வரம்புகளை மீறிய பேஸ்புக்குக்கு ரஷ்ய அரசு அபராதம்

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
உலகப் புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக்மீது தற்போது ரஷ்யா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ரஷ்ய குடிமக்கள் சிலரது உரிமையை பறிக்கும் வகையில் ஊடக விஷயங்கள் சிலவற்றை தடை செய்துள்ள பேஸ்புக்குக்கு ரஷ்ய அரசு அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவின் கீழ் சபை நாடாளுமன்ற சபாநாயகர் வியாசெஸ்லாவ் வொலோடின். புடினின் 'யுனைட்டட் ரஷ்யா' கட்சியின் உறுப்பினரான இவர்,

உலகப் புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக்மீது தற்போது ரஷ்யா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ரஷ்ய குடிமக்கள் சிலரது உரிமையை பறிக்கும் வகையில் ஊடக விஷயங்கள் சிலவற்றை தடை செய்துள்ள பேஸ்புக்குக்கு ரஷ்ய அரசு அபராதம் விதித்துள்ளது.



latest tamil news




ரஷ்யாவின் கீழ் சபை நாடாளுமன்ற சபாநாயகர் வியாசெஸ்லாவ் வொலோடின். புடினின் 'யுனைட்டட் ரஷ்யா' கட்சியின் உறுப்பினரான இவர், தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேஸ்புக் குறித்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் மின்னணு ஒற்றுமையை பேஸ்புக் நிறுவனம் குலைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய நீதிமன்றம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ரஷ்ய சட்டத்திற்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக சமூக வலைதளங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவற்றை தடை செய்யவும் அபராதம் விதிக்கவும் ரஷ்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்திருந்தது.

உக்ரைன் நாட்டில் செயல்பட்டுவரும் வலதுசாரி ஆதரவாளர்கள்மீது முன்னதாக நடவடிக்கை எடுத்தது ரஷ்ய அரசு. இதுதொடர்பான ஓர் பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் ரஷ்ய அரசு பதிவிட்டது. இதனை முன்னறிவிப்பின்றி பேஸ்புக் நீக்கியது. பேஸ்புக்கின் வரம்புகளுக்கு உட்படாமல் இருந்தால் இப்பதிவு நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.


latest tamil news




13 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்



இதனையடுத்து ரஷ்ய தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பு அமைப்பான ரோஸ்கும்நெட்சார், பேஸ்புக்குக்கு 13 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்காரூபா கூறுகையில், 'பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ரஷ்யாவின் சட்டங்களை அவை மதிப்பதில்லை. இதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09-மார்-202103:25:59 IST Report Abuse
NicoleThomson பேஸ்புக் இனிவரும் காலங்களில் எல்லா நாடுகளிலும் தடை செய்யும் நிலை வருமோ?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
08-மார்-202122:30:33 IST Report Abuse
SUBBU கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய நினைத்தால் கடைசியில் இதுதான் நடக்கும்கூடிய விரைவில் இந்தியாவிலும் இதுதான் நடக்கப் போகின்றது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X