பொது செய்தி

தமிழ்நாடு

'ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை'

Updated : மார் 10, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை :''ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், எந்த முறைகேடும் செய்ய இயலாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.தமிழகத்தில், ஏப்ரல், 6ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்க உள்ளது. ஓட்டுப் பதிவிற்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையே, நீண்ட இடைவெளி இருப்பதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக, மக்களிடம்
EVM, Electronic Voting Machines, EC, Election Commission, TN election 2021, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்,  முறைகேடு, வாய்ப்பில்லை

சென்னை :''ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், எந்த முறைகேடும் செய்ய இயலாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில், ஏப்ரல், 6ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்க உள்ளது. ஓட்டுப் பதிவிற்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையே, நீண்ட இடைவெளி இருப்பதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக, மக்களிடம் தவறான தகவல் பரவி வருகிறது. அரசியல் கட்சிகளின் தவறான பிரசாரங்களால், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், முறைகேடு செய்ய முடியுமோ என்ற சந்தேகம், பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக பூட்டிய அறையில் வைக்கப்படும். அந்த அறையை சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், புளுடூத், ரிமோட், ரேடியோ அலைகள் என, எந்த விதமான எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டும், முறைகேடு செய்ய முடியாது. இதை, தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், நவீன ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இவை அனைத்தும் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை. உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷன் அறிவுரைகளின்படி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் பணிக்கு, 150 பொதுத் தேர்தல் பார்வையாளர்கள், 14 போலீஸ் பார்வையாளர்கள், 118 செலவினப் பார்வையாளர்கள், 19ம் தேதிக்கு முன் தமிழகம் வருவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தி.மு.க., வாக்குறுதி விதி மீறலா?

தி.மு.க., தரப்பில், இல்லத்தரசிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க, ''தி.மு.க.,வின் வாக்குறுதி தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக புகார் வந்தால், அது குறித்து தேர்தல் கமிஷன், சம்பந்தப்பட்ட கட்சியிடம் விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என, சத்யபிரதா சாஹு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
09-மார்-202120:44:15 IST Report Abuse
J.Isaac தேர்தல் நேரத்தில் மட்டும் சவுக்கிதார் அடைமொழி போடுவதும் தவறுதானே
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
09-மார்-202115:50:17 IST Report Abuse
J.Isaac தேர்தல் அதிகாரிகளோ, ஓட்டு இயந்திரமோ தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளோ தவறு செய்ய மாட்டார்கள். தவறு செய்வது மக்கள் தான்.
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்உண்மை. 70 ஆண்டுகள் மக்கள் தவறு மேல் தவறு செய்ததால் தானே நாடு இந்த நிலைக்கு வந்தது. இப்போது போல் இனியும் மக்கள் விழிப்புடன் இருந்தால் நாடு முன்னேறும். ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
09-மார்-202114:15:37 IST Report Abuse
KUMAR. S தவறு நடக்க வாய்ப்பே இல்லைனு சொல்றீங்க. ..ஒட்டு பதிவு முடிஞ்சு வாக்கு எண்ணிக்கைக்கு இடைல 25 நாள் எதுக்குன்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே..அத முதல்ல சொல்லுங்க..பொது மக்கள் சந்தேகத்திற்கு நீங்கள் என் இடம் கொடுக்குறீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X