பா.ஜ.,வில் கடைசி பெஞ்ச் மாணவனான ஜோதிராதித்ய சிந்தியா; ராகுல் விமர்சனம்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, தற்போது கடைசி பெஞ்ச் மாணவனாக இருப்பதாக காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் தவிர்க்க முடியாத காங்கிரஸ் ஆளுமையாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் இருந்த அவர், கடந்தாண்டு மார்ச் மாதம், கமல்நாத் முதல்வராக
Scindia, Rahul, BackBencher, BJP, CM, Congress, சிந்தியா, கடைசி பெஞ்ச், மாணவன், பாஜக, ராகுல், காங்கிரஸ்

புதுடில்லி: காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, தற்போது கடைசி பெஞ்ச் மாணவனாக இருப்பதாக காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தவிர்க்க முடியாத காங்கிரஸ் ஆளுமையாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் இருந்த அவர், கடந்தாண்டு மார்ச் மாதம், கமல்நாத் முதல்வராக இருந்த போது தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார். இதன் காரணமாக கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், காங்., கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் காங்., எம்.பி., ராகுல் பேசியதாவது:


latest tamil news


ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.,வில் கடைசி பெஞ்ச் மாணவனாகத்தான் இருக்க முடியும். அவர் முதல்வராக வேண்டுமென்றால் காங்கிரஸில் இருந்திருக்க வேண்டும். இப்போதும் சொல்கிறேன், பா.ஜக.,வில் இருக்கும்வரை சிந்தியாவால் முதல்வராக முடியாது. அவர் முதல்வர் கனவை நனவாக்க நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து உழைத்தால் நிச்சயம் முதல்வர் பதவி ஒருநாள் தேடிவரும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர்தான் அதைக் கேட்கவில்லை. வேறு பாதையை தேர்வு செய்துவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
10-மார்-202101:16:14 IST Report Abuse
Aarkay பப்புவைப்போல் மங்குனியில்லை அவர்
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
09-மார்-202121:27:48 IST Report Abuse
C.SRIRAM இந்த கூமுட்டை அரசியல் வாதிக்கு தன் கட்சியையே ஒழுங்காக நடத்த வக்கில்லை . இதில் அடுத்த கட்சியை பற்றி என்ன உளறல்
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
09-மார்-202120:48:09 IST Report Abuse
Venkataramanan Thiru அவர் காங்கிரஸில் இரண்டாவது ரேங்க் பெற்றுஇருந்தார் , முடலரங்குக்கு ஆசைப்பட்டு சென்ரவர்க்கு கடைசீ சீட்டில் தான் இடம் கிடைத்தது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X