பொது செய்தி

தமிழ்நாடு

"உங்க கட்சித்தலைவர் ராகுல் ஏன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பிரசாரம் செய்கிறார் ?

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால், தமிழக மக்களுக்குப் புரியாத ஹிந்தியில் தான், பா.ஜ.,வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. பா.ஜ.,வின் ஹிந்தி திணிப்புக்கு வேட்பாளர் பட்டியல் கூட விதிவிலக்கு கிடையாது.- காங்., - எம்.பி., ஜோதிமணி'தமிழகத்தில் தமிழில் தான், இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்தன... உங்க கட்சித் தலைவர் ராகுல் ஏன் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பிரசாரம்
பேச்சு_பேட்டி_அறிக்கை, காங்கிரஸ், ஜோதிமணி

உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால், தமிழக மக்களுக்குப் புரியாத ஹிந்தியில் தான், பா.ஜ.,வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. பா.ஜ.,வின் ஹிந்தி திணிப்புக்கு வேட்பாளர் பட்டியல் கூட விதிவிலக்கு கிடையாது.
- காங்., - எம்.பி., ஜோதிமணி


'தமிழகத்தில் தமிழில் தான், இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்தன... உங்க கட்சித் தலைவர் ராகுல் ஏன் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பிரசாரம் செய்கிறார்... முழுக்க முழுக்க தமிழில் பேசச் சொல்ல வேண்டியது தானே...' என, வயிறு குலுங்கச் சிரிக்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை



மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர்- கமல்ஹாசன். எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு... கொள்கையே இல்லாத கட்சிக்கும், கூட்டணிக்கும், ஆட்சி அமைக்க மக்கள் அனுமதி தருவாங்களாம். பேராசை யாரை விட்டது!
- அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்


'இப்படித் தானே, நிறைய பேர், தேர்தலில் போட்டியிட்டு, பணத்தையும், நேரத்தையும் வீணாக்குகின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அறிக்கை



குஜராத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் பெயரை, பிரதமர் மோடி பெயரில் மாற்றியுள்ளனர். ஆனால், ஆமதாபாத் எனப்படும் அஹமதாபாத்தின் பெயரை இன்னமும் ஏன் மாற்றாமல் வைத்துள்ளனர்?
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி


'நல்ல ஐடியாவாக இருக்கிறதே... காங்கிரஸ், கம்யூ.,க்கள் எதிர்க்கும் என, பிரதமர் மோடி யோசிக்கிறாரோ...' என, சந்தேகமாக கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி அறிக்கை



latest tamil news



கண் இருந்தால், கண்ணீர் வரத் தான் செய்யும்.
- தமிழக காங்., தலைவர் அழகிரி


'கண்ணீர் விட்டு தொகுதிகளை வாங்குவதற்குப் பதில், தனித்து போட்டியிட வேண்டியது தானே... ' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி



கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆன போது, அதன் செயல்பாடு குறித்து சந்தேகம் கிளப்பிய, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
- பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'எல்லாம் உதார் விடத் தான் செய்வர்; அப்போது தானே, குழப்ப அரசியல் செய்ய முடியும்... 'ஆதரவுக்கு கூட்டணி கட்சிகள் வராததால், ஊசி போட்டுக் கொண்டேன்' என்ற, அவரின், 'மைண்ட் வாய்ஸ்' கேட்கவில்லையா...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை



பா.ஜ.,வின் சித்து விளையாட்டால், சசிகலாவை அரசியலில் இருந்து ஒதுங்க வைத்துள்ளது. அது, எதிர் விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். ஆரியம் வீழும்; திராவிடம் வெல்லும்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'சசிகலா ஒதுங்கியதற்கும், ஆரியம் தான் காரணமா; அருமையான கண்டுபிடிப்பாக இருக்கிறதே; இன்னும் எத்தனை காலம் தான், இப்படி பிரிவினை பேசுவீர்களோ...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-மார்-202120:51:54 IST Report Abuse
Ganesan Madurai திருட்டு திராவிட களவாணிகளா மொதல்ல "2 ஏக்கர்" வாக்குறுதி எங்க போச்சு? கட்கரி சொன்ன மாதிரி பல திட்டங்களை தொடங்கி 2 கோடி பேருக்கும் மேலேயே வேலை கொடுத்துள்ளார். ஒண்ணரை லட்சம் தமிழர்களை படு கொலை செஞ்ச திருட்டு திராவிட களவாணி காண்டு காந்தி காந்தி கட்சிகளுக்கு சொம்படிப்பவனுகளுக்கு மனசாட்சி இல்லாம மோதி பத்தி பொய்களை எழுவது பெரிய காரியமல்ல.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
08-மார்-202121:30:29 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்உழைச்சி சாப்பிட பாருடா எவனோ 2 ஏக்கர் தருவானா , TV தருவானா என்று வையை பிளக்காதே உழைத்து குடும்பத்தை கவனி ,...
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
08-மார்-202117:56:53 IST Report Abuse
Mayavan Mayavan "வீரமணி" கொரோனாவுக்கு ஊசி போட்டு கொண்டதால் இன்றுமுதல் "ஊசி மணி" என்றழைக்கப்படுவார்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-மார்-202117:05:24 IST Report Abuse
J.V. Iyer அஹமதாபாத்தின் பெயரை சீக்கிரம் மாற்றுங்கள் தலைவா அடுத்தது ஹைதராபாத்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X