ம.பி.,யில் மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை; மத சுதந்திர சட்ட மசோதா நிறைவேற்றம்

Added : மார் 09, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் மத சுதந்திர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.'லவ் ஜிகாத்'தை தடுக்க மத்திய பிரதேச அரசு கடந்த ஜனவரி 9-ம் தேதி அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மத சுதந்திர சட்ட மசோதா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான விவாதம் ம.பி., சட்டசபையில் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. அப்போது,
Madhya Pradesh, Assembly Passes, AntiConversionBill, மத்திய பிரதேசம், சட்டசபை, மத சுதந்திர மசோதா, நிறைவேற்றம்

போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் மத சுதந்திர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

'லவ் ஜிகாத்'தை தடுக்க மத்திய பிரதேச அரசு கடந்த ஜனவரி 9-ம் தேதி அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மத சுதந்திர சட்ட மசோதா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான விவாதம் ம.பி., சட்டசபையில் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. அப்போது, சட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதற்கு மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பதிலளித்தார்.


latest tamil news


பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலம் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் 60 நாட்களுக்கு முன்பாக கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மத போதகரும் 60 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் வரை மதமாற்ற திருமணங்கள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
santha kumar - ruwi,ஓமன்
10-மார்-202101:43:47 IST Report Abuse
santha kumar மதம் மாறுவதில் எந்த தவறும் இல்லை. அதை கட்டாயப்படுத்துவதுதான் தவறு. இங்கு சில வாசகர்கள் சொல்கிறார்கள் , ஹிந்து மதம் தான் முதன்மையானது. இந்த வார்த்தையை ஒரு ஹிந்து சொன்னால் மற்ற மதத்தினரும் அவரவர் மதத்தை உயர்த்தி சொல்லத்தான் செய்வர். ஹிந்து மதம் ஒருவருக்கு எப்படி முக்கியமோ அதேபோல் வேற்று மதத்தினருக்கும் அவர்கள் மதம் முக்கியமே. ஒருவர் தான் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வார் . அவர் எந்த முடிவு எடுத்தாலும் மற்றவர் வாழத்தான் செய்ய வேண்டுமே தவிர எதிர்க்க கூடாது. சில வாசகர்கள் சொல்கிறார்கள், ஒருவர் முஸ்லீம் மதத்திற்கு மாறினால் தீவிரவாதி என்றும், கிறிஸ்தவ மதத்தை பின் பற்றினால் அந்நிய கைக்கூலி என்றும் கேலி செய்கின்றனர். இது தான் தவறு எண்டு சொல்கிறேன். ஒருவர் வேற்று மதத்தை மதிக்காதவர் முதலில் அவர் ஹிந்துவாகவே இருக்க முடியாது.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
09-மார்-202122:37:06 IST Report Abuse
TamilArasan CD வைத்து கிட்டினியை சட்னி செய்த பாஸ்டரை முதலில் தூக்கி உள்ளே போடுங்க...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
09-மார்-202121:38:07 IST Report Abuse
Rasheel பாலைவன கூட்டம் இப்பொது ப்ளேட் டொனேஷன் செய்கிறது. இதற்கு அவர்கள் வழிபாட்டு தலத்தில் கூறும் காரணம், இந்தியாவில் ஒவ்வரு ஹிண்டுவின் உடம்பிலும் அரேபிய ரத்தம் பாய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X