அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., திட்டம்: கமல் கிண்டல்

Updated : மார் 10, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: 'எங்கள் திட்டத்தை காப்பியடித்த கழகம், நேர்மை, துாய்மையை பின்பற்றினால் மகிழ்வேன்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.'இல்லத்தரசிகளுக்கு சம்பளம் தருவோம்' என, முதல் பந்திலேயே, 'சிக்சர்' அடித்த கமலின் அறிவிப்பை கேட்ட, திராவிட கட்சியினருக்கு, 'வடை போச்சே' என்ற, 'டயலாக்'கை தான், பேசத் தோன்றியிருக்கும். இருந்தாலும், 'அரசியலில்
Kamal, Kamal Haasan, MK Stalin, Stalin, DMK, MNM, TN election 2021

சென்னை: 'எங்கள் திட்டத்தை காப்பியடித்த கழகம், நேர்மை, துாய்மையை பின்பற்றினால் மகிழ்வேன்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'இல்லத்தரசிகளுக்கு சம்பளம் தருவோம்' என, முதல் பந்திலேயே, 'சிக்சர்' அடித்த கமலின் அறிவிப்பை கேட்ட, திராவிட கட்சியினருக்கு, 'வடை போச்சே' என்ற, 'டயலாக்'கை தான், பேசத் தோன்றியிருக்கும். இருந்தாலும், 'அரசியலில் எவரும் நிரந்தர எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல' என்ற கோட்பாட்டின் படி, ஒரு கட்சியின் அறிவிப்பை, மற்ற கட்சியினர் சுட்டால் தப்பில்லை என்றாகி விட்டது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை' என்ற, கமலின் அறிவிப்பை சுட்டு விட்டார் என்கின்றனர், மக்கள் நீதி மய்யம் கட்சியினர். 'ஸ்டாலின் தான் வர்றாரு; விடியல் தரப்போறாரு' என்ற தேர்தல் வாசகத்தை, 'ஸ்டாலின் தான் வர்றாரு; காப்பி அடிக்க போறாரு' என மாற்றி, தி.மு.க.,வை கமல் கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர்.

'எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம், எங்கள் நேர்மையையும், துாய்மையையும் பின்பற்றினால் மகிழ்வேன்' என, கமலும் கூறியுள்ளார்.இப்படி, 'சுட்டார் சுட்டார்'என கமல், டீமும், 'சுடல சுடல' என, ஸ்டாலின் டீமும் மல்லுக்கட்டுவது தேர்தல் களத்தை கலகலப்பாக்கி இருப்பது நிஜம்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-202122:57:54 IST Report Abuse
வெண்குமதி சுடல சுட்டார்.
Rate this:
Cancel
balaji - chennai,இந்தியா
09-மார்-202118:03:29 IST Report Abuse
balaji சுடலை ஒரு தமிழ்நாட்டு மோடி
Rate this:
Cancel
09-மார்-202112:08:04 IST Report Abuse
தமிழ் இந்த கிண்டல் சுண்டலெல்லாம் தேர்தலுக்குப்பிறகு இருக்குதா பாக்கலாம்.
Rate this:
09-மார்-202122:59:22 IST Report Abuse
சுகம்ஏன் தேர்தலுக்கு முன்னாடி பண்ணா ஒத்துக்க மாட்டீயளோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X