ஏட்டய்யாவின் கச்சிதமான டிராமா... எங்கேயும் மிச்சம் வச்சுடாதீங்க, ஆமா!

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | |
Advertisement
நிதியாண்டு இறுதி என்பதால், வீட்டு வரி கட்ட மாநகராட்சி அலுவலகம் சென்றனர் சித்ராவும், மித்ராவும். 'கவுன்டர்' திறக்க காத்திருந்தனர்.''நம்ம வேலைய சரியா செய்றதுக்கு, யார், யாருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கு; யார், யாருக்கெல்லாமோ பயப்பட வேண்டியிருக்கு. இவங்கனால நமக்கு டென்ஷன்; அரசாங்கத்துக்கு கெட்ட பேரு'' என, புலம்பியவாறே, மாநகராட்சி அதிகாரிகள் சிலர், கடந்து
 ஏட்டய்யாவின் கச்சிதமான டிராமா... எங்கேயும் மிச்சம் வச்சுடாதீங்க, ஆமா!

நிதியாண்டு இறுதி என்பதால், வீட்டு வரி கட்ட மாநகராட்சி அலுவலகம் சென்றனர் சித்ராவும், மித்ராவும். 'கவுன்டர்' திறக்க காத்திருந்தனர்.''நம்ம வேலைய சரியா செய்றதுக்கு, யார், யாருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கு; யார், யாருக்கெல்லாமோ பயப்பட வேண்டியிருக்கு. இவங்கனால நமக்கு டென்ஷன்; அரசாங்கத்துக்கு கெட்ட பேரு'' என, புலம்பியவாறே, மாநகராட்சி அதிகாரிகள் சிலர், கடந்து போயினர்.''என்ன மித்து. காலையிலேயே இப்படி புலம்பறாங்க...'' என, சித்ரா கேட்க, ''அந்த விஷயம் உங்களுக்கு தெரியாதுங்களா. சொல்றேன் கேளுங்க,'' என்ற மித்ரா, தொடர்ந்தாள்.''கார்ப்ரேஷன் லிமிட்டில், நான்காவது குடிநீர் திட்டத்துக்காக ரோட்டோரம் குழாய் பதிக்கும் வேல நடக்குது; தோண்டிய குழியை சரியா மூடறது இல்லை. மேடு, பள்ளமா இருக்கறதால வண்டியில போக முடியலைன்னுட்டு, மக்கள் டென்ஷனாகி, கார்ப்பரேஷன் ஆபிசை முற்றுகையிடறாங்க. ஆபீசர்ங்க கிட்ட வாக்குவாதம் செய்றாங்க''''இந்த நிலைமைல, செஞ்ச வேலைக்கான 'பில் அமவுன்ட்' வாங்க, கார்ப்பரேஷன் ஆபீசர்ங்க கிட்ட, கான்ட்ராக்டர்ங்க போறாங்க. 'நீங்க தோண்டின குழியை சரியா மூடி, சமப்படுத்திட்டு வாங்க. அதுக்கப்புறம் 'பில்' தர்றோம்னு' ஆபீசர்ங்க சொன்னாங்க...''''இதுக்கு ஒத்துக்காத கான்ட்ராக்டர்ஸ், 'இப்ப 'பில் அமவுன்ட்' தர்றீங்களா; இல்ல மேலிடத்துல பேசட்டுமா' என, ஆபீசர்களை மிரட்டி, அதிகாரிங்கள பணிய வைச்சு, 'பில்' வாங்கிட்டு போயிடறாங்களாம். இதனால தான், அவரு அப்படி புலம்பறாரு,'' என்றாள் மித்ரா.''ஓ… இதுதான் விஷயமா,'' என்ற சித்ரா, ''உணவு பாதுகாப்பு துறையில, கூடுதல் பொறுப்பு போடற விஷயத்துல வில்லங்கம் இருக்குன்னு பேசிக்கிறாங்க,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அப்படி என்னக்கா ஆச்சு?''''அந்த டிபார்ட்மென்ட்ல, திருப்பூர்ல வேல பார்த்த 'மணி'யான ஆபீசர், டிரான்ஸ்பர் ஆகிட்டார். இதுமாதிரி நேரத்துல, பக்கத்துல இருக்க ஆபீசருக்கு தான், 'இன்சார்ஜ்' கொடுப்பாங்க. ஆனா, வெளியூர்ல வேல பாக்கற ஒருத்தருக்கு, கூடுதல் பொறுப்பு கொடுத்து இருக்காங்க. என்ன மர்மம்ன்னு தெரியலைன்னு, மத்தவங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.இவர்களை நோக்கி வந்த ஒரு முதியவர், ''பாப்பா, இங்க விஜயராஜாங்கற ஒருத்தர பாக்கோணும். எங்க இருப்பாரு்'' என கேட்க, ''உள்ளே போய் கேளுங்க'' என்றாள் சித்ரா.வரி செலுத்தும் 'கவுன்டர்' திறக்க, வரியை செலுத்திவிட்டு இருவரும் கிளம்பினர். ரோட்டோர சுவரில், ஒரு சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய 'காணவில்லை' விளம்பரம், கண்ணில் தென்பட, ''போலீஸ் ஸ்டேஷனில் 'மிஸ்சிங் கேஸ்' கவனிக்கிற ஒரு ஏட்டு, இல்லீகல் சரக்கு விக்கறவருகிட்ட கல்லா கட்டின விஷயம் தெரியுமா?'' என்றாள்.''என்னக்கா… ஏதோ வித்தியாசமா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க,'' என, கேட்டாள் மித்ரா.''லிங்கேஸ்வரர் குடி கொண்டுள்ள ஊர் ஸ்டேஷன்ல, மிஸ்ஸிங் 'சில்ட்ரன்ஸ்' தொடர்பா விசாரிச்சு நடவடிக்கை எடுக்கற வேலைய மட்டும் கவனிக்க ஒரு போலீஸ் இருக்காரு...''''போன வாரம் சேவூர் பக்கம் போனவரோட கண்ணுல, இல்லீகலா சரக்கு விக்கற ஒருத்தர், வேன்ல வர்றத, பார்த்துட்டு, வண்டிக்குள்ள, இல்லீகலா விக்கறதுக்காக வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள பார்த்திட்டு, அந்த ஆசாமியை மிரட்டி, 18 ஆயிரம் ரூபாயை வசூல் பண்ணிட்டாராம்,'' என்ற சித்ரா, தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.''அப்புறம் என்ன ஆச்சுங்க்கா?,'' ஆர்வத்துடன் கேட்டாள் மித்ரா.''இல்லீகல் ஆசாமி, ஏற்கனவே மாமூல் கொடுக்கிற போலீஸ்காரங்கள கூப்பிட்டு, புதுசா ஒருத்தர் வாங்கிட்டு போயிட்டாருன்னு, சொல்ல, விஷயம், அவங்க 'பாஸ்' காதுக்கும் போயிடுச்சாம். உடனே சுதாரிச்ச, போலீஸ்காரரு, அதே ஆசாமிகிட்ட, 15 ஆயிரத்தை மட்டும் 'ரிடர்ன்' பண்ணிட்டாராம்,''''இதே போலீஸ்காரரு, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் தொடர்பான புகார்களை, ஒரு தரப்பா விசாரிச்சுட்டு, 'மாமூல்' வாங்கறதை வாடிக்கையா வச்சிருக்காருன்னு, ஒரே தகவல் உலா வருதுடி,''அதே வழியில், 'சுப்பையா பாண்டியன்' ஸ்டோர்ஸ் வரவே, வண்டியை நிறுத்திய சித்ரா, ''வாடி... காஸ்மெடிக்ஸ் வாங்கிட்டு போலாம்,'' என்றவாறு உள்ளே சென்றாள்.பொருட்களை வாங்கி விட்டு, இருவரும் பல்லடம் ரோடு வழியாக சென்றனர்.''பல்லடத்துக்கு பக்கத்தில, 'ரியல் எஸ்டேட் வில்லேஜ்' உருவாகிட்டு இருக்காம். உனக்கு தெரியுமாடி'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா, கரடிவாவியில் 'ரியல் எஸ்டேட் வில்லேஜ்' ரெடி ஆகிட்டு இருக்கு. பஞ்சாயத்து தலைவரோட வீட்டுக்காரர், ரியல் எஸ்டேட் பிசின்ஸ் பண்றாரு. இதுக்காக, எக்கச்சக்கமா 'லேண்ட்' வாங்கி 'சைட்' போட்டிருக்காரு,''''அடியாளுங்கள வச்சு மிரட்டியும் 'லேண்ட்' வாங்கறாராம். பஞ்சாயத்துல, எங்க பார்த்தாலும் 'சைட்' தான் தெரியுதாம். இதபத்தி, சி.எம்.,க்கு பெட்டிஷன் போயிருக்காம்க்கா,''சித்ராவின் போன் ஒலிக்கவே, ''ஹாய், ரஞ்சிதா ஆன்ட்டி எப்படியிருக்கீங்க. பகவதி கிருஷ்ணன் அங்கிள், டியூட்டிக்கு போயிட்டாரா?'' என விசாரித்தவாறே, ஒரு நிமிடம் பேசி, அணைத்தாள்.''தேர்தல் கமிஷனே நினைச்சாலும், 'டிரான்ஸ்பர்' பண்ண விடமாட்டாங்க போல,'' என தேர்தல் தொடர்பான விஷயத்துக்கு தாவினாள்.''சிட்டியில, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி 'புரமோஷன்' வாங்கின எஸ்.ஐ.,களை டிரான்ஸ்பர் பண்றாங்க. ஆனா, 'டைரக்ட்' எஸ்.ஐ.,களை மட்டும் டிரான்ஸ்பர் பண்ண யோசிக்கிறாங்க,'' சித்ரா சொன்னதும், ''அக்கா... வேறென்ன, அதிகாரியை நல்ல கவனிப்பதால, விட்டு வச்சிருக்காங்க,'' என கூறி சிரித்தாள் மித்ரா.வண்டி கே.எஸ்.சி., பள்ளி ரோட்டில் சென்ற போது, 'ஸ்மார்ட் சிட்டி' ரோடு வேலை நடந்து கொண்டிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, ரோடு வேலைக்கு வந்த சிமென்ட் கலவை லாரி டிரைவரிடம், 'சவுத்' டிராபிக் அதிகாரி ஒருத்தர், 'டிராபிக்கு இடையூறாக இருக்கு, வண்டியை எடுக்குறயா, இல்ல ஸ்டேஷனுக்கு கொண்டு போகட்டுமான்னு மிரட்டியிருக்காரு...''''இதப்பார்த்த மக்கள், எஸ்.ஐ.,கிட்ட வாக்குவாதம் செஞ்சாங்க. தகவல் தெரிஞ்சு 'ஸ்பாட்'டுக்கு போன, ஸ்டேஷன் ஆபீசர், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.,யை சத்தம் போட்டு அனுப்பி, மக்களை சமாதானப்படுத்தி இருக்காரு,'' என்றாள் மித்ரா.''அட, இதேபோல, சிட்டியில, ராத்திரி 'வெய்க்கிள் செக்கப்' செய்ய போலீஸ், 'தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்' இருந்தாலும், 'பைன்' போடறாங்களாம். இதென்ன கொடுமையா இருக்கு, வாகன ஓட்டிகள், பலரும் இன்ஸ்., கிட்ட சொன்னதற்கு, 'யோவ் அவங்களை அனுப்புயா,' என சத்தம் போட்டாராம்,''''இப்படி எதுவுமே தெரியாதவங்களை வச்சு, சோதனைங்கிற பேர்ல, மக்களை சோதனை பண்றதே போலீசுக்கு வேலயா போச்சுனு, பலரும் சொல்றாங்க...''''அக்கா... நீங்க சொல்றது உண்மைதான். எங்க பக்கத்து வீட்டு அண்ணா கிட்டயும், இதேமாதிரி கேட்டு, இம்சை பண்ணிட்டாங்க,'' என்ற மித்ரா, ''அக்கா... சேவூர் ஸ்டேஷன் மேட்டர் தெரியுமா?'' என, கேள்வி கேட்டாள்.''என்னது?''''நைட் டியூட்டில, ஒரு ஏட்டு, ஏ.ஆர்., போலீஸ்கிட்ட, 'வர்ற வண்டிய நிறுத்தி, பணம் வாங்கு'னு சொல்ல, 'முடியாதுன்னு' அவர் சொல்லியிருக்கார். ஏக வசனத்தில் அவரை திட்டிய 'ரங்க'மான ஏட்டு, 'நடந்து வாடா...' சொல்லிட்டு பைக்கை எடுத்துட்டு போய்ட்டாராம்,''''வேற வழியில்லாம, போலீஸ்காரர், நடந்தே ஸ்டேஷனுக்கு போயிருக்கார். விடிஞ்சதும், இன்ஸ்., கிட்ட கம்ப்ளையன்ட் பண்ணிட்டார். எங்க தனக்கு பிரச்னை வந்துருமோன்னு, ஏட்டு, சாணிப்பவுடரை தண்ணில கரைச்சு, லேசா குடிச்சுட்டு, ஜி.எச்.,க்கு போயிட்டாராம்,''''ஆனா, இதெல்லாம், ஏட்டோட 'டிராமா'ன்னு கமென்ட் அடிச்ச மேடம், உடனே 'அவர சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்க,''''ஓ... குன்னத்துாரில், பசு மாட்டை வித்து, பணத்தை ஆட்டய போட்ட ஏட்டுதானே...'' சிரித்த சித்ரா, ''இப்படி தான், போலீஸ் ஸ்டேஷன் பின்னாடி 'சரக்கடிச்ச' போலீஸ்காரங்கள கூட, டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''இந்த கூத்து எங்கக்கா?''''அலங்கியம் ஸ்டேஷன்ல தான். மூணு போலீஸ்காரங்க, 'டியூட்டி' நேரத்துல வேலை செய்யாம போதைல இருந்ததாக, எஸ்.பி., ஆபீசுக்கு யாரோ சொல்லீட்டாங்க. கண்காணிக்க எஸ்.பி., உத்தரவிட்டதில, அடுத்த நாளே, மூணு பேரும் மாட்டிட்டாங்க. உடனே, ஏ.ஆர்.,க்கு, துாக்கி கடாசிட்டாங்க...''''வேலியே பயிரை மேய்ஞ்சா என்ன பண்றது?'' சொன்ன மித்ரா, ''இங்க பாருங்க. பசங்களை நல்லா இருக்கட்டும்னு நெனச்ச டீச்சர்ஸ்கிட்ட என்கொயரி பண்ணாங்களாம்,'' ஆதங்கப்பட்டாள்.''எந்த ஸ்கூலில்...''''கருப்பகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, ஸ்டூடன்ட்ஸ், முக்கால் அளவு 'பேன்ட்' போட்டு, வந்துள்ளனர். 'இப்படியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது,'னு, டீச்சர் சொன்னதற்கு, 'சைல்டு லைன் 1098'க்கு போன் போட்ட பசங்க, 'எங்களை டார்ச்சர்' பண்றாங்கன்னு சொல்லீட்டாங்க,''''உடனே, கிளம்பி வந்த 'சைல்டு லைன்' நிர்வாகிகள், நடந்ததை பத்தி எதையும் கேட்காம, விளக்க கடிதம் எழுதி கொடுக்க சொல்லிட்டாங்க. 'நல்லதுக்கு காலம் இல்லேன்னு' புலம்பிய டீச்சர்ஸ், 'இனிமேல் மாணவர்களை கண்டிக்கமாட்டோம்னு' எழுதி கொடுத்தாங்களாம்,''''இதெல்லாம் எங்க போய் முடியுமோ?'' கூறிய சித்ரா, ''திருமுருகநாதர் குடி கொண்ட ஊர் ஸ்டேஷனில், சின்ன சண்டைக்கு கூட எப்.ஐ.ஆர்., போட்டுடறாங்கன்னு, சொல்றாங்க...'' என்றாள்.''ரொம்ப சின்ஸியரா இருப்பாங்க போல...''''அட... நீ, வேற. போன வாரம், ரெண்டு பிரண்ட்ஸ், நுாறு ரூபாய்க்கு சண்டை போட்டாங்களாம். உடனே, இரு தரப்பினரையும் வம்படியா வரச்சொல்லி, எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்க. அதே ஏரியால, 24 மணி நேரமும் சரக்கு, கஞ்சா, லாட்டரி விக்கறது ஒற்றர்படைக்கு தெரியாதா?,''அப்போது, எதிரில் மொபட்டில் வந்த ஒருவரை பார்த்த மித்ரா, ''ஹாய்... சார்லி அங்கிள், எப்டியிருக்கீங்க? வீட்டில எல்லாரும் சவுக்யமா?'' என்றாள். அவரும் பதில் சொல்லி நகர்ந்தார். அடுத்த சில வினாடிகளில், மித்ரா வீட்டில் இறங்கி கொள்ள, சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X