சென்னை: குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1,500 மற்றும் ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் தருவதாக அதிமுக அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 'பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை என குடும்பத் தலைவியரே கேட்பார்கள்' என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தை முதன்மை செயலர் கே.என்.நேரு வெறறிகரமாக நடத்திக் காட்டிவிட்டார். திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரள்வதும் தெரிகிறது. குடும்பத் தலைவியருக்கு மாதம்தோறும் ரூ.1,000 'உரிமைத் தொகை' என அறிவித்தேன். உடனே, அடிமை அதிமுக ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள்.

பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? குடும்பத்தலைவியரே இதனை கேட்பார்கள். அவர்களிடம் தமிழகம் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. ஓயாது உழைப்போம்; இலக்கை நோக்கி ஒன்றுபட்டு உழைப்போம். தேர்தல் களத்தில் வெற்றிச் சிகரத்தை காண்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE