புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர்.காங்.,- பா.ஜ., இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. என்ஆர் காங்., 16 தொகுதிகளிலும், பா.ஜ., மற்றும் அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பா.ஜ., அதிமுக.வுடன் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. தொகுதி பங்கீடு மற்றும் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட விவகாரத்தில் இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு கூட்டணி உறுதியானது.
புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. என்ஆர் காங்., தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் ஆகியோர், பா.ஜ.,மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தொடர்ந்து பா.ஜ., அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி 14 தொகுதிகளில் இருந்து இரு கட்சிகளும் பிரித்து கொள்ள உள்ளன.

இதன் பின்னர் நிர்மல் குமார் சுரானா கூறியதாவது: என்ஆர் காங்கிரஸ், பா.ஜ., அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடும். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE