அரசியல் செய்தி

தமிழ்நாடு

2வது வேட்பாளர் பட்டியல் அ.தி.மு.க., இன்று வெளியீடு?

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : அ.தி.மு.க.,வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல், இன்று(மார்ச் 8) வெளியாக வாய்ப்புள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.மா.கா., போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், பா.ம.க.,வுக்கு, 23; பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன், தொகுதி பங்கீடு பேச்சு நடந்து வருகிறது.சிறிய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கி, அதன் வேட்பாளர்கள் இரட்டை
AIADMK, TN election 2021, candidates, ADMK

சென்னை : அ.தி.மு.க.,வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல், இன்று(மார்ச் 8) வெளியாக வாய்ப்புள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.மா.கா., போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், பா.ம.க.,வுக்கு, 23; பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன், தொகுதி பங்கீடு பேச்சு நடந்து வருகிறது.

சிறிய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கி, அதன் வேட்பாளர்கள் இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பளிக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இன்று கூட்டணி முடிவாகி, ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம், வெளியாக வாய்ப்புள்ளது.


latest tamil news



அ.தி.மு.க., சார்பில், இம்மாதம் 5ம் தேதி, முதல் கட்டமாக, ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை கட்சி தலைமை இறுதி செய்துள்ளது. எனவே, அ.தி.மு.க., வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல், இன்று வெளியாக வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் இடம்பெறும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
08-மார்-202114:12:03 IST Report Abuse
Arachi சில்பேருக்கு நினைப்புதான் புழைப்பைக் கெடுக்கும்.
Rate this:
Cancel
234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
08-மார்-202112:23:14 IST Report Abuse
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம் ரூபாய் 100 மதிப்புள்ள பொருளை ரூபாய் 300 விலையில் வாங்கி மக்களுக்கு இலவசம் என்ற போர்வையில் அரசாங்க கருவூலத்தை காலி செய்வதைவிட தகுதி மற்றும் தேவை இருப்பவர்களுக்கு ரூபாய் 1000 பணமாக. வழங்குவது நல்லது.
Rate this:
08-மார்-202115:41:20 IST Report Abuse
பேசும் தமிழன் மனைவிக்கு மட்டுமா.... இல்லை இணைவி, துணைவி, நான்காவது சேர்ப்புக்கும்..... கொடுப்பீர்கள்???...
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
08-மார்-202110:47:24 IST Report Abuse
Arachi எத்தனை பட்டியல் போட்டாலும் இந்தமுறை இந்த அடிமைகளுக்கு பட்டை நாமம்தான். இன்னொரு முறை எடப்பாடி ஆட்சியா நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. மக்களின் முடிவு வேறு மாதிரி இருக்கும். சர்வாதிகார வேரோடு அறுக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X