மதுரை மதுரை நகரில் குற்றவாளிகளை கையாளும்போது என்னென்ன பின்பற்ற வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சில நாட்களுக்கு முன் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி ஒருவரின் முகத்தாடை எலும்பு உடைந்தது. இதுதொடர்பாக எஸ்.ஐ., 'சஸ்பென்ட்' செய்யப்பட்டார். பைகாராவில் ஒரு வீட்டில் நகைகள் கொள்ளை போயின. இதுதொடர்பாக சந்தேகப்பட்டு விசாரிக்கப்பட்ட திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் போலீஸ் 'டார்ச்சர்' தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.இதுபோன்று சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க போலீசாருக்கு உயர் அதிகாரிகள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே ஸ்டேஷனிற்குள் அழைத்து வரவேண்டும். அதுவும் அவசியம் இருந்தால் மட்டுமே அழைத்து வரவேண்டும். சாதாரண புகார் என்றால் ஸ்டேஷன் வரவேற்பறையில் அமர வைத்து விசாரிக்க வேண்டும். யார் யார் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர் என்ற விபரத்தை உயர் அதிகாரிகளுக்கும், கன்ட்ரோல் ரூமிற்கும் தெரிவிக்க வேண்டும்.போதையில் இருந்தாலோ, தள்ளாடும் நிலையில் இருந்தாலோ ஸ்டேஷனிற்கு அழைத்து வரவேண்டாம். பெயர், விபரங்களை குறித்துக்கொண்டு மறுநாள் ஸ்டேஷனிற்கு வரச்சொல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE