துணி கடைக்கு தீ வைத்த ஐவர் கைது

Added : மார் 07, 2021
Share
Advertisement
சூளைமேடு, : வாடகை தகராறில் துணிக்கடைக்கு தீ வைத்து எரித்த வழக்கில், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடுகின்றனர். சூளைமேடு, நீலகண்டன் தெருவைச் சேர்ந்த பெட்ராம் ஸ்வாரிஸ், 53, சவுராஷ்டிரா நகர், 1வது தெருவில் வாடகைக்கு கடை எடுத்து, துணி வியாபாரம் செய்கிறார்.இரு மாதங்களுக்கு முன் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து

சூளைமேடு, : வாடகை தகராறில் துணிக்கடைக்கு தீ வைத்து எரித்த வழக்கில், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடுகின்றனர்.

சூளைமேடு, நீலகண்டன் தெருவைச் சேர்ந்த பெட்ராம் ஸ்வாரிஸ், 53, சவுராஷ்டிரா நகர், 1வது தெருவில் வாடகைக்கு கடை எடுத்து, துணி வியாபாரம் செய்கிறார்.இரு மாதங்களுக்கு முன் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. தீ விபத்திற்கு கடை உரிமையாளர் சாகுல் அமீதின் மகன் நிஜாம் தான் காரணம் என, பெட்ராம் ஸ்வாரிஸ் சூளைமேடு போலீசில் புகாரளித்தார்.விசாரணையில், வாடகை தகராறில் நிஜாம் தன் நண்பர்கள் உதவியுடன் கடையை தீயிட்டு எரித்தது தெரிந்தது.

நேற்று, சம்பவத்தில் தொடர்புடைய ராஜேஷ், 31, ஆனந்தன், 31, ராமராஜ், 31, பாலாஜி, 31, சந்துரு, 21, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். தலைமறைவான, கடையின் உரிமையாளர் நிஜாம், ராம்கி ஆகியோரை சூளைமேடு போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X