இலங்கையில் பா.ஜ., துவக்கம்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில், பா.ஜ., கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், ''இந்தியாவில் உள்ள, பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என, அக்கட்சியின் தலைவர் முத்துசாமி கூறியுள்ளார்.இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும், பா.ஜ., ஆட்சி அமைய, உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக, திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார்
Srilanka, BJP, Party, இலங்கை, பாஜக, கட்சி

கொழும்பு: இலங்கையில், பா.ஜ., கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், ''இந்தியாவில் உள்ள, பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என, அக்கட்சியின் தலைவர் முத்துசாமி கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும், பா.ஜ., ஆட்சி அமைய, உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக, திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ், சமீபத்தில் கூறினார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கையில், இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், புதிய கட்சி துவக்கப்பட்டுள்ளது, இது குறித்து, இக்கட்சியின் தலைவர், வி.முத்துசாமி, யாழ்ப்பாணத்தில் கூறியதாவது: இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற, புதிய அரசியல் கட்சியை துவக்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


latest tamil newsஇலங்கையில் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி, பல கட்சிகள் உள்ளன. இருந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை, அக்கட்சிகள் புறந்தள்ளிவிடுகின்றன. தமிழர்களின் நலனுக்காகவே, இலங்கை பா.ஜ., கட்சியை துவக்கியுள்ளோம்.ஆனால், எங்களுக்கும், இந்தியாவில் உள்ள, பா.ஜ.,வுக்கும், எந்த தொடர்பும் இல்லை. தமிழர்களுக்கான கல்வி, பொருளாதார மேம்பாடு, விளையாட்டு, கலாசார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.இலங்கை பா.ஜ., செயலராக, எம்.இந்திரஜித், பொருளாளராக, திலான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
08-மார்-202121:34:32 IST Report Abuse
balakrishnan இந்தியா உலகின் குருவாக வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
08-மார்-202118:33:04 IST Report Abuse
Rasheel அங்கு உள்ள தமிழர்கள் ஒரு பக்கம் சிங்களர்களாலும் மறுபக்கம் அரேபிய பாலைவன மதத்தினராலும் மிகவும் துன்பப்படுகின்றனர். இதற்கு தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வியாதிகள் எவனும் குரல் கொடுப்பதாக தெரியவில்லை.
Rate this:
Cancel
08-மார்-202117:21:04 IST Report Abuse
சம்பத் குமார் 1). பாரதீய ஜனதா தற்பொழுது உலகிலேயே மிகப் பெரிய உறுப்பினர்கள் கொண்ட கட்சியாகும்.2). தற்பொழுது அதன் கிளையை என்பதைவிட BJPயின் சித்தாந்தம் உடன் நெருங்கிய தொடர்புடைய இன்னொரு கட்சியை ஏற்படுத்த கூடிய தாய் கலகமாக உரு பெற்று இருக்கிறது. இலங்கையில் நாம் கண்கூடாக இதனை காண்கின்றோம்.3). கூடியவிரைவில் பாகிஸ்தானில் BJP சிந்தாந்தை ஒத்த PMBJP- Pakistan Muslim Bharatiya Janata party என்ற தொடங்படலாம். வானில் விடிவெள்ளி தெரிகிறது. சாத்தியம்தான்.4). பாகிஸ்தான் பாரதத்தின் ஒரு பகுதி என்பதால் பெயருக்கும் பிரச்சினை வராது.5). கம்யூனிஸ்ட் கட்சியை அடுத்து வரும் காலத்தில் BJP எல்லா நாடுகளிம் கிளை அலுவலகம் ஆரம்பிக்கலாம்.6). BJPயின் கொள்கை எளிது. ராமர் வழியை பின்பற்றி மனிதாபிமானம் மற்றும் அன்பை வளர்த்தல். கிருஷ்ணர் வழியில் தருமத்தை நிலை நிறுத்துவது. பஞ்ச பாண்டவர்கள் வழியில் துஷ்டர்களை ஒழித்தல். சத்ரபதி சிவாஜி வழியில் நாட்டுப்பற்றுடன் வாழ்தல். காந்தியடிகள் வழியில் அகிம்சை போதிப்பது. எல்லா மக்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும் என்பதால் உலகில் எல்லோரும் BJPயை விரும்புவர். நன்றி ஐயா
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)ஆக பாரதத்தை நாசமாக்கியது போதாதுன்னு, உலகத்தையே நாசமாக்க புறப்பட்டுட்டீங்க.........
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)உலகம் மொத்தமா அழிஞ்சி மறுபடி உருப்பெறும்..........அழிவை துவக்க ஒரு ......வேண்டுமல்லவா.......
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
08-மார்-202119:20:32 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்:: உங்க கட்கரியே நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லி விட்டோம் என்று ஒரு பெட்டியில் சொன்னாரே / ஆண்டு க்கு 2 கோடி பெருக்கு வேலை என்று சொன்னாரே என்ன ஆச்சு / பெட்ரோல் விலை குறைப்பேன் என்கிறாரே என்ன ஆச்சு......
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-மார்-202119:52:54 IST Report Abuse
Sanny இலங்கையில் முன்னமே காங்கிரஸ் கட்சி என்று இரண்டு கட்சிகள் காங்கிரஸ் பெயரில் இருக்கு, இருந்தும் என்ன பிரயோசனம், அடுத்து அண்ணா திமுகவா?...
Rate this:
08-மார்-202119:58:06 IST Report Abuse
chandran, pudhucherry டீம்கா சொடல கூட உன் காங்கிரஸ் ஐ மதிக்கல ராசவேலு. பிஜேபியின் உலகளாவிய வளர்ச்சி தவிர்க்கமுடியாதது. இந்தியர்களுக்கு பெருமை சேர்ப்பது...
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
08-மார்-202121:44:23 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் வாதி உள்ளூரில் ஓணான் பிடிக்க சொல்லு அப்புறம் அசலூரில் பாம்பு பிடிப்பை / அங்கு petrol 50 தான் மகராஜன் பொய் அதை 100 ஆகிடாத...
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)பெருமையா? சிறுமையா? காலம் பதில் சொல்லும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X