மார்ச், 9, 1988
ஆந்திர மாநிலம், சித்துாரில், 1925 செப்., 19ம் தேதி பிறந்தவர், எம்.பி.சீனிவாசன். சென்னை மாநிலக் கல்லுாரியில் பயின்றார். மாணவப் பருவத்தில், கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். முறையாக கர்நாடக இசை பயின்றவர், 1962ல் வெளிவந்த, கால்படுகள் என்ற மலையாளப் படத்தின் இசையமைப்பாளரானார்.ஜெயகாந்தனின் பாதை தெரியுது பார் படத்தின் மூலம், தமிழில் இசையமைப்பாளராக ஆனார். அக்ரஹாரத்தில் கழுதை படத்தில், பிரதான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதன் பின், மலையாளப் படங்களுக்கு இசை அமைக்கத் துவங்கினார்.
கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை, நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றார். 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கும், 10 தமிழ்ப் படங்களுக்கும், எட்டு தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1988 மார்ச், 9ம் தேதி, தன், 63வது வயதில் இயற்கை எய்தினார்.இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE