அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேமுதிக., விலகல் : அதிமுக., கூட்டணிக்கு லாபமா, நஷ்டமா? : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (96)
Share
Advertisement
சென்னை : சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக., கூட்டணியிலிருந்து தேமுதிக., விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.தமிழகத்தில் அடுத்தமாதம் ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் இடையேயான கூட்டணி வெகு ஜோராக நடந்து வருகிறது.
DMDK, Vijayakanth, TamilNadu, TNElection2021,

சென்னை : சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக., கூட்டணியிலிருந்து தேமுதிக., விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

தமிழகத்தில் அடுத்தமாதம் ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் இடையேயான கூட்டணி வெகு ஜோராக நடந்து வருகிறது. அதிமுக., கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது விஜயகாந்தின் தேமுதிக., கட்சி. இவர்கள் 40 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் அதிமுக., 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்தாகவும் கூறப்படுகிறது. இதை தேமுதிக., ஏற்காத நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.


latest tamil news
இந்நிலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக., அலுவலகத்தில் இன்று அக்கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ''தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால் இன்றிலிருந்து (மார்ச் 09) அதிமுக, பா.ஜ., கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக'' அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக., இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது. அடுத்து இவர்கள் யார் பக்கம் போவார்கள், தனித்து நிற்பார்களா அல்லது கமல், ஸ்டாலின் பக்கம் சாய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இவர்களின் விலகலால் அதிமுக., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதுதொடர்பாக டுவிட்டரில் #DMDK என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. அதோடு #Vijayakanth, #AIADMK ஆகிய ஹேஷ்டாக்குகளும் டிரெண்ட் ஆகின.


latest tamil news

தேமுதிக., விலகல் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள் :* தேமுதிக., விலகியதால் அதிமுக., கூட்டணிக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது. இது நல்ல விஷயம் தான்.

* கடைசியில் தேமுதிக.,வும் குடும்ப கட்சியாக மாறப்போகிறது.

* அடுத்து தினகரனின் கட்சி பக்கம் விஜயகாந்த் போக வாய்ப்புள்ளது.

* என்னை கேட்டால் பேசாமல் இவர் கமலின் மக்கள் நீதி மையத்துடன் இணைந்து கூட்டணி வைக்கலாம்.

* அதிமுக., திமுக., கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த சமயத்தில் தேமுதிக., அவர்களுக்கு மாற்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இந்த பெரிய கட்சிகளுக்கு முன்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. எனவே இந்த முறை மாற்று சக்தியாக கமல் இருப்பார் என நம்புகிறேன்.


latest tamil news
* கடந்த தேர்தலில் தேமுதிக.,வை விட குறைந்த ஓட்டு சதவீதம் பெற்ற பா.ம.க.விற்கு அதிக சீட்டும், தேமுதிக.,விற்கு குறைந்த சீட்டு ஒதுக்குவதும் சரியாக தெரியவில்லை. தேமுதிக.,வின் விலகல் அதிமுக., கூட்டணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

* சசிகலா சகாக்களை விலக்கியது போல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தேமுதிக.,வும் கழற்றிவிடப்பட்டுள்ளது.

* ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இங்கிருக்கும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளுக்கு தெளிவான சித்தாந்தங்கள் இல்லை. அவர்களின் நோக்கம் அதிகாரத்திற்கு வந்து பணம் சம்பாதிப்பது மட்டுமே. இப்படி இருப்பதற்கு பேசாமல் அவர்கள் பிச்சை எடுக்கலாம், கடன் வாங்கலாம் அல்லது இன்னும் விரும்பியதை செய்யலாம்.


latest tamil news
* தமிழகத்தை பா.ஜ., இழந்து விட்டது என்று தான் நினைக்கிறேன். காரணம் அதிமுக., அமமுக., இணையும் என எதிர்பார்த்தார்கள். இப்போது தேமுதிக.,வும் விலகிவிட்டது. கடந்தந 2019ல், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக.,வை விரும்பியது பாஜக தான். ஒருவேளை அமமுக., தேமுதிகவும் ஒன்றாக இணைந்தால் நிச்சயம் அதிமுக.,வுக்கு ஆட்டம் முடிந்தது என்று தான் அர்த்தம்.

* நல்ல முடிவு. மதவாத சக்திகளுக்கு கேப்டன் விஜயகாந்த் வைத்த ஆப்பு இது.

இப்படி பலரும் தங்களது கருத்துக்களை #DMDK, #Vijayakanth, #TamilNadu, #TNElection2021 உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
10-மார்-202110:28:16 IST Report Abuse
periasamy ஏற்கனவே நிறைய பின்னடைவில் உள்ள அதிமுக கூட்டணிக்கோ மேலும் பின்னடைவுதான் ஒரு தொகுதிக்கு ஆயிரம் ஒட்டு என்றாலும் இருநூற்றி முப்பத்தி நாலு இந்டு ஆயிரம் ரெண்டு லட்சத்து முப்பத்தி நாலாயிரம் என்பது பெரிய இழப்புதான்
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
10-மார்-202108:13:20 IST Report Abuse
S Bala தேமுதிக என்பது விஜயகாந்த் மட்டுமே. அவர் செயல்படாத நிலையில் தேமுதிக செயலிழந்து போனது உண்மை. ஆனால் அவர்கள் இல்லாத அதிமுக கூட்டணியின் இழப்பு மிக அதிகமாக இருக்கும். நிச்சயம் ஜெயிக்கும் கட்சிக்கும் நிச்சயம் தோற்கும் கட்சிக்கும் வெறும் இரண்டு சதவிகித வாக்குகளே வித்தியாசம். அதிலும் காமால கட்சி, சைமன் கட்சி வாக்குகள் உடன் தேமுதிக வாக்குகளும் சேர்ந்தால் அதிமுக வெல்வது கடினம்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
10-மார்-202101:07:09 IST Report Abuse
Aarkay நூறு சதவிகிதம் லாபமே விஜயகாந்த் உடல்நிலை சரி இல்லாத நிலையில், பிரச்சாரத்திற்கு வர இயலாத நிலையில், அந்தக்கட்சி கூட்டணியில், வீண் முதுகுச்சுமையே பிரேமலாதாவிற்காகவோ, சுதீஷிற்காகவோ யாரும் வோட்டுப் போடப்போவதில்லை. தனியாய் நின்றால், அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது உறுதி பேராசை, பெரு நஷ்டம் கட்சியை கலைத்துவிட்டால் சேதாரமுமின்றி தப்பலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X