விருப்பமில்லாத தொகுதியில் வாய்ப்பு; அதிருப்தியால் திரிணமுல் வேட்பாளர் மாற்றம்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூன்றே நாட்களில் பெண் வேட்பாளர் ஒருவர் அதிருப்தியில் இருந்ததால், அவருக்கு பதிலாக வேறு வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முதல்கட்ட தேர்தல் இம்மாத இறுதியில் துவங்குகிறது. இதற்காக ஆளும் திரிணமுல் காங்.,
TMC, Replaces, Habibpur Candidate, WestBengal,

கோல்கட்டா: மேற்குவங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூன்றே நாட்களில் பெண் வேட்பாளர் ஒருவர் அதிருப்தியில் இருந்ததால், அவருக்கு பதிலாக வேறு வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முதல்கட்ட தேர்தல் இம்மாத இறுதியில் துவங்குகிறது. இதற்காக ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் தங்கள் சார்பில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில், வேட்பாளர்கள் அறிவித்த மூன்றே நாளில் திரிணமுல் காங்., கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


சமீபகாலமாக திரிணமுல் காங்.,கில் இருந்து சில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியமானார்கள். இது மம்தா தலைமையிலான திரிணமுல் காங்.,கிற்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அணி மாறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள ஹபிபூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரளா முர்மு, மால்டா தொகுதியில் போட்டியிடுவதில் தான் ஆர்வமாக இருந்துள்ளார்.

ஆனால், ஹபிபூர் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டதால் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சரளா, அக்கட்சியில் இருந்து விலகி இன்று (மார்ச் 08) பா.ஜ.,வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஹபிபூர் தொகுதியில் சரளா முர்முக்கு பதிலாக பிரதீப் பாஸ்கி மாற்றப்பட்டுள்ளதாக திரிணமுல் காங்., அறிவித்துள்ளது. மேலும், உடல்நலக் காரணங்களால் சரளா முர்மு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
08-மார்-202121:28:03 IST Report Abuse
அறவோன் இவளுக்கு உடல் நிறைய உபாதைகள் இருக்கிறது, ஓடியாடி எதுவும் செய்ய முடியாது 👎 அதான் சீட்டை திரும்ப வாங்கிவிட்டார்கள் 👏
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
08-மார்-202120:39:45 IST Report Abuse
Ramaraj P மோடிக்கு மாற்றுத் தலைவர் இவர் தான் என்று கடந்த 7-ஆண்டுகளில் சொன்ன அனைவருமே பூஜ்யம் ஆகிவிட்டனர். மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் லிஸ்ட்டில் உள்ளனர். இந்த தேர்தலில் ஒருவரின் பலம் தெரிந்து விடும்.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஒருத்தர் போட்டியிட தயங்கினா மம்தா சண்டப்பிரசண்டமா இருக்கவே இருக்கார் இன்னொருத்தர்னு போடறாரே அது அதுதான் மம்தா அவர் மகத்தான வெற்றி பெற்று ஓகோன்னு ஆட்சியை பிடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X