இம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவக்கம்: ஜோ பைடன்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்: இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது. கொரோனாவால் ஏராளமான அமெரிக்கர்களும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க
US, Senate Passes, Joe Biden, COVID-19, Relief Plan

வாஷிங்டன்: இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது. கொரோனாவால் ஏராளமான அமெரிக்கர்களும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டுவந்தார். இதற்கான கொரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news


1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த நிவாரண மசோதா குறித்து ஜோ பைடன் கூறுகையில், ‛இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள். திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மார்-202108:49:07 IST Report Abuse
தல புராணம் முதல் தவணையாக குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும் $1200 போன வருடம் வழங்கப்பட்டது.. பிறகு இந்த வருட ஆரம்பத்தில் $600 குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும். மூன்றாவது தவணையாக $1400 குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும். வெறும் 6000 கொடுத்துட்டு விவசாயி வருமானம் ரெட்டிப்பாயிடிச்சின்னுட்டு கொள்முதல் விலைக்கு இருந்த உத்தரவாதத்தை அம்பானிக்கு வித்த கொடுங்கோல ஆட்சி அங்கில்லை.. இரண்டாவது தேவையாக 1.9 டிரில்லியன் டாலர்கள்.. சிறு குறு வணிகர்களுக்காக.. அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த. தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்.. அனைவருக்கும்.. கொரோனா பரிசோதனை இலவசம்.. கமிஷன் கல்லா கட்டி வசூல் பண்ணமுடியாது அங்கே.. ஆனால் இங்கே? இங்கே இருக்கும் கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் கண்டது என்ன ? கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் கொள்ளை.. தடுப்பூசிக்கு பணம்.. பெட்ரோல் விலை கழுத்தை நெறிக்க, டோல்கேட் வசூல் கோடானுகோடிகளில் ரத்தத்தை உறிஞ்சும் வகையில்.. விவசாயி 100 நாளுக்கும் மேலாக தனது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கேட்டு போராடுகிறான்.. ஆனால் அவர்களை ஆதரித்தால் கூட அடக்குமுறையை ஏவும் பா-சிச நாடாக இந்தியாவை மாற்றிய பெருமை, இந்த மோடி கூட்டத்தை சேரும்.
Rate this:
Cancel
07-மார்-202123:05:54 IST Report Abuse
ஆப்பு டரம்பு முன்னாடி ஒரு 1200 டாலர் குடுத்தாரு. இப்போ ஒரு 1400 டாலர். தவிர வேலை பறிபோன அத்தனை பேருக்கும் சம்பளம் குடுக்க கம்பெனிகளுக்கு வாரி குடுத்தாங்க. 15 லட்சம் வரைக்கும் இருக்கும். இங்கே மாதிரி இல்லை.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
07-மார்-202122:56:14 IST Report Abuse
Sundararaman Iyer இந்த டாலர் நோட்டுக்கள் சிவகாசியில் அச்சடிக்கப்படும். இதற்கான காகிதங்களை இந்திய ரிசர்வ் பேங்க் கொடுக்கும் - இந்த காகிதம் மதிப்பிழந்த ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து மறுசுழற்சி செய்யப்பட்டவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X