பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசிக்கான உற்பத்தி மையம் இந்தியா; ஐ.எம்.எப் புகழாரம்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான் என ஐ.எம்.எப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ஹன்சா மேத்தா ஒருங்கிணைத்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் சுகாதார
India, VaccinePolicy, IMF, GitaGopinath, StandsOut, இந்தியா, கொரோனா, தடுப்பூசி, ஐஎம்எப், கீதா கோபிநாத்

புதுடில்லி: உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான் என ஐ.எம்.எப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ஹன்சா மேத்தா ஒருங்கிணைத்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா, கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


latest tamil news


கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி சார்ந்த கொள்கை முடிவுகளில் இந்தியா தனித்து நிற்கிறது. உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் எதுவென்று நாம் பார்த்தால், அது இந்தியா தான். அதிலும் அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வரும் சீரம் இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
09-மார்-202121:33:49 IST Report Abuse
RaajaRaja Cholan இங்க அறவோன் வாத்து வாந்தி எடுக்கலியா
Rate this:
Cancel
09-மார்-202118:52:05 IST Report Abuse
ஆப்பு இன்னிக்கும் தடுப்பூசி வழங்குவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அதை தடுக்க, இந்தியா QUAD நாடுகளிடம் இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பை அதிகபடுத்த முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டுகொள்ள வில்லை. தடுப்பூசி தயாரிக்க ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு வகை குரங்கு இனத்திலிருந்து எடுக்கப்படும் மூலப் பொருள் தேவை. அதை வாங்க நம்மிடம் போதிய நிதியில்லை என்பதே உண்மை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-மார்-202118:37:30 IST Report Abuse
J.V. Iyer வெற்றிமீது வெற்றி வந்து ஹிந்துஸ்தானை சேரும். அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் மோடிஜியை சேரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X