அரசியல் செய்தி

தமிழ்நாடு

ம.நீ.ம., யாருடைய ஓட்டுக்களை பிரிக்கும்?

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
தேர்தல் குறித்து நிலவும், பலவித குழப்பங்கள் இடையே ஒன்று தெளிவாக புலனாகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள் இடையேயான பலப்பரிட்சையாகவே இருக்கும். அத்துடன், நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் அமைக்கும் கூட்டணியும் களமிறங்கும்.இந்தக் கூட்டணியில், ம.நீ.ம.,வுடன், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போன்றவையும், சில தன்னார்வ நிறுவனங்களும்
Kamal, Kamal Haasan, MNM, Makkal Needhi Maiam

தேர்தல் குறித்து நிலவும், பலவித குழப்பங்கள் இடையே ஒன்று தெளிவாக புலனாகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள் இடையேயான பலப்பரிட்சையாகவே இருக்கும். அத்துடன், நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் அமைக்கும் கூட்டணியும் களமிறங்கும்.

இந்தக் கூட்டணியில், ம.நீ.ம.,வுடன், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போன்றவையும், சில தன்னார்வ நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ம.நீ.ம., இதுவரை, 2019 லோக்சபா தேர்தலையும், அதனுடன் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலையும் எதிர்கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில், 36 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், 19 தொகுதிகளில், 25 ஆயிரம் ஓட்டுக்களுக்கும் குறைவாகவே பெற்றது.

வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதுார், கோவை என, நான்கு தொகுதிகளில் மட்டும், தலா ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுக்களை பெற்றது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில், ம.நீ.ம.,வுக்கு, மக்கள் பெருமளவு ஓட்டளிக்கவில்லை. உதாரணமாக, சென்னைக்கு அருகேஉள்ள பூந்தமல்லி சட்டசபை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் பெற்ற ஓட்டுகள், 11ஆயிரம். வெற்றி பெற்ற தி.மு.க., பெற்ற ஓட்டுக்கள், 1.36 லட்சம்.

மக்கள் நீதி மய்யம், பெருநகரங்களில் மட்டும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்று, அரசியல் நோக்கர்கள் சொல்வார்கள். நகரம், கிராமம் என்ற அடிப்படையில் பார்க்காமல், இன்னும் கூர்ந்து பார்த்தால், ஓரளவிற்கு வசதியுள்ள, மேல் நடுத்தர மக்களின் ஆதரவையே, ம.நீ.ம., அதிகம் பெற்றுள்ளது என்பதை உணர முடியும். இவையெல்லாம், ரொம்பப் பழைய கணக்குகள் இல்லை. 2019 மே மாதம் நடந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் தகவல்கள்.

இப்போது கட்சி வலுப் பெற்றிருப்பதாக, மக்கள் நீதி மய்யத்தினர் கூறுகின்றனர்; வளர்ந்திருக்கலாம். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என, சொல்வதற்கில்லை. ம.நீ.ம., ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை; சில இடங்களில் அது ஓட்டுகளைப் பிரிக்கக் கூடும். யாருக்கு ஆதரவான ஓட்டுகளை?'பழி போடவும் மாட்டோம், பழி வாங்கவும் மாட்டோம்' என்பது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளில் ஒன்று. அதனால், அந்தக் கட்சியின் பிரசாரம், எவரையும் தாக்குவதாக இருக்காது. எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதிலாக, தமிழகத்திற்குத் தேவையான, ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைப்பதாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.


latest tamil newsஆனால், கமலின் பிரசாரம் அவ்விதம் அமையவில்லை. பிரசாரத்தில் அவர் முன்னிறுத்தி பேசி வரும் ஒரு விஷயம் ஊழல். அதிலும் கூட, அ.தி.மு.க., அரசையும், அமைச்சர்களையும் மட்டுமே விமர்சித்து வருகிறார். தி.மு.க., தலைவர்கள், 24 பேர், ஊழல் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருவதாக முதல்வர் பழனிசாமி., தெரிவித்திருந்தார். ஆனாலும், தி.மு.க.,வை குறிப்பிட்டு, கமல் எதுவும் பேசவில்லை. அ.தி.மு.க.,வை கடுமையாக சாடிய கமல், குடும்ப ஆட்சியையோ, தி.மு.க.,வையோ பற்றி, முணுமுணுக்கக் கூட இல்லை.

தன் மக்கள் நீதி மய்யமும், ஒரு திராவிட கட்சி தான் என்று, சொல்லியிருப்பதன் வாயிலாக, தேசிய கட்சிகளுக்கு ஆதரவான ஓட்டுக்களை, கமல் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது. அவரது கூட்டணியில், தேசியக் கட்சி எதுவும் இடம் பெறவும் இல்லை. அ.தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுகளையே, அவர் குறி வைக்கிறார்.

ம.நீ.ம., என்ற ஒன்று, களத்தில் இல்லை என்றால், அந்த ஓட்டுகள் தி.மு.க.,விற்கு செல்லும் வாய்ப்பு உடையவை. அதாவது, தி.மு.க.,விற்கு ஆதரவாக விழும் சாத்தியம் உடைய ஓட்டுக்களையே அவர் பிரிக்கிறார். கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியும் இதையே செய்தது. இம்முறை என்னாகும்?

- மாலன், எழுத்தாளர்

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-202117:32:01 IST Report Abuse
Malick Raja முதலில் யார் இவருக்கு ஓட்டுப்போடுவர் என்பதை அறிந்த பின் சொல்லலாம்
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
08-மார்-202122:50:08 IST Report Abuse
அப்பாவி யாரு யாருடையா ஓட்டுக்களை பிரித்தாளும் கட்சிக்கு வாய்ப்பு இல்ல.
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
08-மார்-202119:52:44 IST Report Abuse
Devanand Louis மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு - கட்டுமான பொருட்களின் விலையேற்றம் மிகவும் ஜோராக செல்கிறது தமிழ்நாட்டில் ,சிமெண்ட் மூடையின் விலை கிடுகிடு உயர்வு இயம்பது ரூபாய் ஒரு மூடை ,மணல் ஜல்லியின் விளையும் கிடுகிடு உயர்வு ஆயிரம்ரூபாய் உயர்வு ,இந்த விலை உயர்வுகளை அவர் அவர்கள் உயர்திக்கொள்கிறார்கள் ,மத்திய மாநில அரசுகள் இந்த உயர்விற்கு என்னபதில்சொல்லப்போகிறது . விலை உயர்விற்கு கட்டுப்படுத்த வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
09-மார்-202100:01:27 IST Report Abuse
தல புராணம்ஒனக்கு ஒன் பிரச்சினை.....
Rate this:
karutthu - nainital,இந்தியா
09-மார்-202117:31:56 IST Report Abuse
karutthuஇதுல உனக்கென கவலை ? அவனவனுக்கு ஆயிரம் பிரச்னை ....அவனவன் தானே சமாளித்தாகணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X