சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட் அப்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. 100 சவரன் தங்க நகை ரூ.10 லட்சம் கொள்ளைமயிலாடுதுறை : வீட்டின் கதவை உடைத்து, 100 சவரன் நகை மற்றும், 10 லட்சம்ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செம்பனார்கோவில் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை நடக்கிறது.2. ஈ.வெ.ரா., சிலைக்கு தீ வைத்தவர் கைதுகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே,

தமிழக நிகழ்வுகள்
1. 100 சவரன் தங்க நகை ரூ.10 லட்சம் கொள்ளை
மயிலாடுதுறை : வீட்டின் கதவை உடைத்து, 100 சவரன் நகை மற்றும், 10 லட்சம்ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செம்பனார்கோவில் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை நடக்கிறது.



latest tamil news



2. ஈ.வெ.ரா., சிலைக்கு தீ வைத்தவர் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே, ஈ.வெ.ரா., சிலைக்கு தீ வைத்த, கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:அதிகாலையில் குளிர் காய, ஈ.வெ.ரா., சிலை அருகில், டயரை கொளுத்தினேன். அதில், சிலையிலிருந்த மாலை தீப்பற்றியது. இதனால், பயத்தில் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டேன்.மக்கள் போராட்டம் செய்வதையறிந்து நானும் சென்றேன். போலீசாரிடம், அதிகாலையில், 'டூ - வீலரில்' வந்த இருவர், சிலைக்கு தீ வைத்து தப்பிச் சென்றதை பார்த்தேன் என தெரிவித்தேன். போலீசார், என்னிடம் தனியாக விசாரித்தனர். அப்போது, உண்மையை ஒப்புக்கொண்டேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



3. பொள்ளாச்சியில் ரூ. 3.98 லட்சம் பறிமுதல்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, மூன்று லட்சத்து, 98 ஆயிரத்து, 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட, அம்பராம்பாளையம் சுங்கம் அருகே வெங்காய வியாபாரி ஒருவரிடம், 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம், மூன்று லட்சத்து, 98 ஆயிரத்து, 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

4. பாலிஷ் செய்வதாக கூறி தங்க நகை திருட்டு: ஒருவர் கைது
கூடலுார்:கூடலுாரில் பாலிஷ் செய்வதாக கூறி, ரசாயன தண்ணீரை பயன்படுத்தி, நகையை திருடி, தப்ப முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தருண்குமார், 25, என்பதும்; ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்ப முயன்றது தெரிய வந்தது. எஸ்.ஐ., ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததார். தப்பி ஓடியவனை தேடி வருகின்றனர்.


latest tamil news



5. சுத்தியால் அடித்து கணவர் கொலை
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வடக்கு காடு, செம்பாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து,45; இவரது மனைவி சித்ரா, 42. இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மருதமுத்து வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் சித்ரா கோபித்துக்கொண்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை 7.30 மணியளவில், மகள் பூவரசி வீட்டிற்கு வந்து பார்த்த போது, மருதமுத்துரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மனைவி சித்ராவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் கணவர் தகராறு செய்ததால் சுத்தியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கீழகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சித்ராவை கைது செய்தனர்.


latest tamil news



இந்தியாவில் குற்றம் :
கள்ளக்காதல் பிரச்னை 2 போலீசார் தற்கொலை
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் கள்ளக்காதல் பிரச்னையால் இரு போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மேற்கு வங்கத்தின் மெதினிபூர் மாவட்டம் சல்போனி கிராமத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் முகாம் உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் ஆண் ஏட்டு ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும் அதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


latest tamil news



உலக நடப்பு
அரச பொறுப்பை துறந்தது ஏன்: மனம் திறந்த இளவரசர் ஹாரி
லாஸ் ஏஞ்சலஸ் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரச குடும்பத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை, இளவரசர் ஹாரி, அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான, மேகன் மார்க்கெல் ஆகியோர், மனம் திறந்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X