அரசியல் செய்தி

தமிழ்நாடு

காப்பி மட்டும் தான் அடிக்க முடியும், நாங்கள் செயல்படுத்துவோம்: கமல்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளதாக ம.நீ.மை தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வரும் சூழலில், ‛திமுக.,வால் காப்பி மட்டும் தான் அடிக்க முடியும், நாங்கள் செயல்படுத்துவோம்,' என கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மையம் சார்பில் நடந்த பெண்கள் தின நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மையம் அறிவித்த திட்டங்களை திமுக
MNM, Kamalhaasan, Copy, Manifesto, கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், காப்பி, திட்டங்கள், வாக்குறுதிகள்

சென்னை: மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளதாக ம.நீ.மை தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வரும் சூழலில், ‛திமுக.,வால் காப்பி மட்டும் தான் அடிக்க முடியும், நாங்கள் செயல்படுத்துவோம்,' என கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் சார்பில் நடந்த பெண்கள் தின நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மையம் அறிவித்த திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.4000 கொடுக்கும் திட்டம் வைத்திருந்தோம். நாங்கள் நினைத்ததில் 3 ஆயிரம் ரூபாயை உருவி, ரூ.1000 மட்டும் கொடுப்போம் என்கின்றனர். காப்பி அடிப்பது யாராக இருந்தாலும், முதலில் கூறியது நாங்கள் தான். உங்களால் காப்பி மட்டும் தான் அடிக்க முடியும், நாங்கள் செயல்படுத்துவோம்.


latest tamil news


என்னிடம் உள்ள நல்லதை காப்பி அடிப்பதிலும் நல்லத்தனம் வேண்டும். பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் உள்ளன. அதனை அறிவித்தால் காப்பி அடிப்பார்கள். தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். எந்த பணியை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், ஓட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும். முறைகேடு செய்யாத நல்ல அரசு அமைந்தால் தமிழகத்தை சிங்கப்பூர் போல் மாற்றிவிட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R NAGARAJAN - Chennai,இந்தியா
09-மார்-202119:30:13 IST Report Abuse
R NAGARAJAN கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்கிற செய்தியை படிக்கும் போது அவரை மனதில் வைthதே சொன்னது போல் உள்ளது, கமல் பிறந்த ஜாதிக்கு உண்மையாக இல்லை, பின்பற்றும் மதத்துக்கு உண்மையாக இல்லை, கட்டிய மனைவிகளுக்கு உண்மையாக இல்லை . பெற்ற மகள்களுக்கு உண்மையான தந்தையாக இல்லை, ஆட்சி பிடித்து நாட்டுக்கு மட்டும் உண்மையாக இருந்து விடுவாரா. தான் சம்பாதித்த சொத்தையும் வயதான தனது இமேஜ் யம் காப்பாற்றி கொள்ள அரசியலுக்கு வந்துள்ளார் . உண்மையானவராக இருந்தால் திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தையை தவிர்த்து இருக்க வேண்டும். திமுக கூட்டணியில் இல்லை என்றவுடன் திமுகவை தாழ்த்தி பேசி தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை தெளிவு படுத்தி விட்டார் .
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-202117:57:34 IST Report Abuse
Malick Raja முதலில் தன்னொழுக்கம் பேணி மனிதனாக வாழ்ந்து காண்பித்தல் அரசியல் கட்சி தலைவருக்கு வேண்டும் .. அதிலும் குறைந்த பட்சமாவது இருத்தல் வேண்டும் .. இரண்டும் இல்லையேல் வாக்குகள் கிடைக்காது
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
09-மார்-202115:16:17 IST Report Abuse
madhavan rajan நேர்மையைப் பற்றியும், தூய்மைப்பற்றியும் இவரெல்லாம் பேசும் போது என்னவோ செய்கிறது. விஷப் பாம்பு உயிர் கொடுக்கத்தான் நான் கடிக்கிறேன் என்று சொல்வது போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X