'புத்தகம் தான் காந்திக்கு அகிம்சையை கற்பித்தது'

Added : மார் 07, 2021 | |
Advertisement
சென்னை:''புத்தகம் தான், காந்தியடிகளுக்கு அகிம்சையைக் கற்பித்தது,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா பேசினார்.மணிமேகலை பிரசுரம் சார்பில், 44 நுால்களின் வெளியீட்டு விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதான புத்தகக் காட்சி அரங்கில், நடந்தது. நுால்களை வெளியிட்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா பேசியதாவது:'காந்தியடிகளின் சுயசரிதை, 18வது பகுதியில், அவரை மாற்றிய
 'புத்தகம் தான் காந்திக்கு அகிம்சையை கற்பித்தது'

சென்னை:''புத்தகம் தான், காந்தியடிகளுக்கு அகிம்சையைக் கற்பித்தது,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா பேசினார்.

மணிமேகலை பிரசுரம் சார்பில், 44 நுால்களின் வெளியீட்டு விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதான புத்தகக் காட்சி அரங்கில், நடந்தது. நுால்களை வெளியிட்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா பேசியதாவது:

'காந்தியடிகளின் சுயசரிதை, 18வது பகுதியில், அவரை மாற்றிய புத்தகம் பற்றிய செய்தி உள்ளது. அதாவது, காந்தி லண்டனில் படித்து, குஜராத்தின், போர்பந்தரில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின், தென் ஆப்ரிக்கா சென்றார்.அங்கு, ஜோகனஸ்பர்க்கில் இருந்து, டர்பனுக்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவருடன் வர வேண்டிய நண்பர் போலக், கடைசி நேரத்தில் தன் இயலாமையைத் தெரிவித்தார்; 'ஜான் ரஸ்கின் எழுதிய, 'அன்டூ திஸ் லாஸ்ட்' எனும் புத்தகத்தை படித்துச் சென்றால், 24 மணி நேர பயணத்தைக் கழித்து விடலாம்' என்றார்.

காந்தி, உணவு, உறக்கம் மறந்து, அந்த நுாலைப் படித்தார். அந்த நுாலில், பிறப்பால் யாரும் உயர்வு தாழ்வு இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டு, நம் நாட்டிற்கு வந்து, பீனிக்ஸ் நகரத்தை உருவாக்கி, புரட்சி செய்தார்.பின், அதேபோல முனைப்புடன், லியோ டால்ஸ்டாய் எழுதிய, 'தி கிங்டம் இஸ் காட் வித்தின் யு' என்ற நுாலை படித்தார். பின், நுாலாசிரியருக்கு, 'நான் வன்முறையில் நாட்டமுள்ளவனாக இருந்தேன்; உங்களின் நுால், என்னை அகிம்சைவாதியாக்கி விட்டது' என, கடிதம் எழுதினார்.

இதற்கு, 'நான், தமிழில் உள்ள திருக்குறளின் பொருளைத் தான், அந்த நுாலில் விரிவாக எழுதினேன்' என, பதில் கடிதம் எழுதினார் ஆசிரியர். காந்தியடிகள் உருவாக நுால்கள் இருந்தது போல, நுாலாசிரியர்கள், பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நுாலாசிரியர்கள், சிறப்பு விருந்தினர்களை வரவேற்று, மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் லேனா தமிழ்வாணன் பேசுகையில், ''நாங்கள், பிரபலமானவர்களின் புத்தகங்களை பதிப்பிப்பதற்குப் பதில், புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.''அவர்களின் படைப்புகளையும், அவர்களையும் பிரபலமடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறோம்,'' என்றார்.

நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., கலை கலாசாரப் பிரிவு பொறுப்பாளர் காயத்ரி ரகுராம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X