அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

Updated : மார் 10, 2021 | Added : மார் 10, 2021 | கருத்துகள் (104)
Share
Advertisement
திருப்பதி: தமிழகத்தில் தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
BJP, SubramanianSwamy, Tamilnadu, பாஜக, சுப்பிரமணியன் சுவாமி, தமிழகம்,

திருப்பதி: தமிழகத்தில் தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வதற்காக அதிமுக - பா.ஜ., ஆலோசனையில் ஈடுபட்டு முடிவு எடுத்துள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவந்த பா.ஜ., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமியிடம் தமிழகத்தில் பா.ஜ., வெற்றிபெறுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

தேசிய கட்சி மாநில கட்சியிடம் பிச்சை கேட்பதா


latest tamil newsஇது குறித்து அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பா.ஜ., 2 அல்லது 3 இடங்களில் வெல்லும். இல்லையெனில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும்,' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
11-மார்-202103:41:26 IST Report Abuse
Sridhar Swaminathan முதல் எதிரி திமுக. அவர்களை ஒழிக்க அதிமுகவின் உதவி தேவை. பின்பு அவர்களை காலி பண்ணுவது ஈசி. மகாபாரத காலத்தில் இருந்து உள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்தால் கட்சி துவண்டு விடும்.சு.சுவாமி நல்லவர். வல்லவரா?
Rate this:
Cancel
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
11-மார்-202101:32:17 IST Report Abuse
J. Vensuslaus தனித்து போட்டியிட்டால்தான் தமிழகத்தில் பிஜேபி வளரும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
11-மார்-202113:15:58 IST Report Abuse
Visu Iyerவளராமல் இருப்பது தானே நல்லது என்று சொல்றீங்களா....
Rate this:
Cancel
sam - Alaska,யூ.எஸ்.ஏ
11-மார்-202101:02:51 IST Report Abuse
sam After alliance with ADMK parties, BJP may get 1 or 2 seats, if they stand independently sure shoot .. no deposit.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X