பொது செய்தி

தமிழ்நாடு

30வது முறையாக மதுரை யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி!

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 30வது முறையாக, துாத்துக்குடி யாசகர், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இதுவரை அவர் 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் யாசகர் பூல்பாண்டியன். இவர் கொரோனா காலகட்டத்தில் பிச்சை எடுத்த பணத்தில் உணவு செலவு போக மீதமுள்ளதை ரூ.10 ஆயிரம் வீதம் கொரோனா தடுப்பு
மதுரை, யாசகர், நிதி

மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 30வது முறையாக, துாத்துக்குடி யாசகர், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இதுவரை அவர் 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் யாசகர் பூல்பாண்டியன். இவர் கொரோனா காலகட்டத்தில் பிச்சை எடுத்த பணத்தில் உணவு செலவு போக மீதமுள்ளதை ரூ.10 ஆயிரம் வீதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரண நிதியாக 28 முறை வழங்கினார். சில நாட்களுக்கு முன் சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக வழங்க ரூ.10ஆயிரம் நிதி வழங்கினார்.


latest tamil news


இந்நிலையில், நேற்று மேலும் ரூ.10 ஆயிரம் நிதியை 30வது முறையாக மதுரையில் கலெக்டர் அன்பழகனிடம் வழங்கினார். இதுவரை அவர் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார். இவருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
11-மார்-202109:30:01 IST Report Abuse
dina "30வது முறையாக மதுரை யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி" அல்ல இது அரசாங்கம் 30வது முறையாக யாசகம் பெற்றுக்கொண்டுள்ளது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-மார்-202116:55:47 IST Report Abuse
சீனி நாட்டை கொள்ளையடிக்க துடிப்பவர்களை விட, நீங்கதான் "சமூக வள்ளல்" என்ற பட்டத்திற்க்கு தகுதியானவர். எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன், மேலும் வாரி வழங்குங்க. மிக்க நன்றி.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-மார்-202116:55:47 IST Report Abuse
சீனி நாட்டை கொள்ளையடிக்க துடிப்பவர்களை விட, நீங்கதான் "சமூக வள்ளல்" என்ற பட்டத்திற்க்கு தகுதியானவர். எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன், மேலும் வாரி வழங்குங்க. மிக்க நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X