அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வின் திட்டங்களை புதிதாக அறிவித்த ஸ்டாலின்: எல்.முருகன்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
சென்னை: பா.ஜ., அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை புதியது போல் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006ல் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா? பெண்களுக்கான நகைக்கடன் ரத்து என 2019 லோக்சபா தேர்தலில் ஸ்டாலின்
BJP, Murugan, Stalin, பாஜக, முருகன், ஸ்டாலின்

சென்னை: பா.ஜ., அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை புதியது போல் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006ல் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா? பெண்களுக்கான நகைக்கடன் ரத்து என 2019 லோக்சபா தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? நாடு முழுவதும் கிராமம், நகரங்களில் வீடு கட்டித் தரும் திட்டத்தையும் பா.ஜ., அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பாரத்நெட் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.


latest tamil news


மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்க மத்திய அரசு ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. அதேபோல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பா.ஜ., அரசு, வேளாண் சட்டத்தை கொண்டுவந்ததே அதற்காக தான். அப்போது எதிர்த்துவிட்டு இப்போது தொலைநோக்கு திட்டமாக கூறுகிறார். இதுபோன்று பா.ஜ., செயல்படுத்தி வரும் திட்டங்களை புதியது போல் தொலைநோக்கு திட்டம் என அறிவித்து ஸ்டாலின் ஏமாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
09-மார்-202108:33:01 IST Report Abuse
rajan நாடு முழுவதும் கிராமம், நகரங்களில் வீடு கட்டித் தரும் திட்டத்தையும் பா.ஜ., அரசு செயல்படுத்தி வருகிறது. - அவரவர் செலவில் மட்டும். அரசு செலவு செய்யாது ஆனால் பெயர் அரசுக்கு - பதினைந்து லட்சம் ரூபாய் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் கொடுப்பேன் என்று மோடி சொன்னதை செய்து விட்டார்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-மார்-202106:30:01 IST Report Abuse
J.V. Iyer காப்பி அடிப்பதற்கு ஒரு எல்லை உண்டு. திமுகவுக்கு வெட்கமில்லை. அரசுக்கு எப்படி பணம் சேர்ப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு எப்படி பாகம் குவிப்பது என்று தெரியும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-202106:21:32 IST Report Abuse
Mani . V குட் ஜோக். எல்லோரும் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X