்திகிராமில் மம்தா தோல்வி அடைய போகிறார்.

நான் எனது நண்பர்களுக்காக உழைப்பதாக என்னை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். நாம், இளமை காலத்தில் நமது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து வளர்ந்துள்ளோம். நான் வறுமையில் வளர்ந்தவன். வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். இதனால், நாட்டின் ஒவ்வொரு மூளையிலும் வசிக்கும் ஏழை மக்களின் பிரச்னைகள் குறித்து எனக்கு தெரியும். அவர்களுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது. விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆளுங்கட்சியினர், ஏராளமான முறைகேடுகளை செய்ததுடன், மக்களின் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். புயல் நிவாரணத்திற்காக அனுப்பிய பணத்தை கூட கொள்ளையடித்து உள்ளனர். ஏராளமான ஊழல் செய்துள்ளனர்கள். மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தையும் அவர்களின் வாழ்க்கையுடனும் நீங்கள் விளையாடி உள்ளீர்கள்.

மம்தாவை எனக்கு நீண்ட காலமாக தெரியும். இடதுசாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மம்தா, தற்போது இல்லை. தற் போது வேறு ஒருவரின் குரலில் பேசி வருகிறார். வளர்ச்சிக்கு பதில், மாநிலத்தை தனிமைபடுத்திவிட்டீர்கள். இதனால், மாநிலத்தில் தாமரை மலரும். மதத்தின் பெயரால், நீங்கள் மக்களை பிரித்துள்ளீர்கள். இதனால், இங்குபா.ஜ., ஆட்சி மலர்வது உறுதி.

பயமின்றி பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள். மோசமான நிர்வாகத்திற்கு எதிராக ஓட்டளியுங்கள். பயம், ஊழல் ராஜ்ஜியத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து, பயத்தில் இருந்து மாநிலத்தை விடுவியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
08-மார்-202107:07:14 IST Report Abuse
Raman இதுவரை நாட்டுக்கு எதாவது செய்திருக்கின்றீரா? அதை பற்றி பேசலாமே? எதுக்கு அடுத்த கட்சியை பற்றி எப்ப பாரு பேச வேண்டும்?
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
08-மார்-202107:04:54 IST Report Abuse
Arachi இவர் நாட்டையே பண முதலைகளிடம் அடமானம் வைத்து விட்டாரே சும்மா நடிக்கக்கூடாது. இவர் பணக்காரர்களின் நண்பர் விவசாயிகளின்/ஏழைகளின் நண்பரல்ல
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மார்-202122:00:58 IST Report Abuse
தல புராணம் அது கமிஷன் அரசுன்னா, மிரட்டி தேர்தல் நிதி பத்திரமும் , பிதுக்கி பிஎம் கேர்ஸ் ரகசிய நிதியும், கூடவே சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை இவனுகளை வெச்சி மெரட்டி கட்சி தாவ வெச்சி பாசி-ச பாஜக நடத்துறது? மக்களை கொடுமைப் படுத்துறது? அடக்குமுறையை ஏவி விடுறது? இரக்கமில்லா அரக்க ஆட்சியல்லவா 😡
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X