டில்லி உஷ்!

Added : மார் 08, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., பாடல்தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார், பிரதமர் மோடி. தமிழக வாக்காளர்களைக் கவர, புதிய திட்டங்களையும் தயார் செய்துள்ளார்.அடுத்த முறை, தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல் ஒன்றை, தமிழிலேயே பாடத் திட்டமிட்டுள்ளார்.இதற்காக, எம்.ஜி.ஆர்.-, - ஜெயலலிதா இணைந்து நடித்த, ஒரு படத்தின் பாடலை, மோடி, தேர்வு
 டில்லி உஷ்!

எம்.ஜி.ஆர்., பாடல்

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார், பிரதமர் மோடி. தமிழக வாக்காளர்களைக் கவர, புதிய திட்டங்களையும் தயார் செய்துள்ளார்.அடுத்த முறை, தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல் ஒன்றை, தமிழிலேயே பாடத் திட்டமிட்டுள்ளார்.இதற்காக, எம்.ஜி.ஆர்.-, - ஜெயலலிதா இணைந்து நடித்த, ஒரு படத்தின் பாடலை, மோடி, தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென தனி நேரம் ஒதுக்கி, அந்த பாடலை படித்து, மனப்பாடம் செய்து வருகிறார்.

புதுச்சேரியில் சறுக்கிய பா.ஜ.,

காங்கிரசின் கோட்டையாக விளங்கும், புதுச்சேரியை கைப்பற்ற வேண்டும் என்பது தான், அமித் ஷாவின் அதிரடி திட்டம். இதற்காகவே, சமீபத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, பா.ஜ., தன் பக்கம் இழுத்தது.ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியால், அமித் ஷாவின் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வின் திட்டங்களை நிறைவேற்றும் விஷயத்தில், பிடி கொடுக்காமல் இருக்கிறார் ரங்கசாமி.

ஏற்கனவே, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என, அறிவித்து, கடைசியில், அந்த கட்சியை கழற்றிவிட்டவர் தான், ரங்கசாமி. இப்போது அவர், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. 'அமித் ஷாவின் திட்டம், புதுச்சேரியில் பலிக்காது' என்கின்றனர், தி.மு.க., தலைவர்கள். ஆனாலும், தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வின் அதிரடி ஆட்டம் துவங்கும் என்கின்றன, அரசியல் வட்டாரங்கள்.
ரகசிய அறிக்கை

தமிழகம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, ஒரு ரகசிய அறிக்கையை தயார் செய்துள்ளார். இந்த அறிக்கையில், தி.மு.க., தலைவர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள் மீதான வழக்குகள், ஊழல்கள் என, அனைத்து விஷயங்களும் இடம் பெற்றுள்ளன.இந்த அறிக்கையை, தமிழக, பா.ஜ., பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார் அமித் ஷா. தமிழக தேர்தலில், பா.ஜ.,வின் பிரசாரம், இந்த அறிக்கை அடிப்படையிலேயே இருக்கும் என்கின்றனர்.

மற்றொரு ரகசிய அறிக்கையும் தயார் செய்யப்பட்டு, அது, முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், மஹாராஷ்டிரா முழுதும் மின்சாரம் தடைபட்டது.மின்சாரத் துறையின் இணையதளம், 'ஹேக்' செய்யப்பட்டதால் தான், இந்த தடை ஏற்பட்டது என, சொல்லப்பட்டது. இதேபோல தமிழகத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது.குறிப்பாக, கூடங்குளம், அணு மின் நிலைய இணையதளத்தை, 'ஹேக்' செய்ய, சீனாவிலிருந்து முயற்சி நடக்கலாம் என, அமித் ஷா, முதல்வருக்கு சொல்லியுள்ளார். எனவே, முன் எச்சரிக்கையுடன் செயல்படும்படி, முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்கா அதிருப்தி

கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில், பிரியங்கா போட்டியிட வேண்டும் என, விருப்ப மனு அளித்து உள்ளார், சிவகங்கை எம்.பி., கார்த்தி.இந்த விவகாரம், டில்லி காங்., வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பிரியங்கா கவனம் செலுத்தி வருகிறார்; அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், தேவையில்லாமல், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடும்படி, அவருக்காக, கார்த்தி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது, பிரியங்கா உள்ளிட்ட, காங்., மேலிட தலைவர்களிடையே, எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.கார்த்திக்கும், அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்துக்கும், கட்சியில் தற்போது பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இழந்த செல்வாக்கை மீட்பதற்காக, இது போன்ற வேலைகளில் கார்த்தி ஈடுபடுவதாக, கட்சியினர் கடுப்படிக்கின்றனர்.

பி.கே., மீது கோபம்

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசுக்கும், தமிழகத்தில், தி.மு.க.,வுக்கும், தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். இந்த மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.இதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுக்க வேண்டிய நேரத்தில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பணியை ஏற்றுள்ளார், பி.கே., எனப்படும், பிரசாந்த் கிஷோர். இதனால், திரிணமுல் மற்றும் தி.மு.க., வினர், பிரசாந்த் கிஷோர் மீது, கடும் கோபத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X