பொது செய்தி

தமிழ்நாடு

தொகுதிக்கு 3 பேரு; கலெக் ஷன் செம ஜோரு!

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க.,வில், தொகுதிக்கு, மூன்று பேரை, 'செலக்ட்' செய்து, 'லிஸ்ட்' கொடுத்திருக்கிறது, வடமாநில ஆலோசனை நிறுவனம். 'லிஸ்டில் இல்லாதவருக்கு, 'சீட்' கொடுத்தால், தோல்விக்கு நாங்கள் பொறுப்பல்ல' என்ற எச்சரிக்கை வேறு.ஆ.நி., அளித்த லிஸ்டை கையில் வைத்துக் கொண்டு, தேர்தல் பொறுப்பாளரிடமும், மாவட்டச் செயலர்களிடமும் தனித்தனி பட்டியல் வாங்கியிருக்கிறார் ஸ்டாலின். மூன்றையும்
DMK, Assembly Election, Poll, Stalin, Candidate List, திமுக,

தி.மு.க.,வில், தொகுதிக்கு, மூன்று பேரை, 'செலக்ட்' செய்து, 'லிஸ்ட்' கொடுத்திருக்கிறது, வடமாநில ஆலோசனை நிறுவனம். 'லிஸ்டில் இல்லாதவருக்கு, 'சீட்' கொடுத்தால், தோல்விக்கு நாங்கள் பொறுப்பல்ல' என்ற எச்சரிக்கை வேறு.

ஆ.நி., அளித்த லிஸ்டை கையில் வைத்துக் கொண்டு, தேர்தல் பொறுப்பாளரிடமும், மாவட்டச் செயலர்களிடமும் தனித்தனி பட்டியல் வாங்கியிருக்கிறார் ஸ்டாலின். மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஒருவரை தேர்வு செய்யும் வேலை நடப்பதாக சொல்கிறது, அறிவாலய, 'சோர்ஸ்'. ஆளும் கட்சியிலும் ஆலோசனை சொல்ல, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தேர்வில் மூக்கை நுழைக்க, அந்த, 'டீம்' மறுத்து விட்டதாம். அதனால், மா.செ.,க்களிடம், 'லிஸ்ட்' கேட்டிருக்கின்றனர்.


latest tamil news


தொகுதிக்கு, மூவரை பரிந்துரை செய்யும்படி உத்தரவு. அதில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க முடிவு.அதற்கு வசதியாக, விருப்ப மனு கொடுத்தவர் விபரங்களை, மாவட்டச் செயலர்களுக்கு அனுப்பி, 'லிஸ்ட்' கேட்கப்பட்டுள்ளது. ஆளும் மா.செ.,க்களில் பாதிக்கு மேல் அமைச்சர்களாக இருக்கின்றனர். மீதிப் பேர், அமைச்சர்களின் ஆதரவாளர்கள், ஆகாதவர்கள். வாய்ப்பை பயன்படுத்தி வசூல் பார்க்க, அரசியல்வாதிகளுக்கு சொல்லியா தர வேண்டும். ஜோராய் நடந்திருக்கிறதாம் வசூல் வேட்டை. விருப்ப மனு கொடுத்தவர்களை கூப்பிட்டு, ஒரே நாளில் நேர்காணல் நடத்தி, ஊருக்கு போகும்படி கூறி விட்டது, கட்சி தலைமை.

ஊர் திரும்பியவர்களுக்கு தனித்தனியாக போன் அழைப்பு போயிருக்கிறது, மா.செ.,க்களிடம் இருந்து. 'சீட்' கொடுக்கத் தான் கூப்பிடுவதாக நம்பி போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரிய நம்பரில் இருந்து பேரம் துவங்குகிறது. படிப்படியாக குறைத்து, '3 சி' ரேஞ்சுக்கு வந்து நின்று விட்டதாம் பேச்சு. 'ஓகே' சொன்னால், மூணு பேர் லிஸ்டில் பெயர் போகும் என, கறார் காட்டப்பட்டுள்ளது. தென் மாவட்ட அமைச்சர் ஒருத்தர், தான் மாவட்டச் செயலராக இருக்கும் தொகுதிகளுக்கு நடத்திய நேர்காணல் தனி ரகமாம்.


latest tamil news


'எக்ஸாமில், பர்ஸ்ட் ரேங்க், செகண்ட் ரேங்க்' போடுவதுபோல, பட்டியலில் முதல் பெயராக இடம்பெற, தனி, 'ரேட் பிக்ஸ்' பண்ணிவிட்டாராம். மூன்று இடத்திற்கும், மூன்று விதமாக விலை பேசி, கச்சிதமாக கறந்து முடித்து விட்டதால் பரபரப்பு.ஏறக்குறைய எல்லா தொகுதிகளுக்கும், இப்படி தான் பட்டியல் தயாரிப்பு நடந்திருப்பதாக சொல்கிறது, ஆளும் வட்டாரம். அந்த பட்டியல் தான், தலைமைக்கு போயிருக்கிறது. மூன்று பேரில் ஒருத்தரை, சி.எம்., 'டிக்' செய்திருப்பதாக சொல்கின்றனர்.

'டிக்' செய்யப்படாத, இரண்டு பேருக்கு பணம் திரும்ப கிடைக்குமா என்பது, புலன் விசாரணைக்கு உரியது.இதற்கிடையில், பணத்துக்காக, தகுதியில்லாத, செல்வாக்கு இல்லாதோர் பெயர்களை, மூவர் பட்டியலில் சேர்த்து விட்டதாக, மா.செ.,க்கள் மீது புகார் போயிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு, 'டோஸ்' கிடைத்ததுடன், அவர்கள் அளித்த பட்டியல், மறுபரிசீலனை செய்யப்படுகிறதாம். இது, ஒருபுறமிருக்க, ஒரு சில மாவட்டங்களில், மா.செ.,க்களுக்கே இப்படி வசூல் நேர்காணல் நடந்த விஷயம் தெரியவில்லை. அங்கெல்லாம் அமைச்சர்கள் ஆதிக்கம் இருப்பதால், மா.செ.,க்கள், 'டம்மி' ஆக்கப்பட்டதாக பேச்சு.

அதுபோன்ற மா.செ.,க்களுக்கு, 'சீட்' இல்லை என்பது தான், 'மெசேஜ்'ஏற்கனவே, நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட, ஆறு அமைச்சர்களுக்கு, 'சீட்' கிடையாது என்ற தகவலும் பரவுகிறது. அவர்களோடு சேர்த்து, மா.செ.,க்கள் பலருக்கும், 'சீட்' இல்லை என்பது உறுதியாகியிருப்பதால், தேர்தல் நேரத்தில், என்ன செய்யப் போகிறார்களோ என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.தமிழகத்தில், இனி நோட்டு இல்லாவிட்டால், சீட்டும் கிடைக்காது; ஓட்டும் கிடைக்காது போலிருக்கிறது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் - Chennai,இந்தியா
09-மார்-202114:40:58 IST Report Abuse
கல்யாணராமன் மூளை மழுங்கிவிட்டதா? திமுகவை பற்றி எழுத ஆரம்பித்து அதிமுகவை பற்றி எழுதி முடிக்கிறாய்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-202123:45:47 IST Report Abuse
தமிழவேல் திமுகவை பற்றி 4 வரி. பாக்கி எல்லாம் ஆளும் கட்சிபற்றி... ஆனால், கொடியோட தாத்தா போட்டோ. குடுத்து வச்ச மனுஷன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X