ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து கவனிக்கும் ஜப்பான்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
டோக்கியோ: சீனா ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதனை ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு தற்போது கூர்ந்து கவனித்து வருகிறது. நேற்று சீன பார்லிமென்ட் கூடியது. இதில் 14வது ஐந்தாண்டுத் திட்டம் சீன கம்யூனிச அரசால் அமல்படுத்தப்பட்டது. தெற்கு ஆசியாவை நோக்கி திபெத் வழியாக ரயில் தடம் அமைக்கும் மசோதா முதல் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.பாதுகாப்பு அமைச்சகத்துக்கு
Japan, Closely Monitor, China, Increased, Defense, Spending, ராணுவம், அதிக நிதி, சீனா, ஜப்பான்

டோக்கியோ: சீனா ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதனை ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு தற்போது கூர்ந்து கவனித்து வருகிறது.

நேற்று சீன பார்லிமென்ட் கூடியது. இதில் 14வது ஐந்தாண்டுத் திட்டம் சீன கம்யூனிச அரசால் அமல்படுத்தப்பட்டது. தெற்கு ஆசியாவை நோக்கி திபெத் வழியாக ரயில் தடம் அமைக்கும் மசோதா முதல் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சீனா கூடுதலாக 6.8 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி 29 பில்லியன் டாலர் ஆகியது.

அதிக ராணுவ வீரர்களைக்கொண்ட உலகின் சக்திவாய்ந்த ராணுவம் என்ற பெயரைப் பெற்றுள்ள சீனா, 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சமடைய செய்துள்ளது. சீனாவின் இந்த செயலை ஜப்பான் கூர்ந்து கவனித்து வருகிறது.


latest tamil news


உலகிலேயே சக்திவாய்ந்த கப்பல் படையாக சீன கப்பல் படை விளங்கும் நிலையில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் கூடுதலான தாக்குதல் உபகரணங்கள், ரேடார் கருவிகள் உள்ளிட்டவற்றை சீனா உற்பத்தி செய்யும். இதனால் அண்டை நாடுகளுக்கு அவ்வப்போது தொடர் அச்சுறுத்தல் ஏற்படும் என்று ஜப்பான் அரசு கருதுகிறது.

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் சென்காகோ தீவு விவகாரத்தில் அடிக்கடி மோதல் உண்டாகிறது. இந்தத் தீவு தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த தீவில் சீன ராணுவத்தினர் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில் சீன ராணுவத்தின் பலம் அதிகரித்தால் இந்த தீவை சீனா முழுவதுமாக ஆக்கிரமிக்கும் வாய்ப்புள்ளது.


latest tamil news


வரலாற்றுப் பூர்வமாகவும் இந்த தீவு ஜப்பானுக்கு சொந்தம் என்று ஜப்பான் அரசு கூறிவருகிறது. இதுகுறித்து ஜப்பானும் அமெரிக்காவும் முன்னதாக கலந்து ஆலோசித்தன. அத்துமீறி தாக்குதல் நடத்துவதை சீனா பல ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அண்டை நாடுகளுடன் சீன கப்பற்படை மற்றும் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது. இதற்கு சீன தேசிய காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளது. தற்போது ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் சீனா இந்த தீவு விவகாரத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்த வாய்ப்பு அதிகம் என ஜப்பான் கருதுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
08-மார்-202105:50:01 IST Report Abuse
SUBBU @மலரின் மகள் comment superb.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-மார்-202119:45:23 IST Report Abuse
மலரின் மகள் அதிக எண்ணிக்கையிலான சிப்பந்திகளை கொண்ட ராணுவம் என்று சொல்லலாம். மிகவும் பலம் வாய்ந்தது என்றும், உலகின் கடற்படையில் மிகவும் பலமானது என்றும் சொல்வதற்கில்லை. தாக்கும் திறனும் ராணுவ தாக்குதலில் வெற்றி பெரும் திறனும் படைத்ததா சீன ராணுவம். வியட்நாமில் தோல்வி, கோரிய தீபகற்பத்தில் தோல்வி மற்றும் கூட்டுப்படையாக சென்றவிடங்களில் பயங்கரவாதிகளிடம் மாட்டி கொண்ட வீரர்களை இந்திய ராணுவம் மீட்ட சம்பவங்கள் என்று பல உள்ளது. உலகை மிரட்டுவதற்கு அவர்கள் பல பத்திரிகையாளராகளுக்கு கட்டுரையாளர்களுக்கு பத்திரிக்கை நிறுவங்கினாளுக்கு பணம் தாராளமாக லஞ்சம் போன்ற வகையில் தந்து அவர்களுக்கு ஆதரவாகவும் சீன ராணுவம் உலகின் மிக பலம் பொருந்தியது என்று மக்கள் கருதும் படியும் மிகவும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களை மிரட்டும் வகையிலுமே இதுவரை செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். கூட்டமாக வந்து ஓரிடத்தில் டென்ட் அடித்து தங்குவதுவதும் பிரச்சினை தருவதும் வாடிக்கை. எதிர்த்தால் அழுவதும் பதறுவதும் ராணுவத்தின் வாடிக்கை. எதிரிகளுடன் சண்டையிடும் திறனற்றவர்கள் அதே நேரம் திரும்பி சென்றால் கம்யூனிச அரசு அவர்களை கொன்று விடும் அல்லது சித்திரவதைக்குள்ளாக்கும் என்று அஞ்சும் ராணுவ வீரர்கள். எல்லையில் அவர்கள் கூட்டமாக வந்து டென்ட் அடித்து தங்கும்போது ராணுவத்தாக்குதல் செய்து அவர்களை எங்களிடம் சரணடைந்து விடுங்கள் உங்களை மீண்டும் உங்கள் நாட்டிற்குள் விரட்டி அடிக்கமாட்டோம், இங்கு உங்களுக்கு கூலி வேலை தருகிறோம் என்று அறிவித்து பாருங்கள் வேகமாக சமாதான கொடியுடன் ஓடி வந்து விடுவார்கள் வெட்டி வேலை செய்வதற்கு கூட. அதுதான் அவர்கள் ராணுவம். ஆகையால் தான் அனைத்தையும் தானியங்கியாக செய்யவேண்டும் என்று முயர்ந்து அதிலும் தோல்வி அடைகிறார்கள். மிக குறைந்த விலையில் பல்வேறு பொருட்கள் பல நாடுகளுக்கும் தேவை படுகிறது. அதற்காக சீனாவை தான் நம்பி இருக்கவேண்டி இருக்கிறது. அதை தவிர்த்தால் பல தேசங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிவிடும். விலை வாசி கட்டுக்கடங்காமல் சென்று விடும் என்ற அச்சம். மாற்று ஏற்பாடுகள் செய்து விட்ட பிறகே சீனர்களை ஒதுக்க முடியும் என்றும் அதற்கு உடனடி தீர்வு இல்லாததால் பல தேசங்கள் தயக்கம் காட்டுகின்றன. இந்திய போன்ற தேசங்கள் சீனாவிற்கு மாற்றாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறினால் பல தேசங்கள் சீனாவை ஒதுக்கி விட்டு விடும்.
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
07-மார்-202120:47:08 IST Report Abuse
RajanRajanTHE BACK-UP IS VERY NICE TO UNDERSTAND........
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
07-மார்-202121:56:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANமோடியின் தலைமையின் கீழ் அதை இந்தியா விரைவில் செய்து முடிக்கும்...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மார்-202109:05:24 IST Report Abuse
தல புராணம்//. இந்திய போன்ற தேசங்கள் சீனாவிற்கு மாற்றாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறினால்/ கோமியம் நாட்டில் இது நடக்குமா ??...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மார்-202109:09:28 IST Report Abuse
தல புராணம்எல்லா மதங்களையும் சீனாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்தார் மா ட்ஸே துங். நாடு முன்னேற துவங்கியது. இன்றைய சீனனிடம் மதம் என்றால் என்னவென்று கேட்டால் - உழைப்பு, பணம், குடும்பம், முன்னேற்றம் - என்று பதில் சொல்வான். ஆனால் இங்கே? மதம் என்ற விஷவிதையை விதைத்து, அதை ஆலகால விஷவிருட்சமாக்கி அதை வைத்து ஆட்சியை பிடித்து, பணக்காரர்களுக்கு மட்டுமே உழைக்கும் இந்த ஆட்சியால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.....
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
09-மார்-202115:32:17 IST Report Abuse
ShivRam ShivShyamமதம் சீனாவில் இல்லை என யார் சொன்னது.. புத்த மதம்..அது மட்டுமே...மற்றவர்கள் அதன் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இருக்கலாம்.. தோல தோல புராணம், உன்ன மாதிரி இப்படி கருத்து போட்டாலும் வேரோடு இல்லை தலையோடு பிடுங்கி எரிந்து விடுவார்கள் சீனாவில்.. செல்கிறாயா? சீனாவில் தான் பணக்காரனுக்காக உழைக்கிறார்கள்.. உனக்கெல்லாம் புரியவே புரியாது முரசொலி படிக்கும் வரை...
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
07-மார்-202118:02:58 IST Report Abuse
jagan கூந்தல் உள்ளவ அல்ளி முடியுறா
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
07-மார்-202121:24:00 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஉன் பக்கத்து வீட்டுக்காரன் ஆயுதம் சேர்க்கும்போது எச்சரிக்கை ஆகமாட்டியா ? இதையே பேசுவியா ?...
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
09-மார்-202115:33:20 IST Report Abuse
ShivRam ShivShyamஅவர் கருத்த பார்த்த பக்கத்துக்கு வீட்டுக்காரன் பாக்கல .. பக்கத்துக்கு வீட்டுகாரிய தான் பாத்து கிட்டு இருக்கார் போல .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X