தோடர்கள் சால்வை:சர்வதேச மகளிர் தினத்தில் அசத்தல்

Updated : மார் 10, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் உருவாக்கியுள்ள பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அதில், தமிழகத்தின் தோடர் மலைவாழ் சமூகத்தினர் தயாரித்துள்ள சால்வையும் அடங்கும்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கடந்தாண்டு, தன் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பல பெண்களுக்கு வழங்கியிருந்தார், பிரதமர் மோடி.இந்த ஆண்டு, பெண் தொழில் முனைவோரை
தோடர்கள் சால்வை , மோடி சர்வதேச மகளிர் தினம், அசத்தல்

புதுடில்லி :சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் உருவாக்கியுள்ள பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அதில், தமிழகத்தின் தோடர் மலைவாழ் சமூகத்தினர் தயாரித்துள்ள சால்வையும் அடங்கும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கடந்தாண்டு, தன் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பல பெண்களுக்கு வழங்கியிருந்தார், பிரதமர் மோடி.இந்த ஆண்டு, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் தயாரித்துள்ள பொருட்களை வாங்கும்படி, சமூக வலைதளத்தில் மோடி கூறியிருந்தார். மேலும், தான் வாங்கிய பொருட்கள் குறித்தும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து, மோடி கூறியுள்ளதாவது:
பெண்களின் நலனுக்காக, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்து உள்ளதை பெரும்பேறாக கருதுகிறேன்.தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதில், பெண் சக்திக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்.தமிழகத்தின் தோடர் இன மக்கள் கையால் தயாரித்துள்ள சால்வையை வாங்கியுள்ளேன். 'டிரைப்ஸ் இந்தியா' இணையதளம் வாயிலாக இதை வாங்கியுள்ளேன்.பல்வேறு மாநிலங்களில் உள்ள கோண்ட் மலைவாழ் மக்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ஓவியத்தையும் வாங்கியுள்ளேன். வர்ணங்கள் மற்றும் அவர்களது கலையறிவின் கலப்பு இது.
வீரம், அன்பு, படைப்பாற்றல் இணைந்த நாகா மக்களின் பாரம்பரிய சால்வையையும் வாங்கிஉள்ளேன்.

காதி என்பது, மஹாத்மா காந்தி மற்றும் நம் நாட்டின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, காதி பருத்தி மதுபானி வண்ண சால்வையும் வாங்கியுள்ளேன். அதன் தரம் மற்றும் வடிவமைப்பு, அம்மக்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது.
மேற்கு வங்க மலைவாழ் மக்கள் தயாரிக்கும் சணல் பொருட்கள், ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டும். அணிவதற்கு மிகவும் சவுகரியமாக இருக்கும் ஒடிசாவின் காமுசா சால்வையும், இந்தப் பட்டியலில் சேர்ந்து உள்ளது. கேரளாவின் பனை ஓலை நிலவிளக்குக்காக காத்திருக்கிறேன். நம் பெண் சக்தி எவ்வளவு சிறப்பானது, புதுமையானது, கலையாற்றல் மிக்கது என்பதை, இந்தப் பொருட்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


குஜராத்தில் துவக்கம்பா.ஜ., மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான விஜய் ரூபானி கூறியுள்ளதாவது:மஹாத்மா காந்தி, உப்பு சத்தியாகிரகத்துக்காக, தண்டி யாத்திரை நடத்தினார்; அதை நினைவுபடுத்தும் வகையில், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து, ஆமதாபாதுக்கு, சுதந்திர அமிர்தத்தின் கொண்டாட்டம் என்ற பெயரில், பேரணி நடக்க உள்ளது. இதை, பிரதமர் மோடி, வரும் 12ல் துவக்கி வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்களுக்கு அழைப்புநாட்டின், 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்காக, 259 பேர் அடங்கிய பிரமாண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட் டோர், இதில் இடம் பெற்றுள்ளனர். திரையுலகைச் சேர்ந்த லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான், நோபல் பரிசு வென்றுள்ள அமர்தியா சென், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அனைத்து மத்திய அமைச்சர்கள், 28 மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி என, பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது.''சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 75 ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை, இந்த உலகுக்கு தெரிவிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதைப் போல, அதன், 75வது ஆண்டு
விழாவிலும், மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்,'' என, மோடி வலியுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
09-மார்-202113:58:37 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் உலக பட்டினி குறியீடு இந்தியா 94 வது இடம், இதில் இருந்து மோடிக்கு மில்லினியர் வளர்ச்சி தான் முக்கியம்/107 நாடுகள் கொண்ட உலக பட்டினி குறியீடு இந்தியா 94 வது இடம் என்ற மோசமநிலை அதவது கடும் பட்டினி உள்ள தேசமா இந்தியா உள்ளது அனால் அதே சமயம் மலைக்க வைக்கும் millianor களின் வளர்ச்சி 350 % அதிகரித்துள்ளது இது தான் மோடியின் சாதனை
Rate this:
Cancel
09-மார்-202109:44:46 IST Report Abuse
தமிழ் தேர்தல் வந்தால் இவருக்கு மக்களிடம் பாசம் பொங்கிடும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-மார்-202106:40:55 IST Report Abuse
J.V. Iyer அசத்திவிட்டார் மோடிஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X