மின்சாரத்தை துண்டிப்பேன்; திரிணமுல் காங்., அமைச்சர் வாக்காளர்களுக்கு மிரட்டல்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா: ''மேற்கு வங்கத்தில், எனக்கு ஓட்டளிக்காதவர்கள் வசிக்கும் பகுதிகளில், மின்சாரம், குடிநீர் சேவை துண்டிக் கப்படும்,'' என, தேர்தல் பிரசார மேடையில், திரிணமுல் காங்., அமைச்சர் தபன்தாஸ் குப்தா, வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநில சட்டசபை தேர்தல், ஏப்., 27

கோல்கட்டா: ''மேற்கு வங்கத்தில், எனக்கு ஓட்டளிக்காதவர்கள் வசிக்கும் பகுதிகளில், மின்சாரம், குடிநீர் சேவை துண்டிக் கப்படும்,'' என, தேர்தல் பிரசார மேடையில், திரிணமுல் காங்., அமைச்சர் தபன்தாஸ் குப்தா, வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.



latest tamil news


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநில சட்டசபை தேர்தல், ஏப்., 27 முதல், எட்டு கட்டங்களாக நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக, திரிணமுல் காங்கிரஸ், தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளது.

இரு தரப்பினரும் பிரசாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.மேற்கு வங்க மாநில வேளாண் துறை அமைச்சர் தபன்தாஸ் குப்தா, கடந்த இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற சப்தாகிராம் தொகுதியிலேயே, மீண்டும் போட்டியிடுகிறார்.இந்நிலையில், ஹுக்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவரது பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


'எனக்கு ஓட்டு போடாதவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, குடிநீர் மற்றும் மின் வினியோகம் துண்டிக்கப்படும். அவற்றை, பா.ஜ.,விடம் கேட்டு, அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்,'' என, அமைச்சர் தபன்தாஸ் குப்தா கூறியுள்ளார்.தேர்தல் பிரசார மேடையில், மாநில அமைச்சர் ஒருவர், பகிரங்கமாக வாக்காளர்களை மிரட்டியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
08-மார்-202111:16:28 IST Report Abuse
sankaseshan ஸ்வர்ணக்காவின் ஆட்சியில் வெஸ்ட்பேங் கால் வேஸ்ட் பெங்கால் ஆக மாறிவிட்டது .
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-202117:21:09 IST Report Abuse
Endrum Indianவேஸ்ட் பெங்கால் வொர்ஸ்ட் பெங்கால்...
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
08-மார்-202110:14:16 IST Report Abuse
Amirthalingam Shanmugam பா.ஜா.கா. அப்படி பேசும் அளவுக்கு தொல்லை கொடுத்ததா? அல்லது அப்படி பேசும்படி தொல்லை கொடுத்ததா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-மார்-202108:59:41 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இதுதான் west bengal...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X