பொது செய்தி

தமிழ்நாடு

இலவச அறிவிப்புகளால் கடன் சுமை அதிகரிக்கும்: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

Updated : மார் 10, 2021 | Added : மார் 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை: தேர்தலில் பெண்களின் ஓட்டு வங்கியை கவர, தி.மு.க.,- அ.தி.மு.க.,போட்டியாக அறிவித்துள்ள, சலுகை திட்டங்களால், தமிழகத்தின் கடன் சுமை பல மடங்கு அதிகரிக்கும் என, பொருளாதார நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.'குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., ஆகியோர்,
இலவச அறிவிப்புகள்,கடன் சுமை, பொருளாதார நிபுணர்கள், எச்சரிக்கை

கோவை: தேர்தலில் பெண்களின் ஓட்டு வங்கியை கவர, தி.மு.க.,- அ.தி.மு.க.,போட்டியாக அறிவித்துள்ள, சலுகை திட்டங்களால், தமிழகத்தின் கடன் சுமை பல மடங்கு அதிகரிக்கும் என, பொருளாதார நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

'குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., ஆகியோர், 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்; ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்' என, அறிவித்துள்ளனர். வாக்காளர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசினால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு ஆளும் அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும் தள்ளப்பட்டுள்ளன. ஏட்டிக்கு போட்டியாக, ஓட்டுக்கு விலை பேசும், இலவசங்கள் மற்றும் சலுகை திட்டங்கள், தேர்தலுக்கு பின் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற, தொலைநோக்கு பார்வை இல்லாமல் கட்சிகள், இந்த தேர்தலில் இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியுள்ளன.இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள்:


கடன் சுமை எகிறும்
latest tamil news
பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன்:
இடைக்கால 'பட்ஜெட்' படி தமிழக அரசின் கடன் சுமை தற்போது, 4 லட்சத்து, 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது, 5 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாயாக வரும் ஆண்டில் கூடும் என கூறியிருக்கிறார்கள். இதுவே கிட்டதட்ட, 85 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகும்.கிராமப்புற பெண்களின் ஓட்டு வங்கியை மனதில் வைத்தே இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். இது அரசின் கடன் சுமைகளை இன்னும், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும். அரசின் பற்றாக்குறை ஒரு லட்சத்து, 15 ஆயிரம் கோடி கூடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கான வருமானம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. இன்னும் கடன் சுமை ஏறிக்கொண்டு தான் செல்லும்.நிதி பற்றாக்குறைக்கு வாய்ப்புlatest tamil news


Advertisementஆடிட்டர் கார்த்திகேயன்:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்குவது என்றால், அரசுக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட, 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மத்திய அரசின் ஜி.எஸ்.டி.,கவுன்சில் மூலம் கையாளப்படுகிறது. தற்போது, தமிழகத்திற்கு டாஸ்மாக், பெட்ரோலிய பொருட்கள், மோட்டார் வாகன வரி விதிப்பு, பதிவுத்துறை போன்ற வகைகளில்தான் வருமானம் வருகிறது. மாதம், 1,000 அல்லது 1,500 ரூபாய் என்ற அறிவிப்பு, ஏழை மக்களுக்கு கூடுதல் வருமானமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் அடிப்படை, 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'(யு.பி.ஐ.,) என்கிற கோட்பாட்டின்கீழ் அமைந்துள்ளது.பின்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளில் இந்த கோட்பாட்டை முயற்சித்தனர். அதன்படி, வறுமை கோட்டிற்கு அருகாமையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், வித்தியாசம் ஏதுமின்றி காலம்தோறும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசால் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். வளர்ச்சிக்கான திட்டப்பாதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால், இதை சரிசெய்து கொள்ள முடியும்.ஒருவேளை தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியாத பட்சத்தில், கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அல்லது வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியில் பற்றாக்குறை ஏற்படும்.


அமலாவது கேள்விக்குறியே!latest tamil news
ஆடிட்டர் அரவிந்த் தங்கம்:
கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பெண்கள் நிர்வகிக்கும், 29 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, இது, 33 லட்சமாக அதிகரித்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். இந்த குடும்பங்களுக்கு, மாதம், குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வழங்குவது என்றால் அரசுக்கான வருவாயில் இருந்து ஆண்டுக்கு, இரண்டு சதவீதம்தான் செலவு செய்யவேண்டியிருக்கும்; சாத்தியமானது.இதுவே அனைத்து குடும்பங்களுக்கும், 1,000 ரூபாய் வழங்கினால் ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி (13 சதவீதம்) செலவு செய்யவேண்டியிருக்கும். கல்விக்கு, 40 ஆயிரம் கோடி, விவசாயத்துக்கு, 17 ஆயிரம் கோடி, சுகாதாரத்துக்கு, 15 ஆயிரம் கோடி என்ற செலவுகளை விட இத்தொகை அதிகம். இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.


சவாலான திட்டம்!latest tamil news
பாரதியார் பல்கலை முன்னாள் பொருளாதார பேராசிரியர் கோவிந்தராஜன்:
தேர்தல் அறிவிப்புகளில் சில அம்சங்கள் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தினால், தமிழகத்துக்கு நன்மை பயக்கக்கூடியதாக அமையும். இருந்தபோதும், இதுவொரு சவாலான செயல்பாடாக இருக்கும்.நிராகரிக்க வேண்டும்!latest tamil news
டாக்டர் சந்தானம், ஓய்வு பெற்ற பொதுமேலாளர், நபார்டு வங்கி:
பணம் என்ற மோகத்தைக் காட்டி பெண்களின் ஓட்டுகளை தன் கட்சிக்குப் பெற முயற்சிப்பது ஒரு பத்தாம் பசலி யுக்தி என்று தோன்றுகிறது. 'பணம் ஒரு மீடியம் தான். அது ஒரு இரண்டு பக்க கத்தி போன்றது. அதை சரிவர திட்டங்கள் இல்லாது கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர் போன்றது' என்றே, பொருளாதாரம் அறிந்தவர்கள் கூறுவர். இந்த அறிவிப்பு என்பது, 'வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்' என்ற பாடலை நினைவூட்டுகிறது. பெண்கள் இது போன்ற போலி உத்தரவாதங்களுக்கு மயங்காது, தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஓட்டுக்காக தரப்பட்டுள்ள இந்த உறுதிமொழியின் நோக்கத்தை புரிந்து, அதை நிராகரிக்க வேண்டும்.


நிதிச்சுமை அதிகரிக்கும்!latest tamil news
எஸ். அருண்குமார், 42, ஆடிட்டர், பொள்ளாச்சி:
இந்த அறிவிப்பின் படி, பணக்காரர்களுக்கும் பணம் போய்ச் சேரும். அவர்கள், ஒரு நேர ஓட்டல் செலவுக்கு அதை செலவிடுவார்கள். அரசின் நிதிச்சுமையை பல மடங்கு அதிகரித்து விடும். இப்படி மொத்தமாக எல்லோருக்கும் வழங்காமல், ஆதரவற்ற பெண்கள், கணவனை இழந்தவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் என கணக்கெடுத்து, அவர்களுக்கு மட்டும் வழங்குவதே சரியாக இருக்கும்.


மக்கள் மீதே திணிக்கப்படும்!
latest tamil newsஆர். சம்பத் குமார், 36, ஆடிட்டர், பொள்ளாச்சி:
'பசித்தவனுக்கு மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடு' என்ற பழமொழியை நினைவுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. இப்படி எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் மாதந்தோறும் பணம் கொடுப்பது, அரசின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்கும். அந்தச் சுமை, மறைமுகமாக மக்களின் மீதே திணிக்கப்படும். அதற்கு பதில், பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி குறைக்கப்படும், பஸ் கட்டணம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து செயல்படுத்தினால், ஏழை, நடுத்தர மக்கள் வரை பயனடைவர்.


ஆட்சிக்கு வந்தால் தெரியும்latest tamil news
எஸ்.சுவர்ணகாந்தி, கல்லுாரி பேராசிரியர், பொருளாதாரத்துறை, உடுமலை:
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்குமா என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியும். ஆட்சிக்கு வந்தபின், 'வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்' என, ஏதேனும் ஒரு வரம்பு நிர்ணயிக்கலாம். தேர்தல் அறிக்கையை, எவருமே ஞாபகம் வைத்துக் கொள்வதும் கிடையாது. வறுமை நிலையில் உள்ளவர்கள், அதை நினைவுபடுத்திக் கொள்வர். இன்றைய காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களே, மாதந்தோறும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகின்றன. அவ்வகையில், அரசு நினைத்தால், குடும்பத் தலைவிகளுக்கு, உதவித் தொகை வழங்க முடியும்.இலவச அறிவிப்புகள் வேண்டாம்!
latest tamil newsஎஸ். சிவபிரகாசம், ஆடிட்டர், உடுமலை:
தேர்தல் அறிக்கைகள் கவர்ச்சிகரமாக மட்டுமே இருக்கும். ஆட்சிக்கு வந்து, திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கும். ஏற்கனவே, அரசு கஜானா காலியாக உள்ளது. தவிர, தமிழக அரசின் கடன், 5.7 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு, கூடுதலாக கடன் பெற வேண்டியிருக்கும். மின்சாரம், பஸ் என பல்வேறு வழிகளில் கட்டணங்கள் உயர்த்தப்படும். இது மக்களை பெரிதும் பாதிப்படைய செய்யும். தொழில் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகள் இருக்க வேண்டும். இலவச அறிவிப்புகள் இனி வேண்டாம்.


கடன் சுமையில் தத்தளிக்கும்!
latest tamil newsபேராசிரியர் ஹேமா ஸ்ரீகுமார், பொருளாதார துறை தலைவர், புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி, குன்னுார், நீலகிரி மாவட்டம்
: மகளிருக்கு, 1,000 ரூபாய் கொடுப்பதாக, வாக்குறுதி கொடுத்து மக்கள் ஓட்டுக்கள் பெற்று ஆட்சிக்கு வந்தால், மறைமுக வரி அதிகரிக்கும். 1.97 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், ஒரு கார்டுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தால் மாதத்துக்கு, 2,000 கோடி ரூபாய் என ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் சுமை ஏற்படும்.இதுவரை, 5.7 லட்சம் கோடி ரூபாய் சுமை இருக்கும்போது, 2022ல் மட்டும் அரசுக்கு, 6 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து விடும். தற்போதே, பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் நிலையில், இவை மேலும் கூடி, பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரிக்கும். கடன் சுமையால் தமிழகம் தத்தளிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால் குடும்பமும் மேம்படும்; பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.மக்களுக்கு தான் பாதிப்பு!latest tamil news
தனஞ்செயன், ஆடிட்டர், திருப்பூர்:
தமிழக அரசுக்கு ஏற்கனவே, ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு தேவைப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு 1.26 லட்சம் கோடி வரை செலவிட நேரிடும். தமிழக அரசின் கடன், 10 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது, ஐந்து லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதுபோன்ற இலவச திட்டங்களை செயல்படுத்தினால், 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை அதிகரிக்கும். கடன் வாங்கி, இலவசங்களை செயல்படுத்துவது சரியல்ல. அரசின் நிதிச் சுமை அதிகரித்தால், ஏதேனும் ஒரு வகையில், மக்கள்தான் பாதிக்கப்படுவர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மார்-202103:25:28 IST Report Abuse
ஆப்பு கடன் சுமையா? யாருக்கு? அம்மா முதல்வரா இருந்த போதே இலவச மின்சாரம், முதியோர் உதவித்தொகன்னு குடுத்தாங்க. உனக்கும் எனக்கும் ஏதாவது கடன் சுமை தெரிஞ்சுதா? இ.பி.எஸ் முதல்வரான பின் இத்தனை இலவசங்கள் குடுத்து வர்ராரே யாரையாவது கடன் பாக்கி குடுங்கன்னு கதவைத் தட்டுனாங்களா? கடன் சுமையாம்.. அதிகரிக்குமாம் நல்ல ஜோக். இதனால்தான் பொருளாதார நிபுணர்கள் நாடாள முடிவதில்லை.
Rate this:
Cancel
Kumaresan - Chennai,இந்தியா
10-மார்-202116:18:24 IST Report Abuse
Kumaresan 'எஸ்.சுவர்ணகாந்தி, கல்லுாரி பேராசிரியர், பொருளாதாரத்துறை' இவர் கூற்று போலத்தான் நடக்க வாய்ப்பிப்புள்ளதாக தெரிகிறது.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
10-மார்-202116:05:38 IST Report Abuse
Loganathaiyyan அன்பான பொருளாதார நிபுணர்களே உங்களுக்கு அறிவு மட்டு என்று இதன் மூலம் தெரிவிகின்றது. இலவசம் உ .ம் . ரூ 2000 பொங்கல் பரிசு அரசினால் . ரூ 2000 வாங்கினார்கள் உடனே டாஸ்மாக்க்கில் கியூவில் நின்று அந்த ரூ 2000 அங்கே கொடுத்தார்கள். இப்படிக்கொடுத்து அப்படி வாங்கிக்கொள்கின்றது இந்த டாஸ்மாக். ஆகவே கவலை வேண்டாம் ஒரு நாள் டாஸ்மாக் வருமானம் ரூ 110 கோடி என்றால் அன்று மட்டும் ரூ 300 கோடி வருமானம் தெரியுமா உங்களுக்கு. அதனால் தான் டாஸ்மாக் வருமானம் வருடத்திற்கு ரூ 43,000 கோடி சும்மா இல்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X