அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்டகத்தில் பூதம்? பீதியில் அ.தி.மு.க.,- பா.ஜ.,

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
மோடியின் முதல் அரசில், அமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன், 'கன்னியாகுமரி மாவட்டம், இனையம் கிராமத்தில், சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமையும்' என, அறிவித்தார்.துறைமுகம் வந்தால் கிராமங்கள் அழியும், மீன் பிடி தொழில் அழியும், குமரியின் இயற்கை வனப்பு தொலையும் என மக்கள் எதிர்த்த போது, கண்டுகொள்ளவே இல்லை. பெட்டக துறைமுகம் விஷயத்தில், அமைச்சர் அப்படி உறுதியாக இருந்த
பெட்டகத்தில் பூதம்? பீதியில் அ.தி.மு.க.,- பா.ஜ.,

மோடியின் முதல் அரசில், அமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன், 'கன்னியாகுமரி மாவட்டம், இனையம் கிராமத்தில், சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமையும்' என, அறிவித்தார்.

துறைமுகம் வந்தால் கிராமங்கள் அழியும், மீன் பிடி தொழில் அழியும், குமரியின் இயற்கை வனப்பு தொலையும் என மக்கள் எதிர்த்த போது, கண்டுகொள்ளவே இல்லை. பெட்டக துறைமுகம் விஷயத்தில், அமைச்சர் அப்படி உறுதியாக இருந்த போது, அங்கே துறைமுகம் அமைப்பது சாத்தியம் இல்லை என தொழில்நுட்ப அறிக்கை வந்தது. எதிர்ப்பாளர்கள் கொடியை கீழே போட்ட நேரத்தில், 'குமரி அடுத்த கோவளத்தில் துறைமுகம் அமையும்' என்று அறிவித்தார் பொன்.ரா., ஆய்வும் துவங்கியது.அங்குள்ள அலையாத்தி காடுகள், சிவப்பு பாறைகள் நாசமாகி, உப்பு நீர் ஊருக்குள் வந்து விடும் என்று மக்கள் கொதித்தனர்.

குமரியின் அழகு சீரழியும், சுசீந்திரம் கோவில் வரை பாதிக்கும் என்று குமுறினர். ஆனாலும் மனம் தளராத அமைச்சர், லோக்சபா தேர்தல் நெருக்கத்தில், துறைமுக ஆரம்ப விழா என்ற, ஒரு சடங்கையும் நடத்தி முடித்தார்.அதன் விளைவு தேர்தலில் தெரிந்தது; 2.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் பொன்.ரா., அதன்பின், பெட்டக துறைமுகம் பிரச்னை அடங்கியது. மக்களும் நிம்மதியாக இருந்தனர். கடந்த மாத இறுதியில், இந்த பெட்டக துறைமுகத்துக்கு, 'டெண்டர்' விளம்பரங்கள் வெளியாகின. இது, மீனவர்களை மீண்டும் உசுப்பேற்றியுள்ளது.


latest tamil news


ஊர் ஊராக கூட்டங்கள் போட்டு துறைமுகத்துக்கு எதிராகவும், அதை கொண்டு வரும் கட்சிகளுக்கு எதிராக ஓட்டளிக்கவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. டெண்டர் குறித்து கேட்டால், பொன்.ரா., தனக்கு தெரியாது என்கிறார்.குமரி சட்டசபை தொகுதியின், அ.தி.மு.க., வேட்பாளராக நிறுத்தப்படலாம் என, நம்பப்படும், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், 'பெட்டக துறைமுக திட்டத்துக்கு, இ.பி.எஸ்., அரசு நிச்சயமாக அனுமதி வழங்காது' என, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வருகிறார். குமரி வந்த அமித்ஷாவை சந்தித்தும், 'துறைமுக திட்டம் வேண்டாம்' என்று மனு கொடுத்தார்.

என்றாலும் உறுதியான, 'ரெஸ்பான்ஸ்' இல்லை.இதனால், பாரம்பரியமாக, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்து வரும் மீனவர்கள் ஓட்டு மட்டும் அல்லாமல், ஹிந்து நாடார்கள் ஓட்டும் திசை மாறும் என்பதால், அ.தி.மு.க.,வினர் அரண்டு போயுள்ளனர். மோடி மீது அதிருப்தியில் உள்ள, கிறிஸ்துவ மீனவர்கள், பெட்டகம் காரணமாக, இந்த முறையும் அணிதிரள துவங்கி விட்டனர். சரியாக தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ள, 'பெட்டக பூதம்' வரும் நாட்களில், என்ன பாடுபடுத்த போகிறதோ என்று பீதி அடைந்துள்ளனர் உள்ளூர் பா.ஜ.,வினரும், அ.தி.மு.க.,வினரும்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
10-மார்-202110:49:54 IST Report Abuse
pattikkaattaan ஒட்டகங்கள் இருக்கு ... பெட்டகங்கள் இருக்கு .. ஒண்ணநானும் வெச்சிருப்பேன் அன்பா .. நேத்துராத்திரி ...யம்மா .. தூக்கம் போச்சுடி ... யம்மா ..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மார்-202105:12:50 IST Report Abuse
தல புராணம் பொள்ளாச்சி கதையை படி. பொண்ணுங்களை கதற அடி.. தருமபுரி கதையை கேளு, பஸ்ஸிலே வெச்சி கொளுத்து.. தூத்துக்குடி கதை தானே, அப்பாவிகளை குருவி போல சுட்டானே .. கட்டும் முன்னே இடியுது பார், அதாண்டா பாலம், தண்ணியில கரையுது பார் இதாண்டா ரோடு.. புட்டுக்கிட்டு ஓடுது பார் அதாண்டா அணைக்கட்டு, மந்திரி தொறக்கும் போதே இடிஞ்சி விழுது சுவரு.. தம்பீ திரும்பின பக்கமெல்லாம் லஞ்சம், இதான் ஆத்தீமூக்கா ஆட்சிலே மிச்சம்..
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
09-மார்-202123:50:13 IST Report Abuse
Vijay D Ratnam ஏன் அந்த துறைமுகத்தை கூடங்குளத்துக்கும் குலசேகரப்பட்டினத்துக்கும் இடையில் உவரி யில் வைக்க கூடாதா. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X