பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 532பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (மார்ச்.,08) 69 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 532 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.39 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (மார்ச்-08) 556 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (மார்ச்.,08) 69 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 532 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.39 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news



தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (மார்ச்-08) 556 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,55,677ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 257 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-188) மூலமாக, இன்று மட்டும் 54,325 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 79 லட்சத்து 716 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 340பேர் ஆண்கள், 216பேர் பெண்கள் என பாதிக்கப் பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,16,994 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,38,648 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 532பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 39 ஆயிரத்து 138 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,521ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,018பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X