கொரோனா ஒழிப்பில் இறுதிக்கட்டத்தில் உள்ள இந்தியா: ஹர்ஷ்வர்தன்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், முழு வெற்றி காண மூன்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: பிற நாடுகளைப் போல் இல்லாமல், நமது நாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் சீராக உள்ளது.
India, Endgame, Pandemic, Health Minister, Harshvardhan, கொரோனா, வைரஸ், இறுதிக்கட்டம், சுகாதாரத்துறை, அமைச்சர், ஹர்ஷ்வர்தன்

புதுடில்லி: கொரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், முழு வெற்றி காண மூன்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: பிற நாடுகளைப் போல் இல்லாமல், நமது நாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் சீராக உள்ளது. ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகளின்படி, உலகின் பிற நாடுகளில் புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் மிகக்குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.


latest tamil news


ஏழை, வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகத்துக்கே ஒரு மருந்தகமாகத் திகழ்கிறது. 62 நாடுகளுக்கு 5.52 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கியிருக்கிறது. உலகமே மருத்துவ நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் உறுதியாக இருந்தார். கொரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக் கட்டத்தில் உள்ளது.


latest tamil news


இப்போது இதில் நாம் முழு வெற்றி காண மூன்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக கொரோனா தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக கொரோனா தடுப்பூசி பின்னால் உள்ள அறிவியலை நம்ப வேண்டும். மூன்றாவதாக, நாமும் நமக்கு நெருக்கமானவர்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
08-மார்-202121:12:54 IST Report Abuse
sankaseshan Kundalakesi do you know our vaccine are supplied to latin American countries and African countries . Canada is not supplying .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-மார்-202121:09:30 IST Report Abuse
sankaseshan குண்டுசட்டியில் குதிரை ஒட்டுறவங்களுக்கு மற்றஉலக நாடுகளில் நடப்பது தெரியுமா ? எனது மகனுடன் பேசினேன் சற்றுமுன்பு ,பாரிஸில் இருக்கிறான் . தடுப்பூசி விநியோகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் பெல்ஜியம் மற்றநாடுகளுக்கும் கொடுத்தது supply தாமதஸ்தால் பிராணநாடுகள் வாங்க மறுத்ததால் பெல்ஜியத்தில் மருந்து தேங்கியுள்ள ந அங்கே லட்சணம் அப்படி நம்மூரு ஆளுங்க கிண்டலடிக்கிறான் . அரசு நன்றாக பணியாற்றுகிறது ,z4/ ,5 மாதங்களில் 20 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் சும்மா வேலை வெட்டியில்லாமல் அலப்பறை பண்ணாதீங்க .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-மார்-202121:08:35 IST Report Abuse
Ramesh Sargam எங்க சார், இன்னும் senior citizen களுக்கே முழுமையாக வாக்சின் போடப்படவில்லை. நானும் நான்கு நாட்களாக CoWIN மூலம் வாக்சினுக்கு பதிவு செய்யமுயன்று தோற்றுப்போகிறேன். நீங்கள் என்னடாவென்றால் கொரோனா ஒழிப்பில் இந்தியா இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று கூறுகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X