அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (130)
Share
Advertisement
சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு
DMDK, ADMK, Alliance, Break, தேமுதிக, அதிமுக, கூட்டணி, விலகல்

சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பா.ம.க.,விற்கு 23 தொகுதிகள், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், தேமுதிக.,விற்கு 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.


அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக ! தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிரடி

latest tamil news



விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து (மார்ச் 09) அதிமுக, பா.ஜ., கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துணைச் செயலாளர் பார்த்த சாரதி கூறுகையில், 'தனித்துப் போட்டியிடுவது குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,' என்றார்.

எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். இன்று தான் எங்கள் அனைவருக்கும் தீபாவளி. அதிமுக.,வில் உள்ள கே.பி.முனுசாமி, பா.ம.க.,வின் ஸ்லீப்பர் செல்லாக, அவர்களது கட்சிக்கு ஆதரவாக உள்ளார்,' என்றார்.

கடலூரில் நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபரபாகரன் கூறியதாவது: நாங்க கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால், ஒவ்வொரு சீட்டும் பறிக்கப்படும். எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தோல்வி அடைவார். சாணக்கியனாக இருந்தது போதும், சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது. விஜயகாந்த், பிரேமலதாவை பார்த்திருப்பீர்கள். இருவரையும் கலந்து, இனி என்னை பார்ப்பீர்கள்.
சட்டசபை தேர்தலில் அதிமுக.,வுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதிமுக.,விற்கு இனி இறங்குமுகம்தான். குகையில் இருந்து சிங்கம் வெளியே வந்துள்ளது. இனி வேட்டைதான். தலையே போனாலும் தேமுதிக தன்மானம் இழக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
09-மார்-202122:14:20 IST Report Abuse
தல புராணம் அடிமை அதிமுக, பா-சிச பாஜக கூட்டணிக்கு கடைசி சங்கும் ஊதியாச்சு ..
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11-மார்-202100:03:12 IST Report Abuse
Aarkayமுதலில் உனக்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? எதோ எல்லோரும் சொல்கிறார்களே என்று உளறுகிறாய். இந்திராவிற்கு கட்டுமரம் மண்டியிட்டதெல்லாம் தெரியுமா?...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11-மார்-202100:04:18 IST Report Abuse
Aarkayஇந்திராவிற்கு கட்டுமரம் அடிமையாய் மண்டியிட்டது எவ்வகை?...
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-மார்-202121:05:41 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நுணலும் தன் வாயால் கெடும் என்ற மூதுரையை - சுதீஷும் விஜய் பிரபாகரனும் படித்திருக்க நியாயமில்லை.
Rate this:
Cancel
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
09-மார்-202120:48:33 IST Report Abuse
பேப்பர்காரன் இந்த விஷயம் விஜயகாந்துக்கு தெரியுமா சுதீசு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X