அரசியல் செய்தி

தமிழ்நாடு

பரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை!

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க.,வை வலுவாக ஆதரித்து வந்தவர், பேராயர் எஸ்றா சற்குணம். அவரது மகள் கதிரொளி மாணிக்கம். அவர் தலைமையில், 20 பேராயர்கள் மற்றும் ஆயர்கள், முதல்வரை சந்தித்து அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவை அறிவித்தனர்.தமிழகத்தில், ஆறு லட்சத்துக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்ட பேராயமாக, இ.சி.ஐ., என்ற கிறிஸ்துவ திருச்சபை இயங்கி வருகிறது. இதன் நிரந்தர நிர்வாக பேராயர்
திமுக, பேராயர் எஸ்றா சற்குணம், தேர்தல், சற்குணம்

கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க.,வை வலுவாக ஆதரித்து வந்தவர், பேராயர் எஸ்றா சற்குணம். அவரது மகள் கதிரொளி மாணிக்கம். அவர் தலைமையில், 20 பேராயர்கள் மற்றும் ஆயர்கள், முதல்வரை சந்தித்து அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவை அறிவித்தனர்.

தமிழகத்தில், ஆறு லட்சத்துக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்ட பேராயமாக, இ.சி.ஐ., என்ற கிறிஸ்துவ திருச்சபை இயங்கி வருகிறது. இதன் நிரந்தர நிர்வாக பேராயர் எஸ்றா சற்குணம். தேர்தல் வரும்போதெல்லாம், தி.மு.க.,வுக்கு ஆதரவாக கிறிஸ்துவர்களைத் திரட்டி, உதயசூரியனுக்கு ஓட்டுப் போட வைப்பார் சற்குணம். அப்படிப்பட்டவரின் மகள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா? என பலருக்கு ஆச்சரியம். சற்குணத்துக்கும், கதிரொளிக்கும், தி.மு.க., - - அ.தி.மு.க., தரப்பில் நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் பரவியது. விசாரணையில் இறங்கினோம்.

கதிரொளி பேச முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் இருப்பதாக கூறினர் அவர் சார்பாக நம்மிடம் பேசியவர்கள். அவர்கள் சொன்னது:இ.சி.ஐ.,நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் உள்ளன. சென்னையிலும் ஏராளம் உள்ளன. அப்படி, சென்னை, குரோம்பேட்டையில் இருந்த ஆலயம், ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டது என வழக்கு வந்து, உச்ச நீதிமன்ற உத்தரவும் வந்தது. அரசு நடவடிக்கை எடுத்தது. ஆலயம் இடிக்கப்பட்டது.

இது தொடர்பான சர்ச்சைக்கு அரசிடம் பேசி, தீர்வு காண, சற்குணம் முயற்சி செய்தார். அவர், தி.மு.க., ஆதரவாளர் என்பதால், அரசு ஆர்வம் காட்டவில்லை. அவரும் வயது மூப்பால் செயல்பட இயலவில்லை.இதனால், அவரது இடத்தில் இருந்து திருச்சபை கட்டமைப்பை நிர்வகித்து வருகிறார் கதிரொளி. இதை அறிந்து அமைச்சர் பெஞ்சமினும், அ.தி.மு.க., வழிகாட்டுக் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரனும் கதிரொளியை அணுகினர்.

'ஆலய பிரச்னையை முடித்துக் கொடுக்கிறோம்; முதல்வரை சந்தித்து, சொல்லிவிடுங்கள்' என்றார்கள். கதிரொளி சம்மதம் சொன்னதும், முதல்வர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே இதே மாதிரியான பிரச்னைகளோடு பல பேராயர், ஆயர்கள் வந்திருந்தனர். முதல்வர் வந்தது, 'குரூப்'பாக படமெடுத்தனர். அதை வெளியிட்டு, 'எஸ்றா மகள் எங்கள் பக்கம்' என, செய்தி பரப்பி விட்டனர். இதனால், பெரிய பிரச்னையாகி எஸ்றா குடும்பம் தத்தளிக்கிறது. இவ்வாறு கதிரொளி தரப்பு சொன்னது. அமைச்சர் பாண்டியராஜனிடம் விசாரித்தபோது அவர் இப்படி சொன்னார்:எஸ்றா சற்குணம், எதையும் எதிர்பார்க்காமல், தி.மு.க.,வுக்காக உழைத்தவர்.


latest tamil newsகருணாநிதி அன்பு காட்டியதால், தி.மு.க.,வுக்கு வெறித்தனமாக ஆதரவு பேசி வந்தார். அப்படிப்பட்டவரின் ஆலயத்துக்கு வந்த பிரச்னையை, தி.மு.க., தரப்பு தீர்த்து வைக்கவில்லை. எனவே, என்னைத் தேடி வந்தார். பிரச்னையைச் சொல்லி, தீர்வு செய்ய வேண்டினார். அப்போது, 'தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர விரும்புகிறோம்' என அவரே சொன்னார். ஆறு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் தலைவர் இப்படி சொன்னதும், சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். முதல்வரை சந்தித்து ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றார்.

கடிதம் அனுப்பி நேரம் வாங்கிக் கொடுத்தேன். பேராயர்கள், ஆயர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் முதல்வரை சந்தித்தார் கதிரொளி. அ.தி.மு.க.,வுக்கு திருச்சபை ஆதரவு என்று அங்கே சொன்னதும் அவர்தான். இது தெரிந்து, கதிரொளி மாணிக்கத்தை, தி.மு.க., மிரட்டுவதாக கேள்விப்பட்டேன். இத்தனை காலம், தி.மு.க.,வுக்காக, கருணாநிதிக்காக உழைத்த எஸ்றா சற்குணம், படுத்த படுக்கையாகி கிடக்கிறார். தி.மு.க., அவரை கண்டு கொள்ளாமல் விட்டதால், மகள் எங்களைத் தேடி வந்தார். கதிரொளி மாணிக்கம் சிறு பிள்ளையா, என்ன?

கண்ணைக் கட்டியா முதல்வரிடம் அழைத்துப் போனோம்? அவர் ரொம்ப விபரமானவர் . முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்து, தன் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்கு என அவரே பேட்டி அளித்திருக்கிறார். எந்த அளவுக்கு மிரட்டல் இருந்தால், மொத்தத்தையும் கதிரொளி மாற்றிச் சொல்வார்?ஆனால், கதிரொளி உறுதியாக இருக்கிறார்.

எல்லா ஆலயங்களுக்கும் தகவல் அனுப்பி விட்டார். அவர்கள், அ.தி.மு.க.,வுக்குத்தான் ஓட்டளிப்பர். இன்று காலை கூட, இது தொடர்பாக என்னிடம் பேசினார். கதிரொளி மாணிக்கம். இது தான் நடந்தது.இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.மதமும், அரசியலும் கலக்கும்போது சிலருக்கு இப்படித்தான் வயிற்றைக் கலக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-மார்-202113:05:20 IST Report Abuse
 Muruga Vel கும்பகோணம் அன்பழகன் காஞ்சி மடத்துக்கு சென்று ஆசி வாங்குகிறார் ... ஒவைசி இஸ்லாமியர் வாக்குகளை பிரிப்பார் ..எஸ்ரா மகள் ரெட்டையிலைக்கு வாக்கு போடுவார் ..
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
10-மார்-202111:04:41 IST Report Abuse
pattikkaattaan இதுவரைக்கும் என் குடும்ப உறுப்பினர்களை இந்த கட்சிக்கு வோட்டுப்போடுங்கள் என்று நான் சொல்லியதில்லை .. வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டதும் இல்லை .. நாம் விரும்பியவருக்கு வாக்களிப்பதே ஜனநாயகம் ..
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் இது என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X