குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,500; ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம்: பழனிசாமி அதிரடி

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (158) | |
Advertisement
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இன்று ரூ. 1,500 வழங்கப்படும் என இன்று அ.தி,மு.க., அதிரடியாக அறிவித்துள்ளது.சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, 'விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவி தொகை வழங்கப்படும் என
குடும்பத்தலைவி, ரூ. 1,500 ,   6 காஸ் சிலிண்டர், இலவசம் பழனிசாமி, அதிரடி

சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இன்று ரூ. 1,500 வழங்கப்படும் என இன்று அ.தி,மு.க., அதிரடியாக அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, 'விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிக்கை


latest tamil news
* குடும்பத்தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என நாங்கள் அறிவிக்க இருந்த திட்டம் தி.மு.க.விடம் முன்கூட்டியே கசிந்து விட்டதால்,தி.மு.க. அறிவித்துவிட்டது. நாங்கள் குடும்பத்தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.


ஆண்டு 6 சிலிண்டர் இலவசம்* ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* அ.தி.மு.க., அ.ம.மு.க, இணைப்பு இல்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இவ்வாறு அறிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-மார்-202121:20:47 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இலவச ஒரே மாதிரியான கல்வி, இலவச மருத்துவம், இலவச தரமான குடிநீர், வெட்டிலாத மின்சாரம், தரமான தார் சாலைகள், தரமான பேருந்துகள், தரமான அரசு அலுலகங்கள், லஞ்சம் வாங்காத அதிகாரிகள் (RTO OFFICE, REGISTRAR OFFICE) - இவைதான் நமது இன்றைய தேவைகள். இதை தருவேன் என்று எந்த கட்சியும் சொல்லவில்லையே? வேதனையாக இருக்கிறது.
Rate this:
Cancel
RAVINDRAN - CHENNAI,இந்தியா
09-மார்-202114:43:08 IST Report Abuse
RAVINDRAN எங்க நம்ம சிறுத்தை எல்லம்மன் என்னும் காமெடி பீஸ் காண போய்ட்டாரு.ஓஹ் அவரு தல குருமா என்னும் திருமா கூட அறிவாலயத்தில் இருந்து ஆறு தொகுதிகளை தூக்க முடியாம தூக்க போயிட்டு ஓசி பிரியாணி கிடைக்குமா என நாக்கை தொங்க போட்டு அங்கேயே நிக்கறாரா.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
09-மார்-202106:24:03 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN கட்சி காரர்களுக்கு மற்றும் ஜபேக் போன்ற நிறுவனங்களுக்கும் கீழ்க்கண்டவற்றை குறித்து கொள்க: 1. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இனி மாதந்தோறும் 1000 ருபாய்க்கு அனைத்து இல்லங்களுக்கும் விலையில்லா காய்கறிகள் வழங்கலாம். 2. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு விலையில்லா ஆவின் பால் 1 லிட்டர் வழங்கலாம். 3. சர்க்கரை அல்லது நாட்டு கரும்பு சர்க்கரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 கிலோ வழங்கலாம். 4. வாரந்தோறும் மீன் ,கோழி இறைச்சி அல்லது மாமிசம் 1 கிலோ ஒரு குடும்பத்திற்கு வழங்கலாம். 5. ஒவ்வொரு ரேசன் அட்டைதாருக்கும் தீபாவளி , ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ருபாய் 5000 வழங்கலாம். இதன்மூலம் அனைவரும் தீபாவளி ரம்ஜான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள். இதன் மூலம் மதச்சார்பின்மை ஏற்படும். 6. அனைத்து வழி தடத்திலும் விலையில்லா பேருந்துகளை இயக்கலாம். இதன்மூலம் பொது போக்குவரத்து ஊக்குவிக்கப்பட்டு என்ணை இறக்குமதி குறைக்கலாம். விவசாயிகளுக்கு வருடந்தோறும் 1 லட்சம் கொடுக்கலாம். தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5000 ருபாய் கொடுக்கலாம். அனைவருக்கும் மாதம் 4 சினிமா டிக்கெட் கொடுத்து சினிமா துறையை வளர்ச்சி அடைய செய்யலாம். மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்க தொகையாக 1000 வழங்கலாம். அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் வாகன எரிபொருள் விலையில்லாமல் வழங்கலாம். அனைத்து நீதிபதிகள் மற்றும் வக்கீல்களுக்கும் கார் ஒன்றை விலையில்லாமல் வழங்கலாம். மேலும் கோர்ட் நேரத்தை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மாற்றலாம். இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும். தப்பி தவறி கூட தமிழக மக்களுக்கு இந்தி கற்று கொடுத்து விடாதீர்கள். அரசியல் வாதிகள் குடும்ப குழந்தைகளுக்கு மட்டும் கற்று கொடுங்கள் அவர்களை மட்டும் நல்ல பள்ளிகளில் படிக்க வைத்து முன்னேற்றுங்கள். சாலைகளை நல்ல முறையில் மாற்றி விடாதீர்கள். குண்டும் குழியுமான சாலையில் இரு சக்கர வாகன மோட்டி முதுகு வலி ஏற்பட்டு அனைவரும் வலிமை இழந்து இருந்தால் தான் நீங்கள் நலமுடன் இருக்க முடியும். அனைவருக்கும் தண்ணீர் இலவசமாக வழங்கி விடாதீர்கள். தண்ணீர்க்காக மக்கள் ஏங்கி கொண்டு இருந்தால்தான் உங்கள் அடிமையாக இருக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X