அரசியல் செய்தி

தமிழ்நாடு

ப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஈரோடு, வீரப்பன்சத்திரம் தான் மல்லிகாவின் ஊர். 'பிசினஸ்' அரசியல்வாதி என்று ஒரு பட்டம் பேச்சு வழக்கில் உண்டு. குடும்பத்தினர் பிரபலமான சமையல் எண்ணெய் நிறுவனம் நடத்துகின்றனர்.இவர், ஈரோடு மாநகர மாவட்டத்தின், அ.தி.மு.க., மகளிரணி செயலராக இருந்தார். பத்து வருடம் முன்பு அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் நட்பால், மேயர் பதவியில் அமர்ந்தார். 'தானுண்டு; தன் மிச்சருண்டுன்னு'
ப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு

ஈரோடு, வீரப்பன்சத்திரம் தான் மல்லிகாவின் ஊர். 'பிசினஸ்' அரசியல்வாதி என்று ஒரு பட்டம் பேச்சு வழக்கில் உண்டு. குடும்பத்தினர் பிரபலமான சமையல் எண்ணெய் நிறுவனம் நடத்துகின்றனர்.

இவர், ஈரோடு மாநகர மாவட்டத்தின், அ.தி.மு.க., மகளிரணி செயலராக இருந்தார். பத்து வருடம் முன்பு அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் நட்பால், மேயர் பதவியில் அமர்ந்தார். 'தானுண்டு; தன் மிச்சருண்டுன்னு' ஒருபுறம் அரசியல், மறுபுறம் மாநகராட்சி என வலம் வந்தார்.பணமும், பதவியும் தனித்தனியாகவே போதை தரக்கூடியவை. சேரும்போது என்ன ஆகும் என்று இவரை பார்த்து மக்கள் புரிந்து கொண்டார்கள். கட்சி நிர்வாகிகளை மதிக்க மாட்டார். பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து, 'அட்ராசிட்டி' செய்யும் அளவுக்கு வளர்ந்தார். அமைச்சர் ராமலிங்கம் தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என மகளிர் அணியினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

அது அமைச்சரின் குடும்பத்தில் பிரச்னைக்கு வழி அமைத்தது. அந்தக் கதை தனி.அமைச்சர் பதவியையும் , மாவட்ட செயலர் பொறுப்பையும் ராமலிங்கம் பறி கொடுத்த பின், மல்லிகாவும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். கடந்த, சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், 'சீட்' வாங்க கோகுல இந்திரா, வளர்மதி மூலம் முயன்றும், கிடைக்காததால் சோர்ந்து போனார், தற்போது, ஈரோடு கிழக்கு அல்லது மேற்கு தொகுதிக்கு குறி வைத்து சுற்றி வருகிறார்.ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீர்செல்வம் பக்கம் சென்று, பின்னர், அ.ம.மு.க.,வில் தலைகாட்டி விட்டு, மீண்டும், பன்னீருடன் அ.தி.மு.க.,வுக்கு வந்ததால் கட்சியில் இவருக்கு, 'பழம் இருக்கும் மரத்துக்கு பறந்து செல்லும் கிளி' என்ற நீளமான செல்லப்பெயரும் உண்டு.


latest tamil news


அதை சுருக்கி, ப.இ.ம.ப.செ.கி., என அவர் முன்பே கலாய்க்கும் ர.ர.,க்கள் உண்டு.கதையில், 'ட்விஸ்ட்' எங்கே வந்தது என்றால், 'செலவ பத்தி கவலையே இல்ல; 'சீட்' மட்டும் கெடச்சா போதும்!' என்று சொன்னபோது தான். 'அடேங்கப்பா...' என்று அண்ணாந்து பார்த்த முன்னாள், 'காட்பாதர்' ராமலிங்கம் கண் வைத்து விட்டார். மல்லிகாவுக்கு, 'சீட்' தரக்கூடாது என்று அவர் துாக்கிய கொடியை, மாநகர பகுதி செயலர்கள் மனோகரன், கே.சி.பழனிசாமி, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தென்னரசு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலரும் சேர்த்துப் பிடித்து கத்தி வீசுகின்றனர்.

பன்னீர்செல்வம் வெளியேறியபோது, இவர் வெளியேறியதையும், பின், அ.ம.மு.க.,வில் இவர் பேசிய ஆடியோ பதிவுகளையும் கட்சி தலைமைக்கு அனுப்பி, 'யாருக்கு வேணாலும், 'சீட்' கொடுங்க; இவருக்கு கொடுக்காதீங்க' என்று கடிதம் மேல் கடிதம் அனுப்பி, மலை போல் குவித்து விட்டனர் மஞ்சள் நகரத்து ரத்தத்தின் ரத்தங்கள்.மல்லிகாவுக்கு இது தெரியாது என சொல்ல முடியாது. ஐந்தாறு மாதமாக, பக்கத்து மாவட்டமான நாமக்கல், குமாரபாளையம், பள்ளி பாளையம் சென்று, அமைச்சர் தங்கமணி மூலம், 'சீட்' பெற, 'நான்கு வழிச்சாலையில்' பயணிக்கிறார்.

எப்போதும் போல, ஓவர் மேக்கப்புடன், ஆங்காங்கே கடைகளில், 'வெஜ் சினாக்ஸ்'ம், மதியத்தில் நாட்டுக் கோழி வறுவல், பள்ளிப்பாளையம் சிக்கன், கடல் மீன் குழம்பு என கேட்டு வாங்கி ருசித்தபடி, 'முஸ்தீபு' காட்டுகிறார்.இப்போது ஜாகை சென்னையில். 'விட்டதை பிடித்தாக வேண்டும்' என, மேயர் கால சம்பாத்தியம் முதல், எண்ணெய், 'பிசினஸ்' வருமான வரை, தண்ணியா செலவு செய்து, 'சீட்' வாங்கிட்டுத் தான் ஈரோடு வருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எல்லா தடைகளை மீறி, இவர், 'சீட்' வாங்கி வந்தாலும், உள்ளடி வேலை செய்து இவரை எதிர்த்து நிற்கும், தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு வெற்றிக்கனியை பறித்துக் கொடுக்க ஒரு படையே காத்திருக்கிறது. ''எங்கள் எதிர்ப்பை மேலிடம் புறக்கணித்தால் நாங்கள் வேறென்ன செய்ய முடியும்?'' என்கின்றனர், அ.தி.மு.க., நிர்வாகிகள்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
09-மார்-202114:58:50 IST Report Abuse
SaiBaba பேப்பர்ல நம்ம பேர் வரணும்னு எங்கம்மா சொல்வாங்க. அதாவது பெரிசா ஏதாச்சும் சாதிச்சா தான் நம்ம பேர் வரும்னு சொல்வாங்க. இப்போ இந்த மாதிரி பொம்பளைங்க பேர் மற்றும் அவப்பேர் தான் பேப்பர்ல நிறைய வருது. எங்கம்மா சொன்னது பொய்யா கோபால்?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-மார்-202112:28:48 IST Report Abuse
அசோக்ராஜ் கூகிள் பண்ணிப் பார்த்தா பயங்கரமா வருதே
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
09-மார்-202112:01:54 IST Report Abuse
தல புராணம் மொத்த வாஷ்அவுட் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X