அரசியல் செய்தி

தமிழ்நாடு

30 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட தினமும் 25 லட்சம் பேராக அதிகரிக்க வேண்டும்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி தினமும் 14 லட்சம் (1.4 மில்லியன்) டோஸ் வீதத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிலையைதான் எட்ட முடிந்துள்ளது. 30 சதவீத இலக்கை எட்ட வேண்டுமானால் தினந்தோறும் 25 லட்சம் (2.5 மில்லியன்) தடுப்பூசி போட வேண்டும். அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்(டிசம்பர்) . இந்தியா 2வது நாடுதற்போது தினமும் 14

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி தினமும் 14 லட்சம் (1.4 மில்லியன்) டோஸ் வீதத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிலையைதான் எட்ட முடிந்துள்ளது. 30 சதவீத இலக்கை எட்ட வேண்டுமானால் தினந்தோறும் 25 லட்சம் (2.5 மில்லியன்) தடுப்பூசி போட வேண்டும். அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்(டிசம்பர்) .



latest tamil news





இந்தியா 2வது நாடு



தற்போது தினமும் 14 லட்சம் (1.4 மில்லியன்) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் இந்தியா, தடுப்பூசி டோஸ் அளித்து வருவதில் உலகத்தில் 2 வது அதிவேகமான நாடாக இருந்து வருகிறது.
யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா பொருளாதார நிபுணர் தன்வீ குப்தா ஜெயின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வரும் நாட்களில் இந்தியாவின் தடுப்பூசி போடப்படும் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், தனியார் துறையின் பங்களிப்பு உயர்ந்து தினசரி 25 லட்சம் டோஸ் அளித்து டிசம்பருக்குள் 30 சதவீத மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய முடியும்.
நம்நாட்டில் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போட துவங்கப்பட்டது. முதல் கட்டமாக உலகளாவிய போக்குக்கு ஏற்ப முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக பாதிக்கப்படக்கூடிய மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மார்ச் 7 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 21 மில்லியன் டோஸ் நிர்வகிக்கப்பட்டு, தினசரி 14 லட்சம் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவே அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 21.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


latest tamil news



இரண்டு டோஸ் தடுப்பூசிபோடப்பட்ட அடிப்படையில் மக்களின் விகிதத்தைப் பொறுத்தவரை, இஸ்ரேல் 50 சதவீதத்திலும், ஐக்கிய அரபு எமிரேட் 32 சதவீதத்திலும், பிரிட்டன் 17 சதவீதத்திலும், அமெரிக்கா இன்றுவரை 13 சதவீதத்திலும் உள்ளது, இந்தியா குறைவாக உள்ளது 1 சதவீதம்.

2021 இறுதிக்குள் உலக மக்கள் தொகையில் 18.7 சதவீதம் பேர் தடுப்பூசி போடுவார்கள் என்று யுபிஎஸ் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
10-மார்-202112:42:26 IST Report Abuse
R MURALIDHARAN கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போடலாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X