அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க: அமைச்சர் ஜெயக்குமார்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, எங்கிருந்தாலும் வாழ்க என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக உடன் 3 சுற்றுகளாக சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்களின் விலகல் முடிவு துரதிர்ஷ்டவசமானது. கூட்டணியில்
DMDK, ADMK, Jayakumar, தேமுதிக, கூட்டணி, விலகல், அதிமுக, அமைச்சர், ஜெயக்குமார்

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, எங்கிருந்தாலும் வாழ்க என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக உடன் 3 சுற்றுகளாக சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்களின் விலகல் முடிவு துரதிர்ஷ்டவசமானது. கூட்டணியில் இருந்து விலகுவதால் சேற்றை வாரி இறைக்க கூடாது. நாங்கள் கடைசி வரை கூட்டணி தர்மத்தை மீறவில்லை. கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் கீழ்த்தரமாக பேசக்கூடாது. கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்தால் தேமுதிக.,விற்கு எங்களால் பதிலடி கொடுக்க முடியும். தேமுதிக.,விற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்துவிட்டு சுதீஷ் பேசக்கூடாது.


latest tamil news


அதிமுக தோற்கும் எனக் கூறும் சுதீஷ் ஜோசியரா? 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெல்லும். தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், இல்லையெனில் பதிலடி கொடுப்போம். இதனால் அதிமுக.,விற்கு பாதிப்பு இல்லை; தேமுதிகவிற்கு தான் பாதிப்பு. பா.ம.க., பா.ஜ.,வின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கினோம். தேமுதிக.,வின் செல்வாக்கு, வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டுப் பெறுவது தான் புத்திசாலித்தனம். புத்திசாலித்தனத்துடன் செயல்படவில்லை எனில் என்ன செய்வது?. கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மார்-202105:13:12 IST Report Abuse
தல புராணம் பொள்ளாச்சி கதையை படி. பொண்ணுங்களை கதற அடி.. தருமபுரி கதையை கேளு, பஸ்ஸிலே வெச்சி கொளுத்து.. தூத்துக்குடி கதை தானே, அப்பாவிகளை குருவி போல சுட்டானே .. கட்டும் முன்னே இடியுது பார், அதாண்டா பாலம், தண்ணியில கரையுது பார் இதாண்டா ரோடு.. புட்டுக்கிட்டு ஓடுது பார் அதாண்டா அணைக்கட்டு, மந்திரி தொறக்கும் போதே இடிஞ்சி விழுது சுவரு.. தம்பீ திரும்பின பக்கமெல்லாம் லஞ்சம், இதான் ஆத்தீமூக்கா ஆட்சிலே மிச்சம்..
Rate this:
sriram - Chennai,இந்தியா
10-மார்-202112:39:56 IST Report Abuse
sriramநீங்க சொன்னதெல்லாம் பரவாயில்ல ஆட்சில இருக்கறவன் செஞ்சது. ஆனா பிரியாணி கடை, ப்யூட்டி பார்லர்னு ஆட்சி இல்லாத போதே வெச்சு செஞ்சவங்கள ஆட்சில ஒக்கர வெச்சா என்ன ஆகும். என்ன தான் சொன்னாலும் 2006லிருந்து 2011வரை பட்ட தண்ணி கஷ்டமும், பவர் கட்டும் மறக்க முடியுமா....
Rate this:
skandh - Chennai,இந்தியா
11-மார்-202117:10:27 IST Report Abuse
skandhதல, ஸ்டாலின் MISSA வா MISA வா ஒழுங்கா போய் சொல்லாம சொல்லு ....
Rate this:
Cancel
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
09-மார்-202122:44:38 IST Report Abuse
Velayutharaja Raja Big loss to admk
Rate this:
Cancel
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
09-மார்-202122:44:13 IST Report Abuse
Velayutharaja Raja Big loss to ada
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X