கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கட்சிகளுக்கு நிரந்தர சின்னம்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Updated : மார் 10, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : அரசியல் கட்சிகளுக்கு, நிரந்தரமாக சின்னம் ஒதுக்குவதை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின், சட்டப் பிரிவு செயலர் பிரபாகரன் தாக்கல் செய்த மனு:தேர்தல் களம் அனைவருக்கும் சமதளமாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தங்கள் சின்னங்களை பெரிய அளவில்
 கட்சிகளுக்கு நிரந்தர சின்னம்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை : அரசியல் கட்சிகளுக்கு, நிரந்தரமாக சின்னம் ஒதுக்குவதை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின், சட்டப் பிரிவு செயலர் பிரபாகரன் தாக்கல் செய்த மனு:தேர்தல் களம் அனைவருக்கும் சமதளமாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தங்கள் சின்னங்களை பெரிய அளவில் விளம்பரப்படுத்துகின்றன. இது, மக்களின் ஆழ்மனதில் படிந்து விடுகிறது.குறிப்பிட்ட சின்னங்கள் குறித்த மனநிலையில் இருந்து, மக்களை விடுவிப்பதும், சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு தேர்தலின்போதும், சின்னங்களை, தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில், அங்கீ கரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை, தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளில், நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யப்படவில்லை.

அரசியல் கட்சிகளுக்கு, பொது சின்னங்களை ஒதுக்குவதை மறுபரிசீலனை செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளோம். புதிய பார்வை அணி என்ற பெயரில், 150 தொகுதி களுக்கும் மேல், எங்கள் கட்சி போட்டியிட உள்ளது.எங்கள் கட்சிக்கு, பொது சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் வாதாடினார்.பொது சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை, ஒரு வாரத்தில் பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க, தேர்தல் ஆணையத்துக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்த மனுவுக்கு, ஆறு வாரங்களில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
09-மார்-202100:28:46 IST Report Abuse
SaiBaba இத ரொம்ப நாளா நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன். நிரந்தர சின்னத்தை கட்சிகளிடமிருந்து பிரித்து விட்டாலே போதும். எங்க திமுகவும் அதிமுகவும் காணாமப்போயிரும். யாருக்கு திறமையும் நேர்மையும் இருக்கோ அவங்க ஜெயிச்சிட்டுப் போறாங்க. மக்கள் அப்போ தான் தேட ஆரம்பிப்பாங்க. யாருக்கு வோட்டு போட்டா நல்லதுன்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X