பொது செய்தி

இந்தியா

முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கருத்தால் பரபரப்பு

Updated : மார் 09, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி:'முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என்பதை காட்டுவதற்காக, ஹிந்து அமைப்புகள் கூறும் கட்டுக்கதைகளை முறியடிக்கும் நேரம் வந்துவிட்டது' என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், எஸ்.ஒய்.குரேஷி, தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி எழுதியுள்ள புதிய புத்தகம், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
SY Quraishi, Muslims, Hindutva, தேர்தல் ஆணையர், குரேஷி

புதுடில்லி:'முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என்பதை காட்டுவதற்காக, ஹிந்து அமைப்புகள் கூறும் கட்டுக்கதைகளை முறியடிக்கும் நேரம் வந்துவிட்டது' என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், எஸ்.ஒய்.குரேஷி, தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி எழுதியுள்ள புதிய புத்தகம், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது: முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பொய்க் கதைகள், தகவல்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகின்றன. ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்தியாவை முஸ்லிம் நாடாக்கும் வகையில், தங்கள் மக்கள் தொகையை, முஸ்லிம்கள் அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மக்கள் தொகையை உயர்த்துவதற்காக, பலதார முறையை, முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகின்றனர். கடந்த, 1931 முதல், 1960 வரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, அனைத்து சமூக மக்களிடையேயும், பலதார முறை இருந்தது. ஆனால், அது படிப்படியாக குறைந்துள்ளது. முஸ்லிம்களிடையே இது மிகக் குறைவாக உள்ளது. நாட்டில், 1,000 ஆண்களுக்கு, 924 பெண்கள் இருக்கும்போது, எப்படி பல தார முறைக்கு சாத்தியம் உள்ளது. இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு முறைக்கு எதிரானது என்றும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

டந்த, 70 ஆண்டுகளில், ஹிந்துக்களின் மக்கள் தொகை, 84.1 சதவீதத்தில் இருந்து, 79.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில், முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து, இந்தியாவை முஸ்லிம் நாடாக்குவர் என்கின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. அதுபோன்று திட்டமிட்டு எதுவும் செய்யப்படுவதில்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்து மக்களிடையே ஒரு பயத்தையும், பீதியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில், இது போன்ற பொய் பிரசாரம் நீண்டகாலமாக திட்ட மிட்டு நடந்து வருகிறது. அதை முறியடிப்பதற்கான நேரம் தற்போது வந்துள்ளது.இவ்வாறு, அவர் அதில் எழுதியுள்ளார். குரேஷியின் இந்த கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-மார்-202123:02:30 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\.............. முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பொய்க் கதைகள், தகவல்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகின்றன..................முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்து மக்களிடையே ஒரு பயத்தையும், பீதியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில், இது போன்ற பொய் பிரசாரம் நீண்டகாலமாக திட்ட மிட்டு நடந்து வருகிறது. அதை முறியடிப்பதற்கான நேரம் தற்போது வந்துள்ளது............... \\........ குரேஷி குறிப்பிட்டு சொன்ன இந்த கருத்திலே, "முஸ்லிம்கள்" என்ற வார்த்தைக்கு பதிலா "பாஜக" என்றும், "ஹிந்துக்கள்" என்ற வார்த்தைக்கு பதிலா "முஸ்லிம்கள்" என்றும் மாற்றிப் போட்டு படித்தால் தற்போதைய நிலை விளங்கும் .... அதற்கு காரணம் எந்தெந்த அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் என்பதும் விளங்கும் ............
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
08-மார்-202122:23:35 IST Report Abuse
Thirumurugan சரியான கருத்து தான். சக மனிதனை மனிதனாக பார்க்காமல் சாதியாக மதமாக பார்ப்பது தான் தவறு. தென் இந்தியாவில் அரசாங்க விழிப்புணர்வு பிரச்சாரத்தால் மக்கள் தொகை கட்டுப்படுத்த பட்டது. ஆனால் வடஇந்தியாவில் அது நடக்க வில்லை. திரு லாலு அவர்களுக்கு 9 குழந்தைகள். அவர் என்ன இஸ்லாமியரா?
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்அந்த அம்மா தலைப்பு பிள்ளை சித்தி ஒன்பதாவது பிள்ளை என் கொள்ளு தாத்தா பாட்டிக்கு ஏழு ஆண்பிள்ளைகளும் ஐந்து பெண் பிள்ளைகளும் (மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள்) இருந்தார்கள் குடும்ப கட்டுப் பாடு திட்டத்தை திராவிஷக் கட்சிகள் முனைந்து தீவிரமாக செயல் படுத்தியதால் தமிழ்நாடு ஜனத்தொகை கட்டுப் படுத்தப் பட்டது அதனால் விளைந்த பயன் மத்திய பொருளாதார உதவிகள் பாதிக்குமேல் குறைந்தது சோகம்...
Rate this:
Cancel
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
08-மார்-202118:38:34 IST Report Abuse
KALIHT LURA புத்தகத்தில் எழுதுவதற்கு வேறு நல்ல விஷயங்களே இல்லையா இவருக்கு.. இது போன்ற தற்குறிகளுக்கு உயர்ந்த பதவிகள் தருவது நல்லதல்ல.ஷபானா அஸ்மி, ஹமீத் அன்சாரி கிரிக்கட் அசாருதீன் போன்றவர்களின் வரிசையில் இவரையும் சேர்த்து விடலாம். பெரும் பதவியும் போன பிறகு புலம்பல் தான்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X