அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Updated : மார் 11, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (45+ 42)
Share
Advertisement
சென்னை :''மக்களுக்கு எதிரிகளாக உள்ள எல்லாருமே, எனக்கும் எதிரிகள் தான். இனி சுற்றி சுற்றி அடிப்பேன்,'' என, கமல் கூறினார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முன்னிலையில், சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின், ஐ.ஜே.கே., கட்சிகள், நேற்று கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இக்கூட்டணியை, முதல் கூட்டணி என அழைக்குமாறு, கமல் கோரிக்கை வைத்தார்.
 'சுற்றி சுற்றி அடிப்பேன்;  தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

சென்னை :''மக்களுக்கு எதிரிகளாக உள்ள எல்லாருமே, எனக்கும் எதிரிகள் தான். இனி சுற்றி சுற்றி அடிப்பேன்,'' என, கமல் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முன்னிலையில், சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின், ஐ.ஜே.கே., கட்சிகள், நேற்று கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இக்கூட்டணியை, முதல் கூட்டணி என அழைக்குமாறு, கமல் கோரிக்கை வைத்தார்.

மேலும், மக்கள் நீதி மய்ய கூட்டணியின், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், இன்று வெளியிடுகிறார். நடிகை ஸ்ரீப்ரியா, மயிலாப்பூர் தொகுதியிலும், கமல், வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிடப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் அளித்த பேட்டி:கூட்டணிக்கு நிறைய பேர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை அரவணைக்க வேண்டிய கடமை, எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது. தே.மு.தி.க., மட்டுமல்ல, யார் வந்தாலும் அரவணைப்போம். மக்களுக்காக வந்த முதல் அணி இது.

இங்கு எல்லாருக்கும் வேலை இருப்பதால், கட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட, சில சமயம் எனக்கு தெரியவில்லை. தே.மு.தி.க.,வுக்கு பொன்ராஜ் அழைப்பு விடுத்ததை, நான் செய்தியில் பார்த்து தான் அறிந்தேன்.காந்தி ஆரம்பித்த அணியில், ராஜாக்களும் ராணிக்களும் முதலில் வரவில்லை. பின்னர் தான் வந்தனர். சமீப நாட்களாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, நான் கடுமையாக தாக்குவதாக கூறுகின்றனர். ஆரம்பத்தில், நான் அவரை பற்றி பேசுவதில்லை என்றனர். இப்போது, இப்படி சொல்கின்றனர்.

நான் ஏற்கனவே கூறியது போல, மக்களுக்கு எதிரி என முடிவான பின், யாராக இருந்தால் என்ன, மிதிக்க வேண்டியது தானே.

ஒரு திரைப்படத்தில், சுரங்கப்பாதையில் மாட்டிக் கொண்ட புருஸ்லீயை சுற்றி, பலரும் அடிக்க காத்திருக்கையில், புருஸ்லீயின் முதல் அடி, அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை பல்ப் மீது தான் விழுந்தது. அடுத்து, அவர் அடிக்கிற ஆள் எல்லாம், அவருக்கு எதிரி தான்.

அதுபோல், மக்களுக்கு எதிரி என்றான பின், அவர் என்ன; இவர் என்ன; எல்லாரையும் மிதிக்க வேண்டியது தான். இனி நான் அடிக்கிற ஆளெல்லாம், எனக்கு எதிரி தான். சுற்றி சுற்றி அடிக்க வேண்டியது தான். அதைதான் செய்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு, கமல் கூறினார்.

சரத்குமார் கூறுகையில், ''இந்த கூட்டணியின் தலைவர் மட்டுமல்ல, முதல்வர் வேட்பாளரும் கமல் தான். மக்களுக்கு தேவையான மாற்றத்தை தர, அனைவரும் ஒன்றுசேர்ந்தால் முடியும். அதன் அடிப்படையில், இந்த கூட்டணி உருவாகியுள்ளது. 69 இடஒதுக்கீடு, ஏற்கனவே சர்ச்சையாக உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வரும்போது, இடஒதுக்கீடு பிரச்னைகள் தெரிய வரும்,'' என்றார்.ரவி பச்சமுத்து கூறுகையில், ''இந்த கூட்டணி, தமிழகத்திற்கு விடிவெள்ளியாக இருக்கும். இதற்கு முன், மக்கள் நல கூட்டணி தோற்று விட்டது. ஆனால், இது ஆட்சி அமைக்க வந்த அணி,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (45+ 42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
17-மார்-202108:32:35 IST Report Abuse
shyamnats நாராயணா, கொசு தொல்லை தாங்க முடியலையே?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
16-மார்-202120:00:01 IST Report Abuse
bal இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் இல்ல டூப் போட...
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
15-மார்-202116:37:49 IST Report Abuse
திராவிஷ கிருமி சினிமாவும் கைவிட்டு விட்டது... அரசியலும் கை கொடுக்குமா என்று தெரியவில்லை... அதுதான்... உலக்கை உளருது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X